சானியா என்றாலே சர்ச்சை தான் போலும்.அவரது சமீபத்திய திருமண அறிவுப்பும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷோயிப் மாலிக்கை மணக்க இருப்பது இந்தியர்களை அதிர்ச்சியிலும் அதே நேரத்தில் பாகிஸ்தானியர்களை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் என்பது சானியாவின் தனிப்பட்ட முடிவு,அவர் ஒரு பாகிஸ்தானியரை மணப்பதை ஏன் பெரிது படுத்த வேண்டும் என்பதை எத்தனை இந்தியர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை.
சானியா செய்தது சரியா தப்பா என்ற விவாதம் ஒரு புறம் இருக்கட்டும் மருமகள் சானியாவை வரவேற்க பாகிஸ்தான் உற்சாகமாக தயாராகி வருகிறது.அது மட்டும் அல்ல மருமகள் சானியாவுக்காக ஃபேஸ்புக்கில் ஒரு தனி பக்கமே உருவாக்கப்பட்டுள்ளது.
சமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக்கை பல விதங்களில் பயன்படுத்தலாம்.நிறுவனக்கள் த்ங்கள் தயாரிப்புக்கு விளம்பரம் தேட ஃபேஸ்புக்கில் பக்கம் அமைத்து செயல்படுகின்றன.அதே போல குறிப்பிட்ட பிரச்ச்னைக்காக ஆதரவு திரட்டவும் ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்படுவதுண்டு.
பாகிஸ்தானைச்சேர்ந்த இணையவாசிகள் சானியாவை தங்கள் நாட்டு மருமகளாக வரவேற்க ஒரு ஃபேஸ்புக பக்கத்தை அமைத்துள்ளனர்.அந்த பக்கத்தில், சானியா மருமகளே பாகிஸ்தானுக்கு நல்வரவு என குறிப்ப்டப்பட்டிருப்பதோடு அவரது திருமணம் தொடர்பான செய்திகளூக்கான இணைப்புகளூம் கொடுக்கப்பட்டுள்ளன.
பலர் சானியாவை வரவேற்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.சிலர் சானியா துபாயில் குடித்தனம் நடத்தப்போவது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.
எதிர்மறையான மற்றும் அவதூறான கருத்துக்களை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அநேகமாக உலக டென்னிஸ் நடசத்திரங்களிலேயே திருமணத்திற்காக ஃபேஸ்புக பக்கம் அமைக்கப்பட்டது சானியாவுக்காக தான் இருக்கும்.
இதில் உடன்பாடு இல்லாதவர்கள் போட்டிக்கு ஒரு ஃபேஸ்புக் பக்கம் அமைத்து போய்வா மகளே என்று சொல்லலாம்.இல்லை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தலாம்.
————

0 Comments on “சானியாவுக்கு ஃபேஸ்புக்கில் வரவேற்பு பக்கம்”
Lavanya
wish all the best for your bright future
Tech Sputter
sania should not marry shoaib malik he is a pakistani…………indian govt should nt allow this