இணையத்தில் செய்திகளை வாசிக்க யாஹுவும் கூகுல் நியூசும் சிறந்த வழிகள் தான்.ஆனால் எத்தனை நாளுக்கு தான் ஒரே மாதிரி செய்திகளை வாசித்துக்கொண்டிருப்பது.
தனித்தனி தலைப்புகளின் கீழ் வரிசையாக கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை கிளிக் செய்து படிப்பது அலுப்பூட்டுகிறது என நினைக்கிறீர்களா?
ஆம் ஆனால் செய்திகளை படிக்க வேறு என்ன வழி இருக்கிறது என நீங்கள் நினைத்தால் உண்மையிலேயே அழகான மாற்று வழி இருக்கிறது.மிகவும் சுவாரயமான வழி.
செய்திகளை காட்சிரீதியாக காணும் வழி.உடனே வீடியோவை நினைத்துக்கொள்ள வேண்டாம்.இது செய்திகளை திரட்டித்தருவதை காட்சிரீதியாக வழங்குவது.அதாவது செய்திகளை வழக்கமான முறையில் பட்டியலிடாமல் செய்தி வரைபடமாக தோன்றச்செய்வது.
நியூஸ்மேப் இணையசேவை இப்படி செய்திகளை வரைபடமாக தருகிறது.இந்த தளத்தில் நுழைந்தவுடன் வண்ண வண்ண கட்டங்களாக முகப்பு பக்கம் முழுவதும் ஒரே கட்டங்களாக இருக்கும். கொஞசம் கவனித்து பார்த்தீர்கள் என்றால் எல்லா கட்டங்களூமே செய்திகள் என்பது புரியும். குறிப்பிட்ட கட்ட்த்திற்கு அருகே மவுசை கொண்டு சென்றால் அந்த செய்திக்கான அறீமுக குறிப்பு மற்றும் இணைப்பு தோன்றும்.
எந்த கட்டம் தேவையோ அதை கிளிக் செய்து செய்தியை வாசிக்கலாம். அதன் பிறகு மறுபடியும் கட்டம் கட்டமாக தாவலாம்.பிரபல செய்திகள் பெரிய கட்டமாக கொட்டை எழுத்துக்களீல் தோன்றும்.
உலகம்,தொழில்நுடபம்,விளயாட்டு என பலவேறு பிரிவுகள் உண்டு.
ப்வித்தியாசத்தை விரும்புகிறவர்களும் எதையும் காட்சிரீதியாக எதிர் பார்ப்பவர்களூம் நிச்சயம் ரசிப்பார்கள்.
அதோடு மாமுலான செய்தி தளாங்கள் மற்றும் திரட்டிகளை பார்த்து கடுப்பானவர்கள் இதனை வரவேற்பார்கள்.
————

0 Comments on “செய்திகளை வாசிக்க மாறுபட்ட இணையதளம்”
IQBAL SELVAN
செய்திகளைக் காண மிகவும் அருமையான தளம் இது, தமிழிலும் இத்தகு முயற்சிகள் உண்டு அண்மையில் நான் கண்ட மிகச்சிறந்த செய்தி தளம், ஒரு மாறுபட்ட வடிவைமிப்பில் வந்துள்ளது இத்தளம்,
ஆங்கிலத்தில் ஏற்கனவே இருக்கும் popurls.com போன்றே தமிழில் http://www.thakaval.info வந்துள்ள இத்தளம் என்னை கவர்ந்துள்ளது. உங்களின் கருத்து என்ன ஐயா ?
bala
good website — thanks for ur suggestion to choose news readers…