மேலும் விவரங்களுக்கு ஒரு இணைய‌தளம்

உங்கள் அபிமான செய்தி தளங்கள் எவையாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! அவற்றில் நீங்கள் தேர்வு செய்யும் செய்திகளை வாசித்த பிறகு அந்த செய்தி தொடர்பான கூடுதல் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், நீங்கள் செல்ல வேண்டிய இணையசேவை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது தெரியுமா?

.
“டெல் மீ மோர்’  இதுதான் அந்த இணைய சேவையின் பெயர். மேலும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று பொருள் படும் இந்த தளம் உண்மையிலேயே அதைத்தான் செய்கிறது.குறிப்பிட்ட செய்தியில் விடுபட்டு போன விவரங்கள் (அ) அந்த செய்தி தொடர்பான கூடுதல் தகவல்களை இந்த தளம் தேடித் தருகிறது.

அந்த வகையில் வேறு எந்த செய்தி தளமும் வழங்காத விவரங்களை டெல் மீ போர் அளிக்கிறது.செய்தி பசி கொண்டவர்கள் அதிலும் செய்திகளின் பின்னணியில் ஆர்வம்  கொண்டவர்கள் இந்த தளத்தின் முக்கியத்துவத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம். காரணம் எந்த ஒரு செய்தியுமே முழுமையானது அல்ல. இடம் மற்றும் நேர நெருக்கடி காரணமாக செய்திகளில் சொல்லப்படாமல் விடப்படும் தகவல்கள் அநேகம். அவற்றில் சில மிக முக்கியமானதாகவும் இருக்கலாம். சில நேரங்களில் சில பத்திரிகைகள் தெரிந்தே சில தகவல்களை சேர்க்காமல் தவிர்க்கலாம். இவை கொள்கை சார்ந்தும் அமையலாம். உள்நோக்கம் கொண்டவையாகவும் இருக்கலாம்.
எது எப்படியோ விடுபட்ட (அ) சொல்லப் படாத தகவல்கள் எப்போதும் உண்டு.

சராசரி வாசகர்கள் (அ) தலைப்புகளை பார்த்தே செய்திகளை தெரிந்துகொண்டு விட்டதாக நினைப்பவர்கள் இது பத்தியெல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் எதிலும் அடி ஆழம் வரை தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் சொல்லப்படாத விவரங்களை அறிய விரும்புவார்கள். அதிலும் சர்ச்சைக்குரிய  (அ) முக்கியமான செய்தி என்றால் மேலும் விவரங்கள் எங்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உண்டாவது இயல்புதான்.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தான் டெல் மீ மோர் இணையதளம்.நுனிப்புல் மேயாமல் கொஞ்சம் நிதானமாக கருத்தூன்றி செய்திகளை படிப்பவர்களுக்கு உதவுவதற்காக என்றே செய்தி தளங்களில் கூடுதல் அம்சங்கள் இல்லாமல் இல்லை.

ஒரு சில செய்தி தளங்கள் முக்கியமான செய்தியின் பின்னணி விவரங்களை தனியே தருகின்றன. இன்னும்  சில தளங்கள் தொடர்புடைய செய்திகளையும் சேர்த்தே தருகின்றன. கூகுல் நியூஸ் போன்ற செய்தி திரட்டிகள்,  ஒவ்வொரு செய்தியோடும் தொடர்புடைய செய்திகளை பல்வேறு இடங்களில் இருந்து திரட்டி சலித்து போகும் அளவுக்கு பட்டியலிட்டு தருகின்றன.

இந்த பட்டியலைப் பார்த்து தெரிந்துகொள்ள முடியாததையா “டெல் மீ மோர்’ தந்து விடப்போகிறது என கேட்கத் தோன்றலாம்.
தொடர்புடைய செய்திகள் சேவையை தாண்டி செய்திகளுக்கான கூடுதல் விவரங்களை தருவதாகவே “டெல் மீ மோர்’ உறுதி அளிக்கிறது. அதாவது தொடர்புடைய செய்திகளில் சிக்காத தகவல்களை கண்டுபிடித்து தருவதாக பெருமிதம் கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள் சேவை பயனுள்ளதுதான். கூடுதல் தகவல்களை அளிக்க கூடியது தான். ஆனால் அவற்றில் உள்ள பிரச்சனை என்னவென்றால் பெரும்பாலும் அவை ஒரே செய்தியின் வெவ்வேறு கோணங்களாகவே இருக்கும். அதாவது ஒரு செய்தியில் காணப்படும் விவரங்களே மற்றவற்றிலும் வேறு பாணியில் இடம் பெற்றிருக்கும். அவற்றின் நடுவே புதிய தகவல்களை தேடி கண்டு பிடிப்பதற்கு முன்பாக ஒரே செய்தியை பலமுறை படித்த அலுப்பு உண்டாகிவிடும். அந்த அலுப்போடு ஒரே செய்தியை வெவ்வேறு வடிவில் படிக்கும் குழப்பமும் சேர்ந்து கொள்ளும்.

“டெல் மீ மோர்’ இப்படி அலுப்பூட்டாமல் குழப்பம் தராமல் நெத்தியடி போல கூடுதல் தகவல்களை மட்டுமே முன் வைக்கிறது.எந்த செய்தியை பற்றி மேலும் விவரங்கள் தேவையோ அந்த செய்தியை இந்த தளத்தில் சமர்ப்பித்து கூடுதல் தகவல்கள் சீசே என கட்டளையிட்டு  காத்திருந்தால், இதன் பின்னே உள்ள சாப்ட்வேர் தொடர்புடைய செய்திகளை அலசி ஆராய்ந்து சமர்ப்பித்த செய்தியில் உள்ளது போன்ற தகவல்களை எல்லாம் ஒதுக்கி விட்டு இல்லாத புதிய தகவல்களை மட்டுமே தேடித் தருகிறது.

செய்தி தொகுப்புகளும் செய்தி இணைப்புகளுமே இன்டெர்நெட்டின் மிகப்பெரிய பலமாக இருக்கும் நிலையில் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய கூடுதல் தகவல் முத்துக்களை “டெல் மீ மோர்’ தேடித் தருகிறது.

அமெரிக்காவின் நார்த்வெஸ்ட் ப‌ல‌க‌லையைச்சேர்ந்த‌ இன்போ என்ட‌ர்டெயின்மென்ட் லாப் இந்த‌ சேவையை உருவாக்கியுள்ள‌து.

————

http://infolab.northwestern.edu/projects/tell-me-more/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மேலும் விவரங்களுக்கு ஒரு இணைய‌தளம்

  1. madukkuran

    தகவல் விரும்பிகளுக்கு ஏற்ற தளம்.பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நண்பரே

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *