இண்டெர்நெட் யுகத்தில் நாளிதழ்களை படிக்க யாருக்கு நேரம் இருக்கிறது என்று கேட்க தோன்றலாம்.அதிலும் உடனடி செய்திகளை டிவிட்டர் பதிவுகளாக படித்து விடலாம் என்னும் போது நாளிதழ்கள் தங்கள் முக்கியத்துவத்தை தக்க வைத்துக்கொள்ள தடுமாற தான் வேண்டியிருக்ககிறது.
ட்விட்டரில் செய்திகளை படிப்பதும் எளிது பகிர்ந்து கொள்வதும் எளிது.எனவே டிவிட்டர் மிகவும் பிரபலாமாக இருக்கிறது.
டிவிட்டர் நாளிதழ்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பது ஒரு புறம் இருக்க டிவிட்டரையே நாளிதழ் வடிவில் படிக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை என்னவென்று சொல்ல?
ஆம் டிவிட்டர் பதிவுகளை நாளிதழ் வடிவில் படிக்கும் வசதியை வழங்கும் புதிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது.
பேப்ர்.லி என்னும் அந்த இணைய சேவை டிவிட்டர் பதிவுகளை நாளிதழ் வடிவில் படிக்க வழி செய்கிறது.
டிவிட்டரின் அணுகூலங்களை மீறி அதில் சில அசொளகர்யங்கள் உண்டு.டிவிட்டர் ஓடை என்று சொல்லப்படும் பதிவுகளின் சீறான தொடர்ச்சியை தொடர்ந்தும் படிப்பது சுலபம் அல்ல;அதிலும் புதிய புதிய பதிவுகள் சேர்ந்து கொண்டே இருக்கும் போது குழப்பம் ஏற்படலாம்.
பழைய பதிவுகள் எவை புதியவை எவை அவற்றில் முக்கியமானவை எவை என்று பகுப்பது சிக்கலாக இருக்கலாம். எப்போதும் டிவிட்டரிலேயே அமர்ந்திருந்தால தான் இது சாத்தியம் .இல்லை என்றால் டிவிட்டர் பதிவோடையில் எண்ணற்ற பதிவுகள் குவிந்து கிடக்கும்.
இதற்கான எளிமையான தீர்வாக பேப்பர்.லீ அமைந்துள்ளது. இந்த சேவை டிவிட்டர் பதிவுகளை இணைய நாளிதழ் வடிவில் மாற்றித்தருகிறது.வடிவில் மட்டுமல்ல பதிப்பிலும் நாளிதழ் தான்.அதாவது தினமும் ஒரு முறை டிவிட்டர் பதிவுகளை சேகரித்து தருகிறது.பிறகு மறு நாள் புதிய பதிவுகளை படிக்கலாம்.
தினமும் காலையில் நாளிதழை படிப்பது போல டிவிட்டர் நாளிதழை படித்து விடலாம்.நாளிதழின் முன்னணி செய்திகளைப்போல் அதிக ரீடிவீட் பெற்ற செய்திகள் முதலில் இடம் பெற்றிருக்கும்.
டிவிட்டர் செய்திகளை பின்தொடர சுவையான வழி தான்.
நாமும் இதில் டிவிட்டர் நாளிதழை உருவாக்கி கொள்வது மிகவும் சுலபம்.ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நாளிதழ்களையும் படித்துப்பார்க்கலாம்.நாளிதழ்கள் பல்வேறு தலைப்புகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளதால் இது மிகவும் சுலபம்.
பாருங்கள் இண்டெர்நெட்டின் செல்வாக்கால் நாளிதழ்கள் கடும் சோதனைக்கு ஆளாகி கொண்டிருக்கும் நேரத்தில் டிவிட்டர் போன்ற சேவையை பயனுள்ளதாக்க நாளிதழ் வடிவம் தேவைப்படுகிறது.
ஒரு வேளை இரண்டும் இணைந்து செயல்படுவதில் தான் எதிர்காலம் இருக்கிறதோ?
நிற்க இதே போன்ற மற்றொரு புதுமையான சேவையும் இருக்கிறது.ஃபீட்லி என்னும் அந்த சேவை இணையதளாங்களில் உள்ள தகவல்களை பத்திரிக்கை வடிவில் படிக்க உதவுகிறது.
இதில் உங்கள் அபிமான இணையதளங்களை சமர்பித்து விட்டால் ஒரு பத்திரிக்கையை படிப்பது போல படிக்க முடியும்.
இண்டெர்நெட்டின் அணுகூலத்தை ஏற்கனவே பரிட்சியமான வடிவில் பெறுவதற்கான வழி செய்வதே இந்த சேவைகளின் சிறப்பம்சம்.
—————
————
———

0 Comments on “டிவிட்டர் நாளிதழ் படிக்கலாமா?”
SRINIVASANPGM
Nice welcome