இந்தியர்களை இணைய சோம்பேறிகள் என்று சொல்லலாம்.இப்படி சொல்வதால் இணையவாசிகள் கோபித்துக்கொள்ளக்கூடாது.
இணைய சோம்பேரிகள் என்று இணையவாசிகளை குறிப்பிடவில்லை.மாறாக வர்த்தக நிறுவனங்கள் ,அரசு அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளை நிர்வகிப்பவர்களை இணைய சோம்பேறிகள் என்று குறிப்பிடுகிறேன்.
காரணம் இண்டெர்நெட் தொடர்பானவற்றில் அவர்கள் போதுமான அக்கரையும் காட்டுவதில்லை;சுறுசுறுப்பாக செயல்படுவதும் இல்லை.இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை அவர்களில் பலர் உணர்ந்துள்ளனரா என்பதே கூட சந்தேகமே.
இது அபாண்டமான புகார் என்று தோன்றலாம்.அப்படியில்லை.
அரசு அமைப்புகளும் வர்த்தக நிறுவனங்களும் இண்டெர்நெட்டின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பதால் தானே தங்களுக்கென இணைய வீடுகளை வலை மனையாக உருவாக்கி கொன்டிருக்கின்றன என்று நீங்கள் நினைக்கலாம்.
உண்மை தான் பெரும்பாலான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இணையதளம் வைத்திருக்கின்றன.ஆனால் அவை எந்த நிலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன?ஏதோ பெயருக்கு தான் இணையதளங்கள் உருவாக்கப்பட்டிருக்குமே தவிர அவற்றில் விவரங்கள் வெளியிடப்படுவதில் போதிய சுறுசுறுப்பு இருக்காது.தகவல்களூம் அடிக்கடி புதுபிக்கப்பட்டிருக்காது.
பெரும்பாலும் பழைய தகவல்களே கண்சிமிட்டிக்கொண்டு இருக்கும்.பல தளங்களில் அவை உருவாக்கப்பட்ட போது இடம் பெற்ற தகவல்களே காலாகாலத்திற்கும் பளிச்சிடும்.
வர்த்தக நிறுவனக்களாவது பரவாயில்லை அரசு அமைப்புகளின் தளங்களை பொருத்தவரை என்றோ பதிவான தகவல்கள் தான் என்றென்றும் இடம் பெறும் நிலை.
இண்டெர்நெட்டின் ஆதார பலமே உடனுக்குடன் புதுப்பிப்பது என்பதை பலரும் உணர்ந்தததாக தெரியவில்லை.அரசு தளங்களில் இதற்கு ஆயிரம் உதாரணங்களை சொல்ல முடியும்.
நிற்க அடிக்கடி புதுப்பிப்பதை கூட விட்டுத்தள்ளுங்கள் முக்கியமான நிகழ்வு நடைபெற்றிருக்கும் நிலையில் கூட அந்த தகவல் இணையதளத்தில் இடம் பெற்றிருக்காது.உதாரனத்திற்கு பழைய அதிகாரி மாற்றப்பட்டு புதியவர் நியமிக்கப்பட்டிருப்பார்.இணையதளத்தில் பழைய அதிகாரி பற்றிய விவரமே தொடரும். இது அபத்தம் இல்லையா?
இதைவிட அபத்தம் இந்தியாவையே பரபரப்பாக்கியிருக்கும் ஐபிஎல் விவகாரத்தில் லலீத் மோடி பதவையை விட்டு நீக்கப்பட்ட நிலையிலும் அவர் தலைவாராக இருப்பதாக இதன் அதிகாரபூர்வ இணையதளம் தெரிவிப்பது தான்.
மோடி மீதான புகார்களும் அதனை தொடர்ந்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையும் நாடே அறிந்தது தான்.ஐபிஎல் இறுத்திப்போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த் நிலையிலேயே மோடி நீக்கப்பட்டு விட்டார்.அவரது இடத்தில் இடைக்கால த்லைவரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் ஐபிஎல்20 இணையதளத்தில் அந்த அமைப்பின் அறிமுக பக்கத்தில் தலைவர் என்று மோடியே குறிப்பிடப்பட்டுள்ளார்.அதாவது இணையதளத்தில் அவர் இன்னும் பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.அது மட்டும் அல்ல அவரது புகழ்பாடும் அறிமுக குறிப்பும் அப்படியே இருக்கிறது.
லலித் மோடி உலகிலேயே மிகவும் திறமை வாய்ந்த கிரிக்கெட் நிர்வாகி என துவங்கும் அந்த குறிப்பு மோடியின் சாதனை ஐபிஎல் என்று வர்ணிக்கிறது.
இது என்ன பெரிய விஷயமா என்று கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.ஒரு தகவலை அதுவும் மோடி நீக்கம் போன்ற முக்கிய தகவலை உடனடியாக இடம்பெறச்செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதையே இது காட்டுகிறது. பொதுவாகவே இணையதளத்தில் தகவல்களை சேர்ப்பதில் உள்ள சோம்பல் அல்லது அலட்சியத்தின் அடையாளமாக இதனை கருதலாம்.
ஒரு முக்கிய நிகழ்வு நடைபெறும் போது சம்பந்தப்பட்ட இணையதளத்தில் அந்த தகவல் புதியது என்னும் அடையாளத்தோடு உடனடியாக மின்னும் மற்ற நாடுகளின் நிலையோடு இதனை ஒப்பிட்டு பாருங்கள்.அதோடு உடனுக்குடன் முடிவுகளை வெளியிடும் விம்பிள்டன் போன்ற தளங்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.
சரி மோடியை விட்டுத்தள்ளுங்கள் பொது மக்களுக்கு பயன் தரக்கூடிய அல்லது பாதிப்பை ஏற்படுத்தக்கூஇட்ய விவரம் இப்படி புதுப்பிக்கப்படாமல் இருந்தால் என்ன ஆகும் என்று யோசித்துப்பாருங்கள்?
___
இந்த செய்தியை நான் ஜீ நியூஸ் இணையத்ளத்தில் படித்த சில மணி நேரங்கள் கழித்தும் கூட தளத்தில் தகவல் புதுப்பிக்கப்படவில்லை.இப்போது மாறியிருக்கலாம். அல்லது இன்னும் கூட மாறாமல் இருக்கலாம்.எப்படியோ இந்திய இணைய அக்கறை இப்படி தான் உள்ளது.
————