இப்போது நாம் பார்க்கப்போகும் இணையதளம் கொஞ்சம் விநோதமானது.ஆனால் சுவாரஸ்யமானது.இந்த தளத்தை பயன் தரும் என்றும் சொல்ல முடியாது.இருப்பினும் தினம்தோறும் விஜயம் செய்யத்தூண்டும் தளம்.
டெய்லிகிரேப் என்பது அந்த தளத்தின் பெயர்.
இந்த தளத்தை உருவாக்கியவர் விளையாட்டாகவே அதனை அமைத்திருக்கிறார்.மற்றவர்கள் விளையாடி மகிழ அமைத்திருக்கிறார்.அது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.விளையாட்டு என்றவுடன் வீடியோ கேம் விளையாட்டு என நினைத்து விட வேண்டாம்.முகப்பு பக்கத்துடனேயே விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் தளம் இது.
ஆம் இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் நீங்கள் விளையாடலாம்.அதாவது இதன் முகப்பு பக்கத்தை நீங்களே வடிவமைக்கலாம்.முகப்பு பக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதே போல வடிவமைத்து அதில் இஷடம் போல புகைப்படம் மற்றும் தகவல்களை இடம்பெற வைக்கலாம்.
இப்படி தினந்தோறும் யாராவது ஒருவர் இதன் முகப்பு பக்கத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.அதற்காக தான் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
யார் வேண்டுமானாலும் வடிவமைக்கலாம் என்றாலும் சில நிபந்தனைகள் உள்ளன். 13 வயதுக்கு மேல் இருக்க வேண்டுமாம்.முகப்பு பக்கத்தில் ஆபாசமாக்வோ காப்புரிமை மீறலாகவோ எதுவும் இருக்க கூடாதாம்.
முகப்பு பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறவர்கள் முன்கூட்டியே அதற்காக முனபதிவு செய்து கொள்ள வேண்டும்.அதற்கு முன்பாக யார் எல்லாம் முன்பதிவு செய்துள்ளனர் என்று பார்த்து எந்த கிழமை முன்பதிவு செய்யாமல் இருக்கீறது என தெரிந்து கொள்ளலாம்.
அப்படியே இதுவரை யார் எல்லாம் முகப்பு பக்கத்தை மாற்றியுள்ளனர் என பார்க்கலாம்.இப்போது தான் துவங்கப்பட்டுள்ளதால் ஒரே ஒரு முகப்பு பக்கம் மட்டுமே உள்ளது. வரும் நாட்களீல் முகப்பு பக்கங்கள் அதிகம் இடம் பெறலாம்.அப்போது இன்றென்ன முகப்பு பக்கம் வந்திருக்கீறது என தெரிந்து கொள்ளும் ஆர்வமும் ஏற்படலாம்.
வடிவமைக்க தெரிந்தவர்கள் விளையாடி பார்த்து விடலாம்.மற்றவர்கள் தினமும் ஏற்படும் மாற்றத்தை பார்த்து ரசிக்கலாம்.
இந்த தளத்தை உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை.ஸ்லாத்டாஸ் என்று மட்டுமே அவரைப்பற்றி குறிபிடப்பட்டுள்ளது. இணணய விளையாட்டு போன்ரவற்றை உருவாக்கிய அவரது முதல் முழு இணையதளம் இது தானாம்.இந்த முயற்சியில் இணைய வடிவமைப்பு தொடர்பான பல விஷயஙங்களை கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தளத்தை உருவாக்கிய நோக்கம் பற்றி தெளிவாக கூறிப்பிடவில்லை.இணைய வடிவமிப்பில் பயிற்சி அளீப்பதாக கூட இருக்கலாம். இல்லை அப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
முகப்பு பக்கத்தை மற்றவர்கள் மதிப்பிடவும் கருத்து சொல்லவும் வழி இருப்பதால் வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு வர்த்தக நோக்கமும் இருக்கலாம். ஒவ்வொரு நாளும் விளம்பரம் செய்ய ஸ்பான்சாராகலாம் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அப்படியெ இருந்தாலும் சுவாரஸ்யமான தளம் தான்.
———–

0 Comments on “தினம் தினம் ஒரு முகப்பு பக்கம்”
infopediaonlinehere
ethu mikavum suvarasyamana seithi
butterfly Surya
பகிர்விற்கு நன்றி சிம்மன்.