உத்திர பிரதேச சுற்றுலா துறைக்கு ஒரு சபாஷ் போடுங்கள்.காதலின் அழியா சின்னமான தாஜ்மகாலுக்கு அந்த மாநில சுற்றுலாத்துறை ஒரு இணைய வீட்டை அமைத்து தந்துள்ளது. ஆம் உலகம் முழுவதும் உள்ள காதல் நெஞ்சங்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த தாஜ்மாகாலுக்கு என தனியே இணையதளம் ஒன்றை சுற்றுலாத்துறை உருவாக்கியுள்ளது.
எத்தனையோ சிறப்புகளை கொண்ட தாஜ்மாகால் இதன் மூலம் தனக்கென தனி இணைய வீட்டை கொண்ட நினைவு சின்னம் என்னும் பெருமையையும் பெற்றுள்ளது.
தாஜ்மகாலுக்கு இணையத்தில் ஏற்கனவே வீடுகள் இல்லாமல் இல்லை.தாஜ்மாகால்டாட்காம் ,தாஜ்மாகால்டாட்நெட்,தாஜ்மாகால்டாட்ஆர்ஜி ஆகிய முகவரிகளில் தாஜ்மகாலுக்காக இணையதளங்கள் அமைக்கபப்டுள்ளன.இவற்றின் உள்ளடக்கம் அத்தனை சிறப்பாக இல்லை என்பது ஒரு புறம் இருக்க தற்போது உத்திர பிரதேச சுற்றுலாத்துறையால் அமைக்கப்பட்டுள்ள இணையதளம் அதன் அதிகார பூர்வ இணையதளம் ஆகும்.
அந்த வகையில் இந்தியாவில் நினைவு சின்னம் ஒன்றுக்கு உருவாக்கப்பட்ட முதல் இணையதளமாக இதனை கருதலாம். முன்னோடு தளமாகவும் கொள்ளலாம்.
தாஜ்மாகால் பற்றி என்ன விவரம் வேண்டும் அது அத்தனையும் இந்த தளத்தில் இருக்கிறது.தாஜ்மகால் தொடர்பான அழகான புகைப்படங்கள்(தாஜ்மகால் தொடர்பான எது தான் அழகாக இருக்காது?),வீடியோ காட்சிகள் நிறைந்த இந்த தளம் தாஜ்மாகாலை காண நினைப்பவர்களுக்கு தேவையான மற்றும் பயன் தரக்கூடிய விவரங்களை தொகுத்தளிக்கிறது.
தாஜ்மகாலுக்கு வருவது எப்படி,அங்கே சுற்றி பார்ப்பது எங்கனம்,எங்கே தங்கலாம் ,வழிகாட்டியை வைத்துக்கொள்வது எப்படி போன்ற தகவல்கள் வரிசையாக வலப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.தாஜ்மகாலில் செய்யக்கூடாதவை பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
தாஜ்மகால் பற்றி யாருக்கு தான் தெரியாது.இருந்தாலும் இந்த அழியா சின்னம் பற்றிய சம்பிரதயமான அறிமுகமும் இடம்பெற்றுள்ளது.சும்ம சொல்லக்கூடாது ஷாஜகான் கதையில் ஆரம்பித்து மிகவும் விரிவாகவே உள்ளது.அதன் பக்கத்திலேயே தாஜ்மாகாலின் தோற்றப்பொலிவுகள் காட்சிகளாக கவர்ந்திழுக்கின்றன.
லார்டு கர்சன் போன்ற பிரபலங்கள் உட்பட தாஜ் எழிலை கண்டு சொக்கிப்போனவர்களின் கருத்துக்களும் பதிவாகியுள்ளது.
இந்த தளம் தாஜ்மகாலை நேசிக்கும் எல்லோருக்குமானது என்றாலும் வெளிநாட்டு பயனிகளை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக கொள்ளலாம்.அதில் தவறேதும் இல்லை.
இந்தியாவுக்கு அதிக சுற்றுலா பயனிகளை கொண்டுவரும் சிறப்பை பெற்றிருக்கும் தாஜ்மகாலுக்கு வருகை தர விரும்பும் ஒவ்வொருக்கும் தேவையான தகவல்களை ஒரே இடத்தில் வழங்குவதற்காக இந்த தளத்தை உருவாக்கியுள்ளதாக சுற்றுலாத்துறை இயக்குனர் அவினாஷ் அஸ்வதி கூறியுள்ளார்.
அதற்கேற்பவே தளம் அமைந்துள்ளது.தாஜ்ஜின் இருப்பிடமான ஆக்ராவின் வெப்ப நிலை விவரங்களும் தரப்பட்டுள்ளது.ஒரு முன்னோட்டமாக பார்த்து ரசிப்பதற்காக கூகுல் வரைபட சேவை மூலம் தாஜ்மாகாலை கண்டு ரசிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேல் இந்த இணையதளத்திற்கான அறிமுக கட்டுரை தான் அற்புதமாக உள்ளது.
தாஜ்மாகாலுக்கு மீண்டும் ஒரு முறை வருகை தர உங்களுக்கு தகுதி இருக்கிறது என துவங்கும் இந்த கட்டுரை அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் தான் உள்ளது என்னும் வாசகத்தை பொய்யாக்கும் வகையில் தாஜ்மகால் அழகின் உரைவிடமாக இருப்பதாக தெரிவிக்கிறது.உங்கள் வருகைக்கு தாஜ்மகாலும் முழு தகுதி உடையது என முடியும் இந்த கட்டுரை ஏகாந்த பெருமிதத்தோடு வாருங்கள் என அழைப்பு விடுக்கிறது.
முகப்பு பக்கத்திம் மேல் பாதி முழுவதும் கம்பீரமாக காட்சி தரும் தாஜ்மகால் வரவேற்கும் இந்த தளத்தில் இணைய பார்வையாளர்கள் கருத்து தெரிவிப்பதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நினைவு சின்னத்துக்கும் இப்படி ஒரு இணைய வீடு தேவைதான்.
————

0 Comments on “தாஜ்மகாலுக்கு ஒரு இணையதளம்”
Pingback: Tweets that mention தாஜ்மகாலுக்கு ஒரு இணையதளம் « Cybersimman's Blog -- Topsy.com
தமிழில் தகவல் தொழில் நுட்பம்
மிகவும் அருமையான பதிவு
keep posting…
cybersimman
thank u my friend
Sriram
Good post. Thanks for sharing.
Pls. visit my blog also and provide your valuable comments.
-Sriram
http://sriramsrinivasan.net
najera
mikavum paaratta thakka arbuthamaana seevai