யூடியூப்பை கலக்கி கொண்டிருக்கும் கடல் ஆமை எடுத்த வீடியோ காட்சி தொடர்பான செய்தியை நீங்கள் படித்திருக்கலாம்.இந்த செய்திக்கு பின்னே மிகவும் சுவாஸ்யாமான கதை ஒன்று இருக்கிறது தெரியுமா?.
ஆழ்கடலில் தொலைந்த காமிரா ஒன்று ஆறுமாதம் மற்றும் ஆயிரம் கீலோ மீட்டர் இடைவெளிக்கு பிறகு அதன் உரிமையாளருக்கு கிடைத்த கதை.அதோடு மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்த்தும் கதையும் கூட.இண்டெர்நெட் தேடலின் எல்லையை எப்படி விரிவடைய செய்துள்ளது என்பதற்கான உதாரணமும் கூட.
டென்மார்க் நாட்டை சேர்ந்த கடற்படை வீரரான டிக் டீ புரூயின் என்பவருக்கு சொந்தமான காமிரா அது.கடந்த நவம்பர் மாதம் அதனை அவர் தவறவிட்டிருக்கிறார்.ஸ்குபா டைவிங்கிலும் ஆர்வம் கொண்ட புருயின் நெதர்லாந்து நாட்டுக்கு சொந்தமான அருபா என்னும் தீவுக்கு அருகே மூழிகிப்போன் பழைய கப்பலில் ஆய்வு செய்து கொண்டிருந்த போது காமிராவை தொலைத்துவிட்டார்.
கடலில் தொலைந்த காமிரா என்பது கிட்டத்தட்ட கடலில் கரைத்த பெருங்காயம் போலத்தானே.
புரியினும் அப்படிதான் நினைத்து காமிராவை மறந்து விட்டார்.
ஆனால் அது அதிர்ஷடம் செய்த காமிரா போலும்.அல்லது புருயின் அதிர்ஷடம் செய்தவர் போலும்.காரணம் அருபா அருகே தொலைந்த அந்த காமிராவின் கதை அங்கேயே முடிந்துவிடவில்லை. கடலிலேயே பயணம் செய்து ஆறு மாதத்திற்கு பிறகு அமெரிக்காவின் புலோரிட கடல் பகுதியை அடைந்திருக்கிறது.அங்கே அந்நாட்டின் கடலோர காவல் படையை சேர்ந்த பால் ஷுட்ஸ் என்பவர் அந்த காமிராவை கண்டெடுத்தார்.
ஷுட்ஸ் ரொம்பவும் நல்லவர் என்று வைத்து கொள்ளுங்களேன்.அவர் அந்த காமிராவை உரியவரிடம் ஒப்படைக்க விரும்பினார்.
ஆனால் சோதனையாக பாருங்கள் அந்த காமிரா யாருடையது என்பதை தெரிந்து கொள்ள அதில் எந்த அடையாளமும் இல்லை.அது யாரால் தவறவிடப்பட்டது என்பது தெரியாமல் இருந்ததோடு எங்கே தவறவிடப்பட்டது என்பதும் ஷுட்சுக்கு தெரியவிலை.
யாருடையது என்றே தெரியாத நிலையில் உரியவரை கண்டுபிடித்து காமிராவை ஒப்படைப்பது எங்கனம் சாத்தியம்?இது போன்ற சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்.முயற்சியை கைவிட்டு விடுவோம்.
ஷுட்ஸ் அப்படி செய்யவில்லை.எப்படியாவது அதன் உரிமையாளரை கண்டுபிடிக்க தீர்மானித்தார்.அந்த எண்ணத்தோடு காமிரவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தார்.அதிலும் பெரிதாக உதவக்கூடிய எந்த காட்சிகலும் இருக்கவில்லை.
இருந்தாலும் ஷுட்ஸ் மனம் தளரவில்லை. இண்டெர்நெட்டின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்து.இண்டெர்நெட்டில் குறிப்பிட்ட ஆர்வம் கொண்டவர்கள் தங்களூக்குள் குழு அமைத்து கருத்துக்களை பாரிமாறிக்கொள்வதில் ஈடுபட்டிருப்பதையும் அவர் அறிவார். இணைய சமூகம் என்று சொல்லப்படும் இத்தகைய குழுக்களில் பல மிகவும் நெருக்கமானதகவும் தீவிரமானதாகவும் இருபதுண்டு.
ஸ்கூபா டைவிங்கில் இடுபடுபவர்களூக்காக இத்தகைய ஒரு சமுகம் ஸ்கூபாபோர்ட் என்னும் பெயரில் இருக்கிறது.ஷுட்ஸ் அந்த தளத்திற்கு சென்று த்னக்கு கிடைத்த காமிரா பற்றி குறிப்பிட்டு அதில் இருந்த படங்களையும் பதிவேற்றி காமிரா உரிமையாளர் குறித்த ஏதாவது தகவல் அல்லது துப்பு கிடைக்குமா?என் கேட்டிருந்தார்.
குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தில் விமானம் ஒன்று பதிவாகியிருந்தது.அதன் சின்னத்தை வைத்து படத்தில் இருந்த இடம் அருபா தீவு என ஒரு உறுபினர் தெரிவித்தார். ஆக காமிரா தவறவிடப்பட்ட இடம் அருபா தீவு என தெரிய வந்தது.
அடுத்தாக அவர் மேலும் சில படங்களை அருபா தொடர்பான் செய்தி தளம் மற்றும் பயண தளத்தில் வெளீயிட்டு தகவல்களை கேட்டிருந்தார்.சில நாட்கள் கழித்து பெண்மணி ஒருவர் அந்த படங்களில் ஒன்றில் உள்ள பிள்ளைகளை தன்க்கு தெரியும் என்றும் அவர்கள் தன் மகனின் பள்ளி தோழர்கள் என்றும் கூறியிருந்தார்.
இதனையடுத்து அந்த பெண்மணி குறிப்பிட்ட டி புருயினை தொடர்பு கொண்டு காமிரா பற்றி தெரிவித்தார். அவர்க்கோ தாங்க முடியாத ஆச்சர்யம்.எங்கே தொலைந்தது என்றே தெரியாத காமிரா இத்தனை நாள் கழித்து அமெரிக்காவில் இருந்து தனக்கு கிடைக்க இருப்பதை நினைத்து நெகிழ்ந்து போனார்.
இது ஒரு அபூர்வ சம்பவம் தான். விதிவிலக்காக கூட இருக்கலாம்.ஆனால் தொலைந்து போனவற்றை அல்லது தொலைந்து போனவர்களை தேடுவதில் இண்டெர்நெட் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கான இன்னொரு உதாரணமாக இதனை கருதலாம்.
இதில் கிளைக்கதை ஒன்றும் இருக்கிறது.அது தான் கடல் ஆமை எடுத்த வீடியோ.கடலில் அந்த காமிரா அலைபாய்ந்து கொன்டிருந்த போது கடல் ஆமை ஒன்று அதனை இறை என நினைத்து தாக்கிய போது அதன் பெல்டில் சிக்கி கொண்டது.அதில் இருந்து விடுவிக்க முயன்ற போது காமிராவை ஆமை தற்செயலாக இயக்கிவிட்டது.காமிரா ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் ஆமையின் ஷேஷ்டைகள் அதில் பதிவாயின.
ஷுட்ஸ் இந்த வீடியோ கோப்பை யூயியூப்பில் பதிவேற்றிய பின் கடல் ஆமை எடுத்த வீடியோ என்னும் அடைபொழியோடு அது இணையம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டது.பார்க்கப்பட்டு வருகிறது.
————

0 Comments on “இண்டெர்நெட்டால் கிடைத்த தொலைந்த காமிரா”
முனைவர்.இரா.குணசீலன்
இதுக்குள்ள இவ்வளவு கதையிருக்கா..!
cybersimman
ஆம் நண்பரே.
பழூரான்
அருமை.. அப்படியே அந்த கடல் ஆமை வீடியோ லிங்கையும் கொடுக்கலாமே, நாங்களும் பாத்து ரசிப்போம்.. ஹிஹி.. 🙂
cybersimman
i have given the link. but its broken now.sorry
சி.கருணாகரசு
மிக வியந்தேன் பகிர்வுக்கு நன்றிங்க
aruna
ஆச்சரியமோ ஆச்சரியம்!
muthu
அந்த கடல் ஆமை வீடியோ ??????
san
eppatium natakkuma………..
cybersimman
இதுக்கே இப்படி சொன்ன எப்படி?டிவிட்டர் செயத் உதவி பற்றி படியுங்கள் விரைவில் எழுத உள்ளேன்.
san
aachariyam ………………