ஆய்வு நோக்கில் திரைப்படங்களின் மீது ஆர்வம் மிக்கவர்கள் லாஸ்ட் பிலிம்ஸ் இணைய முயற்சி பற்றி கேள்விப்பட்டால் ஆஹா என பாராட்டுவார்கள். அதோடு இந்த முயற்சியில் தங்களது பங்களிப்பையும் செலுத்த வேண்டுமென்று ஆர்வம் கொள்வார்கள்.
உண்மையில் இணையவாசிகள் மத்தியில் இத்தகைய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதே இந்த முயற்சியின் நோக்கம். இப்படி இணையவாசிகளின் பங்களிப்போடுதான் இந்த தளம் வளர உள்ளது.
மௌனப்பட யுகத்தை சேர்ந்த காணாமல் போன அல்லது காணாமல் போனதாக கருதி கைவிடப்பட்ட பழைய திரைப்படங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது லாஸ்ட் பிலிம்ஸ் இணையதளம்.
டாக்கீஸ் என்று சொல்லப்படும் பேசும் படம் அறிமுகமாவதற்கு முன்னர் மௌனப்படங்களே கோலோச்சி கொண்டிருந்ததை நீங்கள் அறியலாம்.
சினிமா எனும் மகத்தான கண்டுபிடிப்பின் அற்புதத்தை பேசா படங்களின் மூலமே முதலில் ரசிகர்கள் கண்டுகொண்டு வியந்தனர். அதன் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சியால் பேசும் படங்கள், வண்ணப் படங்கள், அனிமேஷன் தற்போது 3டி என திரைப்படங்கள் எங்கோ வந்து விட்டன.
மேலும் இன்டர்நெட்டின் பயனாக யுடியூப் வடிவிலும் ஏராளமான வீடியோ கோப்புகள் காண கிடக்கின்றன.
இந்நிலையில் என்றோ எடுக்கப்பட்ட பேசாப்படங்களை பார்த்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரமில்லை. இது இயல்பான ஒன்றுதான். ஆனால் மௌனப்பட யுகத்தை சேர்ந்த திரைப்படங்களை வரலாற்று நோக்கில் பாதுகாத்து வைக்க வேண்டியது நம் கடமை அல்லவா. பல ஆவண காப்பகங்கள் இதை செய்து வருகின்றன.
ஆனால் இந்த முயற்சிகளையும் மீறி பல அரிய படங்கள் பாதுகாக்கப்படாமல் போய் விட்டன. படங்கள் பேசத் தொடங்கிய காலத்திலேயே மௌனப் படங்களின் மீது ஒருவித இகழ்ச்சி தோன்றி விட்டன.
அவை இனிமேல் பயனற்றவை என்று ஒரு எண்ணம் தோன்றியது வினோதம்தான். இதன் காரணமாக தெரிந்தே அந்த படங்களின் சுருள்கள் தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளன. நைட்ரேட்டை கொண்ட இந்த சுருள்களிலிருந்து கிடைக்கக் கூடிய வெள்ளிக்காக இவ்வாறு செய்யப்பட்டன.
இது போன்ற மடத்தனத்தின் விளைவாக 80 சதவீத மௌனப் படங்கள் அழிக்கப்பட்டு விட்டன; அல்லது காணாமல் போய் விட்டன.
திரைப்பட சுருள் பாதுகாப்பாக மிஞ்சினாலும் அவற்றை இயக்கியது யார்? நடித்தவர்கள் யார்? வெளியான காலம் என்ன போன்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும் படங்கள் காணாமல் போனவையாக கருதப்படுகின்றன. அனாதை படங்கள் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.
அவ்வப்போது எதிர்பாராத இடங்களிலிருந்து எல்லாம் இத்தகைய படங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆவண காப்பகங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.
இவை தொடர்பான விவரங்களை சேகரிப்பதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. அலைந்து திரிந்து ஆய்வு நடத்தினாலும் இவற்றை உருவாக்கியவர்கள் பற்றிய விவரங்களை சேகரிப்பது அத்தனை எளிதல்ல.
ஊர் கூடி தேர் இழுப்பது போல இந்தப் பணியை இணையவாசிகளின் பங்களிப்போடு செய்வதற்காகத்தான் லாஸ்ட் பிலிம்ஸ் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள டச்சே கினேமதக் எனும் அமைப்பு அந்நாட்டின் திரைப்பட அருங்காட்சியகத்தோடு இணைந்து இந்த இணையதளத்தை அமைத்துள்ளது.
இதில் மௌனப்பட யுகத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றை திரைப்பட ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். ஹிட்லர் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் உட்பட வெவ்வேறு வகையான படங்கள் அந்த காலத்தின் நிதர்சனத்தை கண்முன் நிறுத்தும்.
இந்த தளத்தில் அடையாளம் காண வேண்டிய படங்கள் என்றும் ஒரு பகுதி இருக்கிறது. இதுதான் மிகவும் முக்கியமானது.
இந்த பகுதியில் உள்ள படங்கள் காணாமல் போன அனாதை படங்களாக கருதப்படுகின்றன. இணையவாசிகள் இவற்றை பார்த்து தங்களுக்கு ஏதேனும் தகவல் தெரியும் பட்சத்தில் அவற்றை இதில் இடம் பெற வைக்கலாம். திரைப்படம் உருவான காலகட்டம், அதனை இயக்கியவர், நடித்தவர் போன்ற விவரங்கள் தெரிந்திருப்பின் அவற்றை அளிக்கலாம். ஏற்கனவே உள்ள விவரங்களை திருத்தவும் செய்யலாம். அந்த வகையில் அந்த கால படங்களுக்கான விக்கியாக இந்த தளம் செயல்படுகிறது.
அருங்காட்சியகம் மற்றும் ஆவண காப்பகங்களை சேர்ந்தவர்களும் இந்த படங்கள் அடையாளம் காணப்பட உதவலாம். இந்தப் படங்கள் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் இதர செய்திகளையும் இடம் பெற வைக்கலாம்.
——

0 Comments on “திரைப்படங்களுக்காக ஒரு விக்கி”
இமலாதித்தன்
நல்ல பதிவு. வாழ்த்துகள்…! அந்த தளத்திற்கான சுட்டியை இணைக்கவில்லையே ஏன்?
cybersimman
தற்போது இணைக்கப்பட்டுள்ளது நண்பரே.
இமலாதித்தன்
சுட்டியை இணைத்தததற்கு நன்றி
winmani
சிறந்த பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்.
Pingback: திரைப்படங்களுக்காக ஒரு விக்கி : VALAICHARAM
Pingback: திரைப்படங்களுக்காக ஒரு விக்கி : வலைச்சரம்
KARTHIKEYAN.S
super
cybersimman
thanks