நாடோடிகள் படத்தில் சசிகுமார் அடிக்கடி பேசும் மாமா உங்க நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்னும் வசனத்தை போல மாஷ்பீடியாவின் நேர்மை தான் மிகவும் பிடித்திருக்கிறது என்று சொல்லலாம்.
பொதுவாக புதிய இணையசேவைகள் அறிமுகமாகும் போது தங்களைப்பற்றி தாங்களே வர்ணித்துகொள்வது தானே வழக்கம்.அதிலும் புதிய தேடியந்திரங்கள் தாங்களின் தேடல் யுக்தியை ஏதோ கொள்கை பிரகடனம் போல பெரிதாக குறிப்பிடுவதுண்டு.
ஆனால் மாஷ்பீடியாவோ இப்படி தன்னைப்பற்றி தம்பட்டம் அடித்துக்கொள்ளாமல் தன்னை எப்படி பார்க்க கூடாது என்பதை முதலில் தெளிவு படுத்தி விடுகிறது.மாஷ்பீடியா இண்டெர்நெட்டில் தகவல்களை தேட உதவினாலும் தான் ஒரு தேடியந்திரம் அல்ல என்று தன்னைப்பற்றிய அறிமுகத்தில் தெரிவிக்கிறது.
தேடியந்திரம் இல்லை என்றால் வேறு என்ன?
இணைய களஞ்சியம் என்பதே இதற்கான பதில்.அதிலும் சாதாரண களஞ்சியம் அல்ல.நிகழ்கால களஞ்சியம்.இந்த நொடியில் வெளியாகி கொன்டிருக்கும் தகவல்களை திரட்டித்தரும் களஞ்சியம்.
இணைய களஞ்சியம் என்றதுமே விக்கிபீடியா நினைவுக்கு வரலாம். ஆனால் மாஷ்பீடியா இன்னொரு விக்கிபிடியாவோ அதற்கு போட்டியோ இல்லை.விக்கிபிடியாவில் இருந்து பெரிதும் வேறுபட்ட களஞ்சியம் இது.
அதாவது நிகழ்கால களஞ்சியம்.ஆங்கிலத்தில் ரியல் டைம் என்சைக்ளோபிடியா என்று சொல்லப்படுகிறது.
இண்டெர்நெட் விஷயத்தில் நீங்கள் அப்டேட்டாக இருப்பவர் என்றால் இந்த ரியல்டைம் என்று குறிப்பிடுவதற்கு உள்ள முக்கியத்துவம் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.
இண்டெர்நெட் முன் போல அல்ல.நொடிக்கு நொடி புதிய செய்திகளும் தகவல்களும் அதில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.உடனுக்குடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் குறும்பதிவு சேவையான டிவிட்டர் மற்றும் வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் போன்றவற்றின் பயனாக இண்டெர்நெட்டில் ஒவ்வொரு நொடியும் தகவல்கள் புதுப்பிக்க பட்ட வண்ணம் இருக்கிறது.
சற்றைக்கு முன்னர் அந்த பறவை பறந்து கொண்டிருந்தது என்னும் கவிஞர் ஆனந்தின் கவிதை வரியை போல சற்றைக்கு முன்னர் பார்த்த தகவல் இப்போது பழசாகிவிட்டது என்று கூறும் அளவுக்கு இண்டெர்நெட்டில் ஓயாமால் தகவல் பிரவாகம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இண்டெர்நெட்டின் இந்த தன்மை ரியல்டைம் வெப் என்று சொல்லப்படுகிறது.நிகழ் கால வலை என்று சொல்லலாம்.இதன் விளைவாக நிகழ் கால தேடியந்திரங்களும் உதயமாயின.இதோ இந்த நொடியின் தகவல்களை தேடித்தருகிறோம் என்று பறைசாற்றிக்கொண்ட இந்த புது வகை தேடியந்திரங்கள் தேடல் முதல்வன் கூகுலையே கொஞ்சம் திகைப்பில் ஆழ்த்த செய்தன.
இப்போது கூகுலும் கூட ரியல் டைம் வெப்பில் கவனம் செலுத்துகிறது.
இந்த வகையில் நிகழ் கால களஞ்சியமாக மாஷ்பீடியா உருவெடுத்துள்ளது.குறிப்பிட்ட தலைப்புகள் தொடர்பான தகவல்கள் மற்றும் லேட்டஸ்ட் தகவல்களை உருவி ஒரே பக்கத்தில் தொகுத்து தருகிறது மாஷ்பீடியா.
முதலில் ஒரு சுருக்கமான அறிமுகம்(பெரும்பாலும் இது விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது),அதன் பிறகு அந்த தலைப்பு தொடர்பான டிவிட்டர் பதிவுகள் ,சமீபத்திய செய்திகள் ,வீடியோக்கள் ,புகைப்படங்கள் என்று அமர்களப்படுத்தி விடுகிறது.அந்த தலைப்பிலான வலைப்பதிவுகள் ,வலைமனைகள்,புத்தகங்கள் ஆகியவையும் பட்டியலிடப்படுகின்றன.
இவை எல்லாமே சமீபத்தியவை என்பது தான் விஷேசம்.அதாவது அந்த நொடியில் வெளியானவை.அடுத்த நொடியில் பார்த்தீர்கள் என்றால் வேறு விதமான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
விக்கிபீடியா மகத்தான களஞ்சியம் என்றாலும் கூட அதில் உள்ள தகவல்கள் எப்போதோ தொகுக்கப்பட்டவை.ஆனால் மாஷ்பீடியாவிலோ தகவல்கள் மாறிக்கொண்டே இருக்கும்.அதாவது புதிப்பிக்க பட்டுக்கொண்டே இருக்கும்.
எப்போதுமே புதிய படங்கள் புதிய தகவல்களோடு உயிர்ப்புடனே இருக்கும்.
புதிதாக அறிமுகமாகும் தேடியந்திரங்கள் இணையபக்கங்களை மட்டும் அல்லாமல் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகளையும் தேட வழி செய்கின்றன.இருப்பினும் மாஷ்பீடியா ஒரே பக்கத்தில் அவற்றை குவித்து அசத்திவிடுகிறது.
அது மட்டும் அல்ல தகவல் பக்க்த்தின் கீழ் பேஸ்புக்கில் இருப்பது போல கருத்துக்க்ளை வெளியிடுவதற்கான சுவர் ஒன்றும் இருக்கிறது. அதில் கருத்து தெரிவித்து சக இணைய வாசிகளோடு உரையாடலாம்.
எல்லாவற்றையும் விட முக்கியமாக மாஷ்பீடியா தனது வரம்பு எது என்பதை தெளிவாகவே உணர்ந்தி விடுகிறது.இண்டெர்நெட்டில் மேலோங்கும் தலைப்புகள் குறித்து அதன் முகப்பு பக்கத்திலேயே குறிச்சொற்கள் இடம்பெறுகின்றன்.மற்ற தலைப்புகளை குறிப்ப்ட்டு தேடலாம்.ஆனால் அவை எல்லாமே பொதுவானவை.குறிப்பிட்ட தகவல் தேவை என்றால் கூகுல் அல்லது பிங்கில் தேடவும் என சொல்லப்பட்டு விடுகிறது.
அதே போல மிகவும் பொதுவான தலைப்புகள் என்றால் அவற்றின் கீழ் வரக்கூடிய பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு வழிகாட்டுகிறது.உதாரணத்திற்கு உலககோப்பை என்றால் விளையாட்டு துறையில் நடக்கும் ஒரு வகை போட்டி என்னும் அறிமுகத்தின் கீழ் கால்பந்து உலககோப்பை உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.
———–

0 Comments on “இது ரியல்டைம் விக்கிபீடியா”
Kumar
It is good, if we want to search for a particular person, event or place..
Nice article!
Im surprised, from where you are getting all these details.. Fantastic!
cybersimman
thanks for the complemant. please try mahalo.a similar search engine
winmani
மிகவும் பயனுள்ள தேவையான பதிவு..
மிக்க நன்றி நண்பரே
cybersimman
நன்றி நண்பரே.
Pingback: இது ரியல்டைம் விக்கிபீடியா
M.K.Muruganandan
மிகவும் பயனுள்ள தளமாகத் தெரிகிறது. தகவலுக்கு நன்றி.
abulbazar
பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி சிம்மன்.
adhithakarikalan
நல்ல செய்தி