சினிமாவுக்கு இருக்கும் மவுஸ் சின்னத்திரைக்கு கிடையாது தான் இல்லையா?அதே போல சினிமாவுக்கு இருக்கும் அளவுக்கு சின்னத்திரைக்கு இணையதளங்களும் இல்லை.
இருக்கும் சில இணையதளங்களும் பிரமாதமாக இருப்பதாக எல்லாம் சொல்ல முடியாது.இந்த பின்னணியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளூக்காக என்றே அறிமுகமாகியிருக்கும் வெப்மர்கா இணையதளத்தை டிவி பிரியர்கள் கவனத்தில் கொள்ளலாம் .
அதிலும் டிவி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டு வேலை போன்றவற்றால் அவற்றை பார்க்காமல் மறந்து விடுபவர்கள் இந்த தளத்தை தாராளமாக குறித்து வைத்துக்கொள்ளலாம்.
காரணம் இந்த தளத்தின் பிரதான நோக்கமே இனி யாரும் தாங்கள் பார்க்க வேஎண்டும் என நினைத்த அபிமான நிகழ்ச்சிகளை பார்க்காமல் கோட்டை விடக்கூடாது என்பது தான்.அந்த வகையில் இந்த தளத்தை டிவி நிகழ்ச்சிகளுக்கான நினைவூட்டல் சேவை என்று வைத்துக்கொள்ளலாம்.
எந்நேரமும் டிவி முன் உடகார்ந்திருப்பவர்களூக்கோ நேரம் கிடைத்த போது கண்ணில் படும் நிகழ்ச்சியை பார்க்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் பலர் டிஸ்கவரியில் அந்த நிகழ்சியை பார்க்க வேண்டும், ஜீ டிவியில் வரும் புதிய தொடரை பார்க்க வேண்டும் ,ஈஎஸ்பிஎன்னில் விளையாடு நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்,சோனியில் கலக்கலான ஹாலிவுட் படத்தை பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் குறித்து வைத்துக்கொண்டு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அன்று வேறு வேலையில் பிஸியாக இருந்து விட்டு பின்னர் அடடா மறந்து போனோமே என வருந்துவார்கள்.
அப்படிப்பட்டவர்கள் வெப்மர்கா தளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிறகு எந்த தொலைக்காட்சி என்பதை தேர்வு செய்து அதில் எந்த எந்த நிகழ்ச்சிகளை காண வேன்டும் என டிக் செய்ய வேண்டும்.
அப்படி செய்து விட்டால் போதும் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ள அன்று நேயர் மறந்தாலும் வெப்மர்கா மறக்காமல் நிகழ்ச்சி பற்றிய நினைவூட்டலை எஸ் எம் எஸ் மூலம்அனுப்பி வைக்கும்.எனவே நிகழ்ச்சிகளை மறந்து விடும் கவலையே வேண்டாம்.
எத்தனை நிகழ்ச்சிகளை வேண்டுமானால் குறிப்பிடலாம்.வேண்டாம் என்றால் எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து கொள்ளலாம்.
வெப்மர்கா தளத்தின் முகப்பு பக்கத்தில் இன்றைய நிகழ்ச்சிகள் மற்றும் இன்றைய திரைப்படங்கள் மற்றும் பிரபலமான நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெற்றிருப்பதால் இதனை டிவி நிகழ்ச்சி வழிகாட்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
உறுப்பினராக பதிவு செய்து கொள்பவர்கள் தங்களுக்கென்று ஒரு பக்கத்தையும் உருவாக்கி கொண்டு பிடித்தமான நிகழ்ச்சி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம்.குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கான தின் பக்கங்களும் இடம்பெற்றுள்ளன.குறிச்சொற்கள் மூலம் அவற்றை அடையாளம் கொண்டு விவாதிக்கலாம்.
ஒருவிதத்தில் பார்த்தால் இதுவும் வலைப்பின்னல் சேவை தளத்தை போன்றது தான். ஆனால் வெப்மர்கா குழுவே அப்படியெல்லாம் கூறீக்கொள்ள நினைக்கமால் அடக்கி வாசிக்கிறது.ஒரே மாதிரியான தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பவர்கள் தங்களூக்குள் தொடர்பு கொண்டு அவை பற்றி விவாதிக்க வழி செய்யும் சேவை என்றே தன்னைப்பற்றி இக்குழு குறிப்பிடுகிறது.வேண்டுமானால் தொலைக்காட்சி சமூக வலைப்பின்னல் சேவை என்று வைத்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்குழு நினைத்திருந்தால் தாரளமாக டிவி நிகழ்ச்சிக்கான பேஸ்புக் என வர்ணித்துக்கொண்டிருக்கலாம்.ஆனால் அப்படியெல்லாம் ஆசைப்படவில்லை.இது பாராட்டத்தக்கது தான்.
பார்க்க நினைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மறதியால் பார்க்க முடியாமல் போன அனுபவத்திற்கு சொந்தக்காரர்கள் சேர்ந்து இந்த தளத்தை துவக்கியுள்ளனர்.
எல்லாம் சரிதான் இப்போதைக்கு ஒரே தேசிய தொலைக்காட்சிகளாக தான் இருக்கின்றன.நம்மூர் சன் அல்லது ஜெயாவை எல்லாம் காணவில்லை.எனவே அடுத்த கட்டமாக அனைத்து பிராந்திய தொலைக்காட்சிகளையும் சேர்த்துக்கொண்ட்டால் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்.
இல்லையென்றால் நம்மவர் யாராவது இப்படி ஒரு சேவையை ஆரம்பிக்கலாம்.
————–

0 Comments on “டிவி நிகழ்ச்சிகளுக்கான நினைவூட்டல் இணையதளம்.”
tamildigitalcinema
உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்… http://writzy.com/tamil/