வளைகுடா நாட்டில் வேலைக்கு போக வேண்டும் என்ற ஆர்வம் பலருக்கு இருக்கலாம்.அதே நேரத்தில் வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்பட்டு ஏஜென்டிடம் பணம் கொடுத்து ஏமாந்துவிடுவோமோ என்ற அச்சமும் இருக்கலாம்.
இப்படி ஏஜென்டை நம்பி ஏமாற வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஜாப்கிரீட்ஸ் இணையதளத்தை நாடலாம்.வேலை வாய்ப்புக்கு வழி காட்டும் இணையதளங்களின் வரிசையில் இந்த தளம் புதிது என்றாலும் வளைகுடா நாடுகளில் உள்ள வேலை வாய்ப்புக்கான பிரத்யேக தளம் என்பது இதன் சிறப்பம்சம்.
அபுதாபி,மற்றும் துபாய் ஆகிய நகரங்கள் அமைந்துள்ள ஐக்கிய அரபு குடியரசு நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வேலை வாய்ப்பு தளம் என்று வர்ணித்துக்கொள்ளும் ஜாப்கிரீட்ஸ் அந்நாட்டில் மட்டும் அல்லாமல் குவைத்,லெபனான்,ஓமன்,பகரைன்,கத்தார்,ஜோர்டன் ஆகிய நாடுகளிலும் வேலைவாய்ப்பை தேட வழி காட்டுகிறது.
ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பயோடேட்டாவை இடம்பெறச்செய்யலாம்.விரும்பிய துறைகளில் வேலை இருக்கிறதா என்று தேடிபார்க்கும் வசதியும் உண்டு.துறை,அனுபவம் ஆகியவற்றை குறிப்பிட்டு வேலை வாய்ப்பை தேடலாம்.
இல்லையென்றால் துறைவாரியாக தனித்தனி தலைப்புகளில் பட்டியலிடப்பட்டுள்ள வேலைகளையும் தேடிப்பார்க்கலாம்.அரபு நாடுகளில் பெரிய வர்த்தக நிறுவங்களை எல்லாம் இந்த தளம் வளைத்துப்போட்டிருப்பதாக தெரிகிறது.அதிலும் வர்த்தக நிறுவங்களை சோத்தித்து சரி பார்த்த பின்னரே பட்டியலில் சேர்த்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் வளைகுடா நிறுவங்கள் விரும்பி நாடும் வேலை வாய்ய்பு தளம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே நம்பிக்கையோடு தேடலாம்.
ஐடி,ரியல் எஸ்டேட்,நிதித்துறை,நர்ஸ் வேலை,வங்கி,தணிக்கை துறைபிள்ம்பிங்,எலக்ட்ரிகல் வேலை, என பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு சுலபமாக தேடக்கூடிய வகையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
அதோடு நேர்முகத்தேர்வில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனைகளை கூறும் கட்டுரைகளுக்கான தனிப்பகுதியும் உள்ளது.
வளைகுடா வேலை வாழ்க்கைக்கு வழிகாட்டும் என நினைப்பவர்கள் இந்த தளத்தை தாராளமாக குறித்து வைத்துக்கொள்ளலாம்.
———

0 Comments on “வளைகுடாவில் வேலை தேட உதவும் இணையதளம்.”
butterfly Surya
அன்பின் சிம்மன். இது போன்ற வளைதளங்கள் வளைகுடாக்களில் நிறைய உள்ளது. ஆனால் பெரும்பாலும் இதில் விண்ணபித்தவர்கள் மூலம் கம்பெனிகள் ஆள் எடுப்பது இல்லை. நானும் வளை குடாவில் 4 வருடம் பணியாற்றியவன் தான்.
cybersimman
தகவலுக்கு நன்றி.அறிமுக நோக்கிலேயே இந்த பதிவு எழுதப்பட்டது.உங்களைப்போன்றவர்கள் பகிரும் தகவல்கள் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பயனாளிகள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும்.
நட்புடன் சிம்மன்.
வடுவூர் குமார்
துபாய் பக்கம் இப்போதைக்கு போகாமல் இருப்பது நலம்.
cybersimman
இந்த கருத்தையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.,நட்புடன் சிம்மன்.
Gokulakrishnan
Thank you very much for your information!
It’s useful for Job seekers.
best regards,
Sai Gokulakrishna.
http://saigokulakrishna.blogspot.com
for more Gulf Job details(Opportunities)
cybersimman
thanks for info
Pingback: வளைகுடாவில் வேலை தேட உதவும் இணையதளம். « தமிழ் இஸ்லாம் அரங்கம்
மீனாட்சி நாச்சியார்
எனினும் பகிர்வதில் தவறில்லை. நன்றி சிம்மன்
Pingback: வளைகுடாவில் வேலை தேட உதவும் இணையதளம். « தமிழ் நிருபர்
Shoshana Muncie
Glad i found this web site.Added “%BLOGTITLE%” to my bookmark!