கூகுல் சார்ந்தவை,கூகுல் சாராதவை என புதிய தேடியந்திரங்களை சுலபமாக இரண்டு வகையாக பிரித்து விடலாம்.
கூகுல் சார்ந்தவை என்றால் தேடலுக்கு என்று தனி தொழில்நுட்பத்தை நாடாமல் கூகுல் தேடலை பயன்படுத்திக்கொண்டு அதனடிப்படையில் புதிய தேடல் வசதியை அளிக்க முயலும் தேடியந்திரங்கள் என்று பொருள்.
உதாரணத்திற்கு சில தேடியந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை தேடித்தருவதாக பெருமைபட்டுக்கொள்ளும்.ஆனால் அவற்றை பயன்படுத்தும் போது பார்த்தால் கீழே எங்காவது கூகுலுக்கு நன்றி என குறிப்பிடப்பட்டிருக்கும்.கூகுலிலேயே பிடிஎப் கோப்புகளை தேடலாம்.இந்த தேடியந்திரங்கள் பிடிஎப் கோப்புகளை மட்டும் கூகுலில் தேடி பட்டியலிட்டு தந்து நம் வேலையை எளிதாக்குகின்றன.
இதே போல கிரீன்மேவன் போன்ற தேடியந்திரங்கள் தங்களை பசுமை தேடியந்திரங்கள் என்று அழைத்துக்கொள்கின்றன.சுற்றுசூழல் நோக்கில் இவை முடிவுகளை தந்தாலும் அடிப்படையில் பயன்படுத்தப்படுவது கூகுலின் தேடல் முடிவுகள் தான்.
உண்மையில் இப்படி தனது தேடல் பட்டியலை பலரும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிப்பதே கூகுலின் வெற்றிக்கான காரணங்களில் ஒன்று.
கூகுல் சாராத தேடியந்திரங்கள் முற்றிலும் சுயேச்சையானவை.தங்களுக்கென்று தனித்துவமான தேடல் தொழில்நுட்பத்தோடு இவை தேடல் உலகில் தங்களுக்கான இடத்தை பிடிக்க முயற்சிக்கின்றன.இவை ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.
மாமூலான தேடலில் இருந்து விலகி சமூக நோக்கில் தேடலில் ஈடுபடும் தேடியந்திரங்களும் இப்போது பிரபலமாகி வருகின்றன.
இவை ஒருபுறம் இருக்க,கூகுல் சார்ந்த தேடியந்திரங்களிலேயே அற்புதமான தேடியந்திரம் என்று ஸ்வீட்சர்ச் தேடியந்திரத்தை குறிப்பிடலாம்.உண்மையில் கூகுலை அடிப்படையாக கொண்டு இதைவிட அருமையான தேடியந்திரத்தை உருவாக்க முடியாது என்றும் சொல்லலாம்.
ஸ்வீட்சர்ச் மாணவர்களுக்கான தேடியந்திரம் என்று தன்னை வர்ணித்துக்கொள்கிறது.அந்த வர்ணனைக்கு முழு விசுவாசமாக மாணவர்களுக்கு பொருத்தாமான தேடல் முடிவுகளை தருகிறது.தேடலுக்கு கெட்டிக்காரானான கூகுல் வையவிரிவு வலையில் கோடிக்கணக்கான பக்கங்களை தேடிப்பார்த்து முடிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறது.இவற்றில் பொருத்தமில்லாதவையும்,பதர்களும் நிறையவே இருக்கலாம்.
ஆனால் ஸ்வீட்சர்ச்சோ கல்வித்துறை நிபுணர்கள் பரிசிலித்து அங்கீகரித்த 35 ஆயிரம் இணையதளங்களில் மட்டுமே தேடி தகவல்கலை தருகிறது.இந்த தளங்கள் எல்லாமே ஆசிரியர்கள்,கல்வியாளர்கள்,நூலகர்கள்,போன்றவர்களால் சரிபார்க்கப்பட்ட்வை என்பதால் முடிவுகள் மாணவர்களுக்கு ஏற்றதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
பொதுவாக கல்வி அமைப்புகளின் இணையதளங்கள் தேடியந்திரங்கள் கண்ணில் படும் வகையில் தகவல்களை வடிவமைக்கவேண்டும் என்பதில் கவனம் செலுத்துபவையாக இல்லாதாதால் அவற்றில் உள்ள விவரங்கள் தேடல் பக்கத்தில் இடம்பெறாமலேயே போகலாம்.ஆனால் ஸ்வீட்சர்ச் கல்வி நிறுவன தளங்களில் உள்ள தகவல்களை அழகாக தேடி எடுத்து பட்டியலிடுகிறது.
அதுமட்டும் அல்ல தொடர்ந்து இத நிபுணர் குழு இணையதளங்கள் பரிசிலத்த வண்ணம் இருந்து பொருத்தமான இணையதளங்களை மட்டுமே தேடலுக்கு சேர்த்துக்கொள்கிறது.மேலும் முடிவுகளை அலசி ஆராய்ந்து அவற்றை தொடர்ந்து பட்டை தீட்டிக்கொண்டே இருக்கிறது.
மாணவர்களை பொருத்தவரை இந்த தேடியந்திரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தேடல் முடிவுகளில் பொருத்தமானதையும் நம்பகமானதையும் தேடிக்கண்டுபிடிக்க அல்லாடாமல் எடுத்த எடுப்பிலேயே தேவையான முடிவுகளை இதன் மூலம் பெறலாம்.
இணைய உலகில் கூகுல் விளம்பரங்களை பெறுவதற்காக என்றே புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட இணையதளங்கள் பல இருக்கின்றன.இவற்றில் உள்ள விவரங்கள் பெரும்பாலும் பயனற்றவையாக இருக்கும்.ஸ்வீட்சர்ச் இந்த இணைய பதர்களை எல்லாம் தவிர்த்துவிடுகிறது.எனவே மாணவ சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஸ்வீட்சர்ச்சில் இன்னும் சில அற்புதங்கள் இருக்கின்றன.அதன் தேடல் பக்கத்தல் இடது பகுதியில் யோலிங்க் என்று ஒரு கட்டம் தோன்றும்.அதில் ஏதாவது ஒரு குறிச்சொல்லை அடித்தால் முடிவுகளின் பொருத்தமான தன்மையை அலசி ஆராய்ந்து அதர்கேற்ற முடிவுகள் வடிக்கட்டப்படும்.இந்த முடிவுகளை பேஸ்புக் அல்லது டிவிட்டர் வழியே பகிர்ந்தும் கொள்ளலாம்.
இந்த பிரதான தேடல் வசதியை தவிர இதில் சில உப தேடல்களும் உண்டு.ஸ்வீட்சர்ச்மீ என்ற பகுதியை இளம் மாணவர்கள் தங்களுக்கானதாக வடிவமைத்துக்கொள்லாம். இதே போல ஆசிரியர்கள் மற்றும் நூலகர்களுக்கான தனித்தனி பகுதிகளும் இருக்கின்றன.
இவற்றை எல்லாம் விட சூப்பரானது தினம் ஒரு தகவல் பகுதியும்,சுயசரிதைக்கான பகுதியும் தான்.தினம் ஒரு தகவல் பகுதியில் தினந்தோறும் ஏதவாது புதிதாக கற்றுக்கொள்ளலாம்.இன்றைய வார்த்தை,இன்றைய பொன்மொழி,இன்றைய பேட்டி,இன்றைய கவிதை,,என ஏகப்பட்ட விஷயங்க இருக்கின்றன்.
சுயசரிதை பகுதியில் சுயசரிதை எழுதுவதற்கான குறிப்புகளோடு,தினம் ஒரு சுயசரிதைகளின் தொகுப்பு பிறந்த நாள் காண்பவர்கள் என நிறைய விஷயங்கல் இடம்பெறுகின்றன.ஆர்வம் உள்ளவர்கள் மணிக்கனக்கில் பொழுதை கழிக்கலாம்.
——–