சொல்லத்தான் நினைக்கிறேன் என்று நினைத்து சொல்லாமல் விட்ட விஷயங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் இருக்கலாம்.
அந்த நேரத்தில் சொல்வதற்கு துணிச்சல் வராமல் போய் அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையால் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டு பல காரணங்களினால் சொல்ல வேண்டியவற்றை சொல்லாமலேயே போயிருக்கலாம்.
இத்தகைய வருத்தம் உங்களுக்கும் இருந்தால் அதனை பகிர்ந்து கொள்வதற்காகவென்றே ஒரு இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார் ஜாக்கி ஹாப்பர் எனும் அமெரிக்க பெண்மணி. உட் ஹாவ் செட் என்பது தான் அந்த இணைய தளத்தின் பெயர்.
அதாவது நான் சொல்லியிருப்பேன் என்று அர்த்தம். பல்வேறு காரணங்களினால் சொல்ல வேண்டியவர்களளிடம் சொல்லாமலேயே விடப்பட்ட விஷயம் எதுவாக இருந்தாலும், அதனை இந்த தளத்தின் மூலம் வெளியிடலாம்.
குறித்த காலத்தில் கேட்கத்தவறிய மன்னிப்பு முதல் எந்த விஷயத்தையும் இந்த தளத்தில் பதிவு செய்யலாம். உயிரோடு இருப்பவர்கள் அல்லது இறந்து போனவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்ல நினைத்த விஷயங்கள் சொல்லாமல் இருந்தால் இந்த தளத்தில் அதனை பதிவு செய்யலாம்.
மிக எளிமையான தளம் இது. ஒரு இமெயில் அனுப்புவது போல யாருக்காக சொல்கிறோமோ, அவரது பெயரை குறிப்பிட்டு மனதில் உள்ளதை கொட்டி விடலாம். அது சின்ன விஷயமாக இருக்கலாம். மாபெரும் ரகசியமாக இருக்கலாம். நெடு நாட்களாக மனதை உறுத்திக் கொண்டிருக்கும் சங்கதியாக இருக்கலாம்.
சொல்லத் துணியாததை, சொல்லத் தயங்கியதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்பதே விஷயம். இது போன்ற தளத்தை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் ஜாக்கிக்கு தோன்றியது தற்செயலாகத்தானாம். நடாஷா ரிச்சட்சன் எனும் நடிகை பனிசறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது தலையில் அடிபட்டு இறந்து போனார். அந்த செய்தி ஜாக்கியை மிகவும் பாதித்திருக்கிறது. அதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தவர், திடீரென மரணம் அழைத்த போது நடாஷா எதை சொல்ல நினைத்திருப்பார். யாரிடம் சொல்ல நினைத்திருப்பார் என்றெல்லாம் யோசித்து பார்த்திருக்கிறார்.
அப்போது தான் எல்லோருக்குமே இது போன்ற ஒரு பரிதவிப்பு இருக்கக்கூடும் என்று தோன்றியது. மரணம் என்றில்லை வேறுபல காரணங்களினாலும் கூட மனதில் உள்ளதை சொல்ல முடியாமலேயே போய்விடும் நிலை பலருக்கு ஏற்படும் அல்லவா.
இது போன்றவர்கள் எல்லாம் தங்களது மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள ஒரு இணயை வழியை ஏற்படுத்தித் தந்தால் என்ன என்று யோசித்ததன் பயனாக இந்த தளத்தை உருவாக்கி உள்ளார்.
தினந்தோறும் குறைந்தது 50 பேராவது இந்த தளத்தை தங்களது ரகசியங்களை வெளியிட்டு வருகின்றனராம். சொல்ல மறந்த காதலில் தொடங்கி கேட்கத்தவறிய மன்னிப்பு என விதவிதமான தகவல்கள் இதில் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன.
இறக்கும் நிலையில் உள்ள மறுமகள் ஒருவர் தனது மாமியாரின் அன்பை பெற முடியாமல் போனது குறித்து அவரிடம் வருத்தத்தோடு கூறியுள்ள நெகிழ்ச்சியான கடிதம், தாத்தாவிடம் பேரன் தனது அன்பை தெரிவிக்கும் கடிதம் என வெவ்வேறு வகையான உணர்வுகளை இதில் பார்க்க முடிகிறது.
உரியவர்கள் படிப்பதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியாவிட்டாலும் இந்த கடிதங்கள் மனித மனத்தின் மர்மங்களையும், அதன் உணர்வுகளையும் கோடிட்டு காட்டுகிறது. இணைய தளம் முகவரி http://wouldhavesaid.com/

0 Comments on “சொல்லத்தான் நினைத்தேன் இணையதளம்”
nis Ravana
நல்ல தகவல்
prabu
ம்ம்.. “சொல்ல மறந்த கதை ” என தலைப்பிட்டிருக்கலாமோ…
cybersimman
irukkalaam.