டிவிட்டர் மூலம் செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம். புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம். இணையதள இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.
இப்போது டிவிட்டர் மூலம் பாடல்களையும் பகிர்ந்து கொள்ளலாம். டிவிட் மை சாங்
(tweetmysong) இணையதளம் இதற்கான சேவையை வழங்குகிறது.
ஒரேயொரு டிவிட்டில் அதாவது டிவிட்டர் செய்தியில் உங்கள் பாடலை உலகறியச் செய்யுங்கள் என்று ஊக்கமும் அளிக்கிறது இந்த தளம்.
நீங்கள் ஒரு இசையமைப்பாளர் என்று வைத்துக் கொள்வோம். உங்களிடம் அருமையான மெட்டு ஒன்று இருக்கிறது. அதனை எப்படியாவது மற்றவர்கள் கேட்கச் செய்ய வேண்டும் என்று துடிப்பீர்கள் அல்லவா?
அதற்கான சுலபமான வழியைதான் டிவிட் மை சாங் உண்டாக்கித் தருகிறது. அதுவும் மிக சுலபமாகக.
உங்கள் கைவசம் உள்ள பாடலை இந்த தளத்தில் பதிவேற்ற வேண்டும். அதன் பிறகு அந்த பாடல் பற்றிய அறிமுக குறிப்பை டிவிட்டர் செய்தியாக பதிவிட வேண்டும்.
அதன் பிறகு உங்கள் டிவிட்டர் முகவரியை பூர்த்தி செய்தீர்கள் என்றால் போதுமானது. உங்கள் பாடல்
டிவிட்டர் செய்தியாக பட்டியலிடப்படும்.
புதிய பாடல்களை கேட்டு ரசிக்கும் நோக்கத்தோடு இந்த தளத்திற்கு வரும் இசைப் பிரியர்கள் உங்கள் டிவிட்டர் பதிவை பார்த்து அதில் உள்ள இணைப்பை கிளிக் செய்து பாடலை கேட்டு மகிழலாம். பாடல்களை இந்த தளத்திலேயே கேட்டு ரசிக்கலாம். விரும்பினால் பாடலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
புதிய பாடகர்களும் கூட தங்களது பாடல்களை இப்படி டிவிட் செய்யலாம்.
இசைத்தட்டு நிறுவனங்களால் அடையாளம் காணப்படுவதற்கு முன் இளம் பாடகர்கள் (அ) இசையமைப்பாளர்கள் படாதபாடுபட வேண்டியிருக்கும். தங்கள் திறமையை வெளிப்படுத்த அவர்களுக்கு இருக்கும் வாய்ப்பு சொற்பமே.
இந்த குறையை போக்கும் வகையில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் அருமையான இசைத்தளங்களின் வரிசையில் இந்த தளமும் சேர்ந்திருக்கிறது.
மூன்றே படிகளில் புதியவர்கள் தங்கள் இசையை இந்த தளத்தின் மூலம் பிரபலமாக்கி கொள்ளலாம். முதல்படி பாடலை பதிவேற்றுவது, அடுத்த படி டிவிட்டர் செய்தியோடு இணைப்பது, மூன்றாவது படி அதன் பலனை பெறுவது. அதாவது பாடலை எத்தனை பேர் கேட்டு ரசித்துள்ளனர் என்ற விவரத்தை தெரிந்து கொள்வது.
பாடகர்களைப் போலவே இசைப் பிரியர்களுக்கும் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும். பாடகர்கள் புதிய இசையை பகிர்ந்து கொள்ளலாம் என்றால் ரசிகர்கள் கேளா இசையை கேட்டு ரசிக்கலாம். அந்த வகையில் இரு தரப்பினரையும் இணைக்கும் இசைப்பாலம் இந்த தளம்.
பாடல் பகிர்வானது எப்படி சுலபமோ அதே போல புதிய பாடல்களை கேட்டு ரசிப்பதும் சுலபம்தான்.
சமீபத்தில் பகிரப்பட்ட பாடல், அதிகம் கேட்கப்பட்ட பாடல், தனித்துவம் மிக்க பாடல் என பாடல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எது கவர்கிறதோ அதை கிளிக் செய்து கேட்டு ரசித்து இசைப் பயணத்தை தொடரலாம்.
யார் கண்டது ஒரு ரசிகராக, திறமை மிக்க புதிய பாடகரை நீங்கள் கூட கண்டுபிடிக்கலாம்.
கேட்ட பாடலை மீண்டும் மீண்டும் கேட்பதை விட புதிய பொக்கிஷத்தை கண்டுபிடிக்க முடிவது இணையில்லாத அனுபவம்தானே!
———-

0 Comments on “என் பாடலை டிவீட் செய்யவா?”
winmani
பயனுள்ள பதிவு ,
மிக்க நன்றி நண்பரே.