அமெரிக்க இளம்பெண் ஜூலி கேரேசனை ஆயிரம் குடை வழங்கிய அபூர்வ சீகாமணி என்று அழைக்கலாம்.கூடவே கருணை தேவதை என்றும் புகழலாம்.காரணம் குடைகளின் மூலம் அவர் மற்றவர்களுக்கு உதவும் உணர்வினை உலகம் முழுவதும் பரப்ப முயன்று வருகிறார்.இதற்காக என்றே அவர் ஆயிரம் குடைகள் என்னும் இணையதளத்தை உருவாக்கி இருக்கிறார்.
மழைக்காலத்தில் குடையின்றி தவிக்கும் மனிதர்களுக்கு குடையை நன்கொடையாக தருவது தான் அவரது நோக்கம். அப்படியே குடை குடையாக உதவும் எண்ணம் பெருக வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இந்த இணையதளத்திற்கான எண்ணம் ஒரு மழைக்கால பொழுதினில் உதயமானது.
பிட்ஸ்பர்க் நகரவாசியான அவர் அன்றைய தினம் காரில் சென்று கொன்ட்டிருந்தார்.அப்போது அருகே இருந்த பஸ் நிலையத்தில் சிறுமி ஒருவர் குடையில்லாமால் மழையில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்தார். அந்த சிறுமி மழையில் நனைவதை பார்க்கையில் அவருக்கு பரிதாபமாக இருந்தது.தன்னுடைய காரில் இருந்த குடையையும் சிறுமியையும் மாறி மாறி பார்த்த கேரேசன் உடனே காரில் இருந்து இறங்கி சென்று தனது குடிஅயை சிறுமியிடம் கொடுத்தார்.
சிறுமி இதனை எதிர்பார்க்கவில்லை.நம்ப முடியாத ஆச்சர்யத்தோடு கண்களில் மலர்ச்சியோடும் நன்றியோடும் குடையை சிறுமி வான்ஹ்கி கொண்டார்.
அந்த நொடியில் கேரேசனுக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பரிபூரண திருப்தியும் உண்டானது.அந்த நேரத்தில் ஒவ்வொருக்கும் ஒரு குடை கொடுத்தால் என்ன என்ற பேராவவும் உண்டானது.
குடையை மட்டும் கொடுக்காமல்,கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும் என்று அவர் நினைத்தார்.
இதனையடுத்து கையில் இருந்த பணத்தை கொண்டு இலவசமாக தருவதற்கான குடைகளை வாங்கி சேமிக்கத்துவங்கினார்.அவருக்கு ஒரு காதலனும் இருந்தார்.ஜியாப் பார்னஸ் அவரது பெயர்.அவருக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது.தன் பங்குக்கு பார்ன்ஸ் 50 குடைகளை வாங்கி காதலியின் பிறந்த நாள் பரிசாக வழங்கினார்.
இப்படி அழகான மஞ்சள் நிர குடைகளை சேகரித்த பின்னர் காரியத்தில் இறங்கினார்.அவருடைய தோழியான டிலான்ஸி இந்த திட்டத்துக்கான அழகிய லோகோவையும் விஷேச அட்டை ஒன்றையும் வடிவமைத்து கொடுத்தார்.
அதன் பிறகு அந்த குடைகளை நண்பர்கலிடமும் தெரிந்தவர்களிடமும் கொடுத்து மழை காலத்தில் குடையில்லாமல் தவிப்பவர்களுக்கு தருமாறு கேட்டுக்கொண்டார்.இப்படி இலவச குடை பெறுபவர்கள் தங்கள் பங்குக்கு யாராவது ஒருவருக்கு உதவி செய்தால் போதுமானது.குடையுடன் இணைக்கப்பட்டிருந்த அட்டையில் திட்டத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டு இந்த கோரிக்கையும் இடம்பெற்றிருந்தது.
மழையில் தவிக்கும் நேரத்தில் குடை பெற்றவர்கள் அந்த நன்றி உணர்ச்சியோடு உதவி தேவைப்படும் யாருக்காவது நேசக்கரம் நீட்ட வேண்டும்.
குடையோடு ஒரு தண்ணீர் புகாத தபால் அட்டையையும் இணைத்திருந்தார்.குடை பெற்றவர்கள் தங்கள் அனுபவத்தை இந்த அட்டை மூலம் அனுப்பி வைக்கலாம்.
ஒரு சோதனை முயற்சியாக இதில் ஈடுபட்டவர் பின்னர் இதனை பெரிய அளவில் மேற்கொள்ள விரும்பினார்.
இந்த எண்ணத்தோடு இணையத்தின் மூலம் ஆதரவை திரட்டும் செயலில் ஈடுபட்டார். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் தளங்களின் வழியே இந்த திட்டத்தை அறிவித்து உதவி மற்றும் நிதி கோரினார்.புதிய திட்டங்களுக்கு ஆதரவு திரட்டுவதற்கான கிக்ஸ்டார்டர் தளம் மூலமும் ஆதரவு திரட்ட முற்ப்பட்டார்.
அவரே எதிர்பாராத அளவுக்கு ஆதரவும் நிதியும் குவிந்தன.அமெரிக்கா மட்டும் அல்லாமல் கொரியா ,வேல்ஸ் போன்ற இடங்களில் இருந்தெல்லாம் ஆதரவு கிடைத்து.
இதனையடுத்து மிகுந்த உற்சாக்ததோடு செய்லில் இறங்கினார்.விஷேசமாக வடிவமைக்கப்பட்ட ஆயிரம் மஞ்சள் நிற குடைகளை வாங்கி அவற்றை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வலர்களிடம் விநியோகித்தார்.உரிய நேரத்தில் குடைகள் நன்கொடையாக அளிக்கப்படும்.அதனை பெறுபவர் தன் பங்கிற்கு உதவி செய்துவிட்டு அந்த அனுபவத்தை தபால் அட்டை மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.
இதோ புறப்படுகிறோம் என்னும் பொருள் பட ஹியர் வி கோ என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்காக ஆயிரம்குடைகள் என்னும் இணையதளமும் உருவாக்கப்பட்டது. இந்த தளத்தின் வழியே பயனாளீகள் அனுப்பும் நன்றி அட்டைகளை இணையவாசிகளோடு பகிர்ந்து கொண்டு வருகிறார்.
மழைக்காலத்தில் குடை வழங்குவதன் மூலம் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை எல்லோரிடமும் ஏறப்டுத்த இந்த இணையடஹ்ளத்தின் வழியே முயன்று வருகிறார்.
அமெரிக்காவின் மற்ற நகரங்கள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் இந்த திட்டத்தை தங்கள் பகுதியில் விரிவு படுத்த விரும்பி பலரும் தொடர்பு கொண்டு வருகின்றனராம்.கருணை பரவட்டும்.
———
http://1000umbrellas.org/post/509347612/calling-all-hander-outers

0 Comments on “ஆயிரம் குடைகள் விரியட்டும்;ஒரு இணைய முயற்சி”
சீனா
அன்பின் சைபர்சிம்மன்
அரிய செயல் – விளையாட்டாய் ஆரம்பித்த செயல் வளர்ந்து பேரியக்கமாய தொடர்கிறது.
நல்ல சேயல். பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
cybersimman
nandri nanparee
buruhani
ivarum oru kodai vallal than
cybersimman
yes