அபயக்குரல் கேட்டால் இண்டெர்நெட்டில் ஆதரவு குரல் கேட்காமல் போகாது என உணர்த்தும் வகையில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இணைய உலகில் நிகழ்ந்திருக்கிறது.
வாழ்க்கையின் சுமை தாள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்த முகமறிய வாலிபருக்காக பல்லாயிரக்கணக்கானோர் பதறி துடித்து மனித நேயத்தை வெளிப்படுத்தி இண்டெர்நெட்டின் ஆதார பலத்தை மீண்டும் அடையாளம் காட்டியுள்ளனர்.
எல்லாம் இண்டெர்நெட்டில் இடம்பெற்ற ஒரு துண்டு பதிவில் இருந்து ஆரம்பமானது.
போஸ்ட்சீக்ரெட் என்று ஒரு இணையதளம் இருக்கிறது.உள்ளக்குமுறல்களையும்,வெளியே சொல்ல முடியாத ரகசியங்களையும் வெளிப்படுத்துவதற்கான தளம் இது.யாரிடமாவது சொல்ல முடியாதா என நினத்து கொண்டிருக்கும் ரகசியங்களை இந்த தளத்தில் தபால் அட்டையாக சமர்பிக்கலாம்.இணையம் வழியேவும் சமர்பிக்கலாம்.இப்படி வருபவற்றில் வாரம் ஒரு ரகசியம் இந்த தளத்தில் இடம்பெறும்.
ரகசியத்தை ரகசியமாகவே சமர்பிக்கலாம் என்பதே இந்த தளத்தின் சிறப்பம்சம்.அதாவது யார் என்ற விவரத்தை சொல்லமலே அனாமதேயமாக உள்ளத்தை உருத்திகொண்டிருப்பவற்றை இங்கே சமர்பிக்கலாம்.
மனித மனமும் வாழ்கையும் எத்தனை விநோதமானது என்பதை இதில் பதிவாகும் ரகசியங்கள் உணர்த்தி வருகின்றன.
கடந்த 6 ம் தேதி இந்த தளத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட ரகசியம் ஒன்று திகைப்பை ஏற்படுத்தியது.
”நான் சான்பிரான்சிஸ்கோ நகரில் வசிக்கிறேன்.என்னை இங்கே யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.நான் இந்த இடத்திற்கு உரித்தானவன் இல்லை.நான் சட்ட் விரோதமாக குடியேறியவன்.இந்த கோடையில் கோல்டன் கேட் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்.”
இந்த செய்தி சிலரை பதற வைத்தது.பலரை பரிதாபம் கொள்ள வைத்தது.இப்படியெரு முடிவுக்கு ஒருவர் வந்திருப்பது தெரிந்தும் அதனை தடுக்க முற்படாமல் இருக்க கூடாது என்ற உணர்வையும் உண்டாக்கியது.
கனட்டவை சேர்ந்த் கிம்பர்லி என்னும் பெண்மணிக்கும் இதே உணர்வு ஏற்பட்டது.உயிரை விடத்துணிந்துவிட்ட அந்த வாலிபரின் மனதி மாற்ற ஏதாவதுச் எய்ய வேண்டும் என துடித்த கிம்பர்லி சமுக வலிப்பின்னல் தளமான பேஸ்புக்கில் ப்ளிஸ் டோன்ட் ஜம்ப் என்னும் பெயரில் ஒரு பக்கத்தை துவங்கி ,தயவு செய்து குதிக்க வேண்டாம் என்று அவரை கேட்டுக்கொள்ளும் படி மற்றவர்களூக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இததகைய ஆதரவு திரட்டல் பேஸ்புக்கில் சாத்தியமே.குறிப்பிட்ட நோக்கத்தை சொல்லி நண்பர்களாக சேருங்கள் என ஆதரவு கோரி பெரிய குழுவையே சேர்த்து விடலாம்.
கிம்பர்லியும் அந்த நம்பிக்கையில் தான் நீங்கள் தனியாக இல்லை;உலகம் உங்கள் பின்னே இருக்கிறது என்பதை அந்த அப்பாவி வாலிபருக்கு உணர்த்த விரும்பினார்.அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.அடுத்த 24 மணிநேரத்தில் அந்த பக்கத்தில் ஆதரவு குவிந்தது.20 ஆயிரம் பேருக்கு மேல் அந்த குழுவில் உறுப்பினராக சேர்ந்து தங்கல் மன உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
நீங்கள் வேண்டாதவர் இல்லை என்பதில் துவங்கி உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்பது வரை பலவிதமாக தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.இன்னும் சிலரோ நீங்கல் உயிர் வாழ வேண்டும் என மன்றாடி கேட்டிருந்தனர்.நிங்கள் பாலத்திற்கு வரும் நேரம் தெரிந்தால் உங்களை சந்திப்பதற்காக ஒஹியோவில் இருந்து வரத்தாயாராக இருக்கிறேன் என்று கூட ஒருவர் கூறியிருந்தார்.
இவற்றை பார்த்த மேலும் பலர் தங்கள் பங்கிற்கு அன்பை வெளிப்படுத்தினர்.
யார் என்றே தெரியாத அந்த வாலிபர் எப்படியாவது தனது முடிவை மாற்றிகொள்ள வேண்டும் என்ற துடிப்பை அந்த செய்திகள் தெரிவித்தன.சில நாட்களீல் இந்த குழுவில் 60 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்ந்துவிட்டனர். எல்லோருமே அந்த வாலிபர் வாழ வேண்டும் என விரும்பினர்.
வாலிபர் மீண்டும் அந்த தளத்திற்கு வருகை தந்து இவற்றை படித்து பார்ப்பாரா என்ற நிச்சயம் இல்லாத நிலையில், நாங்கள் இருக்கிறோம் என்பதை அவர்கள் காட்ட விரும்பினார்.
பேஸ்புக்கில் இப்படி ஆதரவு திரண்ட நிலையில் கலிபோர்னியா நக்ர மாணவி ஒருவர் கோல்டன் கேட் பாலத்திற்கே சென்று தற்கொலை எதிர்ப்பு பேரணி ஒன்ரை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
இந்த பேரணிகளின் போது மஞ்சல் மலர்கள் விநியோகிக்கப்பட்டு மஞ்சள் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. மஞ்சள் வண்ணம் தற்கொலை எதிர்ப்பு வண்ணமாகும்.
தற்கொலை எண்ணம் அந்த நேரத்து தடுமாற்றம் தான்.அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த கணத்தில் மனம் விட்டு பேச யாராவது கிடைத்தால் தற்கொலை எண்ணம் மறைந்து போய்விடும்.
சான்பிரான்சிஸ்கோ வாலிபரும் கூட தனக்காக குவிந்த ஆதரவை அறிய நேர்ந்திருதால் நெகிழ்ந்து போய் மனதை மாற்றிக்கொண்டிருப்பார்.அவர் உலகம் தனக்காக உருகியதை தெரிந்து கொள்வார் என நம்புவோமாக.

0 Comments on “ஒரு தற்கொலை முயற்சியும் சில இணைய துடிப்புகளும்”
aruna
பூங்கொத்து!
neo
நமது வலையுலகிலும் இத்தகைய (இதற்கிணையான என்று சொல்ல முடியாவிட்டாலும்) நிகழ்வொன்று நடந்தது …சில வாரங்கள் கழித்து அது குறித்து பதிவிடுகிறேன்.நன்றி!
cybersimman
அவசியம் பதிவுடுங்கள் நண்பரே.