புகைப்படங்களை சேமித்து வைக்கவும் பகிர்ந்து கொள்ளவும் உதவும் இணையதளங்கள் எத்தனையோ இருக்கின்றன.அந்த வரிசையில் ஸ்கிரேப்வால்ஸ் தளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
இருக்கும் புகைப்பட பகிர்வு சேவை தளங்கள் போதாதா என்ற அலுப்பான எண்ணம் தலைதுக்காக்கினாலும் இந்த தளத்தை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிட முடியாது.காரணம் மற்ற புகைப்பட பகிர்வு தளங்களில் இருந்து மாறுபட்டது.மிகவும் மாறுபட்டது என்று சொல்வதற்கில்லை.ஆனால் சின்னதாக அழகானதாக மாறுபட்ட ஒரு சேவையை வழங்குகிறது.
புகைப்படங்களை சேர்க்கை சித்திரங்களாக மாற்றிக்கொள்ள உதவுவதே அந்த சேவை.சேர்க்கைச்சித்திரம் என்றால் கொலேஜ் என்று பொருள்.
வண்ணங்களை கொண்டு ஓவியங்கள் தீட்டுவது ஒரு வகை என்றால்,பல வண்ண காகித துண்டுகளை ஒட்டு வேலையாக சேர்த்து வைத்து அதன் மூலமே சித்திரங்களை உருவாக்குவது கொலேஜ் என்று அழைக்கப்படுகிறது.
மாட்ர்ன் ஆர்ட் போன்ற நேர்த்தியும் சுவாராஸ்யமும் கொலேஜ்ஜில் உண்டு.ஆனால் கொலேஜ் அத்தனை சுலபமில்லை.அதற்கு தனி திறன் தேவை.
புகைப்படங்களை கொண்டே கொலேஜ் முறையில் ஒரு சித்திரத்தை உருவாக்கவும் செய்யலாம்.இதை தான் மிக சுலபமாக ஸ்கிரேப்வாலஸ் செய்து தருகிறது.
இந்த தளத்தில் உங்கள் வசம் உள்ள புகைப்படங்களை சமர்பித்தால் அவற்றை ஒன்றாக சேர்த்து அழகிய உருவமாக மாற்றித்தருகிறது.புகைப்படங்களை வெட்டி ஒட்டியது போல அழகாக சேர்த்து மொத்தமாக பார்க்கும் போது முழு உருவமாக தோன்றுகிறது.
திருமண கேக்,பேஸ்பால் மட்டை,காதல் சின்னம் என முப்பதுக்கும் மேற்பட்ட உருவங்களில் புகைப்படங்களை உருவாக்கி கொள்ளலாம்.எந்த உருவம் தேவையோ அதனை தேர்வு செய்த பிறகு புகைப்படங்களை அப்லோடு செய்தால் அழகான கொலேஜ் தயாராகி விடுகிறது.
இவற்றை வெவேறு அளவுகளில் பிரிண்ட அவுட்டாக அடுத்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.இருப்பினும் இந்த படங்களை இமெயில் மூலம் அல்லது பேஸ்புக் மூலம் பகிர்ந்து கொள்வது இலவசம் தான்.
புகைப்படங்களை வரிசையாக அடுக்கி வைத்தது போல பார்ப்பதைவிட இப்படி கொலேஜ் வடிவில் பார்ப்பது கொஞ்சம் சுவாரஸ்யமானது தான்.
புகைப்படங்களை கொலேஜ்ஜாக்கும் போது இடைவெளி இல்லாமல் மிக லாவகமாக ஒட்ட வைப்பதாக ஸ்கிரேப்வால்ஸ் பெருமைப்பட்டுக்கொள்கிறது.அதே போல புகைப்படங்களை விரும்பினால கொலேஜ்ஜுக்குள் வேறு இடங்களிலும் மாற்றிக்கொள்ளலாம்.அப்போதும் இடைவெளி விழாமல் மாற்றி அமைத்து தருகிறது.
புகைப்பட பிரியர்களை குறிப்பாக இளைஞர்களை மற்றும் கேளிக்கை குணம் கொண்டவர்களை இந்த சேவை நிச்சயம் கவரும்.
இந்த சேவையை உருவாக்கியுள்ளது அமெரிக்காவின் கெவின் பார்டரஸ் என்பவர்.மிக்ஸிகன் நகரைச்சேர்ந்த கெவினுக்கு ஒரு காதலி உண்டு.ஒரு முறை தனது காதலிக்கு பரிசளிக்க விரும்பினார்.பரிசு வித்தியாசமானதாகவும் கொஞ்சம் நெருக்கமானதாகவும் இருக்க வேண்டும் என நினைத்த அவர் இருவரும் சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒன்றாக சேர்த்து கொலேஜ் வடிவில் தர விரும்பினார்.
ஆனால எவ்வளவு தேடியும் இணையத்தில் அப்படி ஒரு சேவை இல்லாத்தால் தனது நண்பர் ஒருவரின் உதவியோடு இதற்கான சாப்ட்வேரை உருவாக்கினார்.காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் முத்த்மிடுவது போல் தோன்றிய அந்த கோலேஜ் அற்புதமாக இருக்கவே இதனை வைத்து ஒரு இணையதளத்தை உருவாக்க தீர்மானித்தனர்.
இப்படி பிறந்தது தான் ஸ்கிரேப்வால்ஸ் சேவை.

0 Comments on “புகைப்பட கொலேஜ்களை உருவாக்கும் இணையதளம்”
winmani
பயனுள்ள பதிவு நண்பரே…
Arlin
Thanks a lot…i was quite useful link
jaya
can u tell me website adress
cybersimman
http://www.scrapwalls.com/
jaya
Thanks sir