பஸ்சிலும் போகலாம், ரெயிலிலும் போகலாம், டிராமிலும் போகலாம். இப்படியே பொடிநடையாக நடந்தும் போகலாம் என்று புதுமைப்பித்தனின் சாகாவரம் பெற்ற சிறுகதையான கடவுளும், கந்தசாமிபிள்ளையும் கதையில் சென்னையில் வழிகேட்கும் கடவுளுக்கு வழி சொல்வது போல, ஒரு வசனம் வரும்.
டிராமை விட்டு விடுங்கள். பொதுவாக எந்த ஊருக்கும் பஸ், ரெயில், மற்றும் விமானம் என மூன்று வழிகளிலும் பயணம் செய்யலாம். வசதிப்படைத்தவர்கள் தனியே காரிலும் செல்லலாம்.
இவற்றில் எது சிறந்தது என்ற கேள்வி எழுமாயின், அதற்கான விடைத்தேடித்தரும் இணையதளம் ஒன்று அமெரிக்கா மற்றும் கனடா பயணிகளை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கெட் செட் ஆப் என்று பெயர் கொண்ட அந்த இணையதளம், வெளியூர் செல்லும் போது, பஸ், கார், விமானம் இந்த மூன்றில் எதன் மூலம் செல்வது மிகவும் மலிவானது என்பதை காட்டுகிறது.
விமானப்போக்குவரத்து மிகவும் சகஜமாக இருக்கும் அமெரிக்காவில், மலிவான விமான டிக்கெட்டை பெறுவதற்கான வழிகாட்டும் இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. விமான நிறுவனங்கள் சலுகைகளை அறிவிப்பதாலும், கட்டண குறைப்பை வெளியிடுவதாலும் குறிப்பிட்ட ஒரு தடத்தில் மற்ற விமானசேவைகளை விட, குறைவான கட்டணத்தில் கிடைக்கக்கூடிய டிக்கெட்களை இந்த தளங்கள் அடையாளம் காட்டுகின்றன.
இந்த தளங்களின் உதவியால் விமானத்தில் செல்பவர்கள் மலிவான டிக்கெட்களை பெற முடியும். ஆனால், சில நேரங்களில் விமான பயணத்தை விட, பஸ்சிலோ அல்லது காரிலோ செல்வது மலிவானதாக இருக்கலாம்.
அந்த வகையில் இந்த மூன்று வழிகளுக்கான கட்டணங்களை ஒப்பிட்டு காண்பித்த அவற்றை மலிவானதை தேர்வு செய்து கொள்ள கெட் செட் ஆப் இணையதளம் வழி
காட்டுகிறது.
எந்த நகரத்திலிருந்து எந்த நகரத்துக்கு செல்ல வேண்டும் என்பதை குறிப்பிட்டால், இந்த தளம் அந்த பயணத்திற்கு கார், பஸ் மற்றும் விமானம் மூலம் ஆகக்கூடிய செலவுகளை கணக்கிட்டு சொல்கிறது.
அவற்றில் எது மலிவோ அதனை தேர்வுசெய்து கொள்ளலாம். கூகுல் வரைப்படத்திலிருந்து பயணிக்கும் இடத்தின் தொலைவு, மற்ற தளங்களிலிருந்து காருக்கான பெட்ரோல் செலவு மற்றும் விமான கட்டணம் ஆகியவற்றை கணக்கிட்டு சொல்கிறது.
விரைவில் ரெயில் சேவையும், இந்த ஒப்பீட்டில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டுமே இந்த சேவை செயல்படுகிறது.
எதிர்காலத்தில் மற்ற உலக நகரங்களுக்கும் விரிவுப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சேவை இந்தியாவுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும். அல்லது இது போன்ற சேவையை உருவாக்கினாலும் சிறப்பாக இருக்கும்.
பயணங்களின் போது எந்த மார்க்கமாக செல்வது என்பதை செலவின் அடிப்படையில் தேர்வு செய்வதோடு, அவற்றுக்கு ஆகக்கூடிய நேரத்தையும் ஒப்பிட்டுப்பார்த்து முடிவெடுப்பது இந்தியா போன்ற பரந்துவிரிந்த நாட்டில் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.
———

0 Comments on “மலிவான பயண வழி காட்டும் இணையதளம்”
மதுரைசரவணன்
பகிர்வுக்கு நன்றீ. தகவல் மிகவும் பயனுள்ளது. வாழ்த்துக்கள்