ஆற அமர இணையத்தில் உலா வருவதென்பது வேறு.ஆனால் அந்த பாக்கியம் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. பெரும்பாலும் வேலைக்கு நடுவே அவசர கதியில் தான் இணையத்தில் உலாவ நேர்கிறது.அதிலும் பலர் அலுவலக நேரத்தில் தான் இண்டெர்நெட்டை பயன்படுத்துபவர்களாகவும் இருப்பதால் அரக்க பரக்க சமைக்கும் இல்லத்தலைவியைப்போல தான் இணையதளங்களையும் பார்க்க வேண்டியுள்ளது.
சிலருக்கு இண்டெர்நெட்டில் உலாவுவதே வேலையாகவும் அமையலாம்.அவர்களும் கூட வேலைக்கு நடுவே தங்களுக்கு பிடித்தமான தளங்களை போகிற போக்கில் தான் மேய வேண்டும்.
இந்த பீடிகை எதற்காக என்றால் இப்படி அவசரமாக இனைய உலா மேற்கொள்ளும் இணையவாசிகளுக்கு உதவக்கூடிய அருமையான இணைய சேவையை அறிமுக செய்வதற்காக தான்.
அதிலும் குறிப்பாக யூடியூப் பிரியர்களுக்கானது.இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இசைமயமான யூடியூப் பிரியர்களுக்கானது.
மியூப் என்னும் அந்த இணையதளம் உங்கள் கண்ணில் படும் யூடியூப் விடியோ கோப்புகளை சேமித்து வைத்துக்கொள்ள உதவுகிறது.
அதாவது வேலைக்கு நடுவே யூடியூப் பக்கம் எட்டிப்பார்க்கும் போது நல்லதாக ஒரு விடியோ தென்படலாம்.3 அல்லது 4 நிமிடங்கள் ஓடக்கூடியு வீடியோ என்றாலும் அப்போது உடனடியாக பார்ப்பது சாத்தியம் இல்லாமல் போகலாம்.அதிலும் இசை ஆல்பம் தொடர்பான வீடியோ காட்சி என்றால் கொஞ்சம் ஆர அமர கேட்டும் பார்த்தும் ரசிக்க தோன்றும்.
உடனே என்ன செய்வீர்கள்?பின்னர் பார்த்து ரசிக்கலாம் என்று சம்பந்தப்பட்ட வீடியோவை மனதில் குறித்து வைத்து கொள்வீர்கள்.அதன் பிறகு மறந்து போய் விடுவீர்கள்.நேரம் கிடைக்கும் போது நினைத்துப்பார்த்தால் அந்த முகவரியும் மறந்து போயிருக்கும்.அல்லது சரியாக நினைவில் இருக்காது.
எதையும் காகிதத்தில் குறித்து வைக்கும் பழக்கம் இருந்தால் பிரச்சனையில்லை.ஆனால் நம்மில் பலருக்கு அந்த பழக்கம் இல்லையே.
இது போன்ற நேரங்களில் இணைய பக்கங்களை புக்மார்க்காக குறித்து வைக்கலாம் .ஆனால் யூடியூப் வீடியோக்களுக்கு இது சரிபட்டு வருமா?
ஒரு கட்டுரையை மட்டும் பின்னர் படிக்கமாம் என்று சேமித்து வைப்பது போல யூடியூப் வீடியோவையும் அப்படியே செமித்து வைக்க முடிந்தால் எப்படி இருக்கும்?மீயூப் தளம் அதனை தான் செய்கிறது.
இந்த தளத்தில் உறுப்பினரான பின்னர் அவப்போது யூடியூபில் கண்ணில் படும் அழகான வீடியோக்களை உங்கள் கணக்கில் சேமித்து கொள்ளலாம்.நேரம் கிடைக்கும் போது அவற்றை சாவகாசமாக பார்த்து ரசிக்கலாம்.
ஆக இந்த சேவையை பயன்படுத்தினால யூடியூப் விடியோக்களை மறதியால் தவறவிடும் வாய்ப்பே இல்லை.
இந்த தளத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய வீடியோக்களை சேமித்து வைப்பதோடு ஏற்கனெவே மற்றவர்கள் சேர்த்து வைத்துள்ளவற்றையும் கண்டு ரசிக்கலாம்.அந்த வகையில் புதிய வீடியோக்களை பார்த்து ரசிப்பதற்கான வழியாகவும் இது விளங்குகிறது.புதிய வீடியோ காட்சிகளை பார்ப்பதற்கான ஒன்னொரு வழியாக இந்த தளத்திலேயே பிரபலமான வீடியோ காட்சிகளூம் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த தளம் மற்றும் யூடியூப்பில் தேடும் வசதியும் உண்டு.
——–

0 Comments on “யூடியூப் வீடியோக்களை சேர்த்து வைப்பதற்கான இணையதளம்.”
winmani
பயனுள்ள பதிவு நண்பரே.
அஹமது இர்ஷாத்
பகிர்வுக்கு நன்றிங்க