ஞானக்குழந்தை என்று சொல்வதை போல இனாயத்தை டிவிட்டர் குழந்தை என்று வர்ணிக்கலாம்.அதாவது பிறந்தவுடனேயே டிவிட்டர் செய்யத்துவங்கியிருக்கும் குழந்தை.
ஆம் சமீபத்தில் தான் உலகில் அடியெடுத்து வைத்துள்ள இனாயத்திற்கு என தனியே டிவிட்டர் பக்கம் இருக்கிறது.அதன் மூலம் இனாயத் டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருகிறாள்.
பிறந்த குழந்தை டிவிட்டர் செய்வது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்?இனாயத்திற்கு கிடைத்தது போல ஒரு டிவிட்டர் அம்மா இருந்தால் இது சாத்தியமே.அதாவது அம்மா டிவிட்டர் செய்பவராக இருந்தால் தனக்கு குழந்தை பிறந்ததுமே அதன் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்து அதன் சார்பில் டிவிட்டர் பதிவுகளையும் வெளியிடுவார் அல்லவா?
இனாயத்தின் அம்மா குர்சிம்ரன் இப்படி டிவிட்டர் அம்மாவாக இருப்பதால் ஆசை மகள் பிறந்ததுமே அவளுக்கென்று டிவிட்டர் கணக்கை துவக்கியிருக்கிறார்.
இந்த டாக்டரை எனக்கு பிடிக்கவில்லை,எனது மூக்கையும் காலையும் மிகவும் அழுத்தி விட்டார் என்பது போன்ற அந்த சிசுவின் பதிவுகள் சுவையாகவே உள்ளன.இன்னொரு பதிவில் தாய்ப்பால் குடித்து போரடிக்கிறது பிட்சா சாபிட்டால் என்ன என்று கேட்கிறது.
குழந்தையின் சார்பில் குர்சிம்ரன் தான் டிவிட்டர் செய்கிறார் என்றாலும் டிவிட்டரில் ஒலிக்கும் குழந்தையின் குரல் ஈர்க்கவே செய்கிறது.
டிவிட்டர் குழந்தை,டிவிட்டர் அம்மா,எல்லாமே வியப்பாக இருக்கிறது அல்லவா?
குர்சிமரன் இணையதள வடிவமைப்பாளர் என்பதாலோ என்னவோ டிவிட்டரின் அருமை பெருமைகளை நன்கு உணர்ந்தவராக இருக்கிறார்.லைம்லைஸ் என்னும் பெயரில் டிவிட்டர் முகவரி வைத்திருக்கும் அவர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிக்கிறார்.
குர்சிம்ரன் பிரசவத்திற்கு முன்பாகவே டிவிட்டரில் தனது கர்ப கால அனுபவங்களை குறும்பதிவுகளாக வெளியிட்டு வந்தார்.
டாக்டரை பார்க்க சென்றது,பிரசவததிற்கு எத்தனை நாட்கள் உள்ளன,டாக்டர் கிளினிக்கில் காத்திருந்தது,வயிற்றில் குழந்தை உதைப்பது என ஒரு கர்பினியாக தனது அனுபவங்களை அவர் டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொண்டு வந்திருக்கிறார்.
பிரசவ நாள் நெருங்க துவங்கியதும் கவுண்ட் டவுண் உணர்வோடு அவர் பதிவுகள் அமைந்திருந்தன.
குழந்தையின் அசைவு அதிகமாக தெரிகிறது.பிரசவ காலத்தில் குழந்தை இந்த அளவுக்கா உதைக்கும் எனப்து போன்ற பதிவுகள் உயிரோட்டம் மிக்கதாகவே இருந்தன.
இன்னும் கொஞ்சம் நேரம் பார்ப்பேன் இல்லை என்றால் டாக்டரிடம் செல்வேன் என்று மற்றொரு பதிவில் தனது பரபரப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
கர்ப காலத்தில் ஒரு பெண்ணின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்பதை அவரது பதிவுகள் உணர்த்துகின்றன.தாய்மையின் எதிர்பார்ப்பு,துள்ளல்,சந்தேகம் போன்ற உணர்வுகள் அவரது பதிவில் கலந்திருந்தன.
இதனிடையே தனக்கு பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என்ற ஆசையையும் வெளிப்படுத்தியிருந்தார்.குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும் என்று கேட்டு மற்றவர்களின் உதவியையும் நாடியிருந்தார்.
கிட்டத்தட்ட 3000 ஆயிரம் பேருக்கு மேல் அவரது பின்தொடர்பாளாராக சேர்ந்து இந்த பதிவுகளை ஆர்வத்தோடு படித்து கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.குர்சிம்ரனும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லியிருக்கிறார்.இந்த பதிவுகள் துடிப்பான உரையாடல் போல இருப்பதை உணர முடிகிறது.
குழந்தைக்கு இனாயத் என பெயர் வைக்கலாம் என்று சொன்னது கூட அவர்களில் ஒருவர் தான் அதற்கு முன் நன்கைந்து பெயர்களை பரிசீலித்துக்கொண்டிருந்த போதும் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை கூறி தேர்வில் உதவியுள்ளனர்.
இன்னும் சிலர் தங்களுக்கு தெரிந்த மகப்பேரு நிபுணரின் பெயர்களை தெரிவித்ததுள்ளனர்.குழந்தை பிறந்ததுமே பலரும் மனமார வாழ்த்துக்கள தெரிவித்தனர்.அநேகமாக இந்தியாவிலேயே அதிக வாழ்த்துக்களை பெற்ற அம்மாவாக குர்சிமர்னாக தான் இருக்க வேண்டும்.
சிமரனின் கணவர் சுமித்தும் மனவியின் இந்த டிவிட்ட பயணத்தில் ஆர்வத்தோடு உதவி வருகிறார்.சிமரனின் மற்றொரு மகளுக்கும் டிவிட்டர் முகவரி இருக்கிறதாம்.
பின் குறிப்பு; குர்சிம்ரனின் இணையதளத்திற்கு விஜயம் செய்தால் அதன் வடிவமைப்பு அள்ளிக்கொண்டு போகிறது.வண்ணமயமாக இருப்பதோடு கிளிக் செய்யும் இடங்களில் எட்டிப்பார்க்கும் புகைப்படஙகளோடு அசத்தாலாக உள்ளது.
———
—

0 Comments on “டிவிட்டர் முகவரியோடு பிறந்த குழந்தை.”
Pingback: Tweets that mention டிவிட்டர் முகவரியோடு பிறந்த குழந்தை. « Cybersimman's Blog -- Topsy.com
மதுரைசரவணன்
அருமையான் டீவிட்டர் குழந்தை.. பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்
Arul
where is the website link..?
Arul
link is here http://www.gursimran.com/
cybersimman
thanks my friend