கூகுல் பாதி, டிவிட்டர் மீதி;ஒரு டூ இன் ஒன் இணையதளம்

நீங்கள் எப்படியும் இணையத்தில் தகவல்களை தேடப்போகிறீர்கள்.அதற்காக அநேகமாக கூகுலை தான் பயன்படுத்தப்போகிறீர்கள்.அதில் சந்தேகம் தேவையில்லை.

நீங்கள் டிவிட்டர் பயனாளியாக இருந்து தேடல் சார்ந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொள்பவராகவும் இருக்கலாம்.அதாவ‌து இணையத்தில் தேடும் தகவல்கள் சார்ந்த கருத்துக்களை டிவிட்டரில் வெளியிடுவது உங்களுக்கு விருப்பமானதாக இருக்கலாம்.அவ்வாறாயின் இந்த இரண்டையும் ஒரு நேர செய்ய உதவும் இணையதளம் ஒன்று இருக்கிறது.

டிவீட்டபூகுல் என்னும் அந்த தளம் தேடும் போதே டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள‌ வழி செய்கிற‌து.

ஃபேஸ்புக்கும் கூகுலும் இணைந்த வடிவமைப்பை கொண்ட இந்த தளத்தை கூகுலுக்கு பதிலாக பயன்படுத்திக்கொள்ளலாம்.அதாவது இங்கிருந்தே கூகுலில் தேடலாம்.

இணையதலங்கள்,செய்த்கள்,புகைப்படங்கள்,வீடியோக்கள் என தனித்தனியே குறிப்பிட்டு தேடலாம்.

முடிவுகள் கூகுல் வழியாகவே பட்டியலிடப்பட்டாலும் அவை பட்டியலிடப்படும் விதத்தில் தான் வித்தியாசமே உள்ளது.ஒவ்வொரு முடிவுக்கு அடியிலும் தொடர்புடைய டிவிட்டர் பதிவுகள் இடம் பெறுகின்றன.உதாரணத்திற்கு பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் பற்றி நீங்கள் தேடினால் தேடல் முடிவுகளோடு பிரிட்னி தொடர்பான சமீபத்திய டிவிட்டர் செய்திகளையும் கூடவே பார்க்க முடியும்.

டிவிட்டர் போன்ற சமூக வலைப்பதிவு சேவைகளில் பகிர்ந்து கொள்ளப்படும் செய்திகளை தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன.கூகுலிலேயே கூட டிவிட்டர் பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.இது ஒன்றும் பெரிய விஷயமல்ல.

ஆனால் டிவீட்டபூகுல் தளத்தில் என்ன சிறப்பு என்றால் தேடப்படும் பொருள் தொடர்பான டிவிட்டர் செய்திகளை பின் இணைப்பு போல அருகிலேயே காண்பிப்பது தான்.

இதனால் குறிப்பிட்ட பொருள் தொடர்பான டிவிட்டர் கருத்துக்களை சுலபமாக தெரிந்து கொள்ள முடிவதோடு தேவைப்பட்டால் நீங்களும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.இதற்காக டிவிட்டர் கட்டம் போன்ற ஒன்று டிவிட்டர் செய்தி வரிசைக்கு கீழ் இடம் பெற்றுள்ளது.

கருத்து தெரிவிப்பதோடும் நிறுத்திக்கொள்ளலாம்.அல்ல‌து அத்னை டிவிட்டர் செய்தியாகவும் பகிர்ந்து கொள்ளலாம்.அதாவ‌து அந்த செய்தியை உங்கள் டிவிட்டர் பக்கத்தில் தோன்றச்செய்யலாம்.

இங்கு மட்டும் கருத்து தெரிவிக்க நினைத்தால் உங்கள் டிவிட்டர் கணக்கை இயக்க வேண்டாம்.டிவிட்டர் பதிவாக இணைக்க விரும்பினால் இங்கிருந்தே உங்கள் டிவிட்டர் கணக்கில் சைன் இன் செய்தீர்கள் என்றால் அதன் பிறகு உங்கள் கருத்து தானாக டிவிட்டர் பக்கத்திற்கு சென்றுவிடும்.

கூகுலில் தனியே தேடிவிட்டு ,அதில் பார்த்த நல்ல விஷ‌யத்தை டிவிட்டருக்கு சென்று பகிர்ந்து கொள்வதைவிட தேடும் போதே டிவிட்டர் செய்ய முடிவது பயனுள்ளது மற்றும் சுமையை குறைக்க கூடியது தானே.

டிவிட்டர் பயன்பாடு அதிகரித்து மேலும் மேலும் இணையவாசிகள் டிவிட்டரில் இணைந்து வரும் நிலையில் இந்த சேவை எல்லோரையும் கவரக்கூடியது தான்.டிவிட்டர் மட்டுமல்ல பேஸ்புக் செய்திகளையும் இதே போல இங்கிருந்தே இணைக்க முடியும்.

உங்கல் இணைய பழக்கத்தையே மாற்றி அமைக்க கூடிய சேவை என்றெல்லாம் சொல்ல முடியாது ,என்றாலும் இணைய‌த்தின் பிரதானமான இரண்டு செயல்பாடுகளை இணைத்து உருவாக்கப்பட்ட சுவையான சேவை.

ஆர்ப்பாட்டமில்லாமல் இருப்பதோடு அதிக சிக்கல் இல்லாமல் எளிமையாக இருப்பது மேலும் நல்ல விஷயம்.

——-

http://www.tweetaboogle.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுல் பாதி, டிவிட்டர் மீதி;ஒரு டூ இன் ஒன் இணையதளம்

  1. Pingback: Tweets that mention கூகுல் பாதி, டிவிட்டர் மீதி;ஒரு டூ இன் ஒன் இணையதளம் « Cybersimman's Blog -- Topsy.com

  2. LVISS

    I already commented on this. Seems to have got lost . A nice and as usual useful post from you.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *