சந்தை ஆய்வு என்பது வர்த்தக நிறுவங்களுக்கு மட்டும் சொந்தமானதா என்ன?நுகர்வோரும் கூட தான் ஆய்வு செய்கின்றனர்.
பெரும்பாலான நுகர்வோர் எடுத்தவுடன் ஒரு பொருளை வாங்கி விடுவதில்லை.தாங்கள் வாங்க் விரும்பும் பொருள் தொடர்பான அதிகப்டச விவரங்களை தெரிந்து கொள்ள முயற்சி செய்து விட்டு கையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே பொருளை வாங்க முன் வருகின்றனர்.
தீபாவளி பர்சேஸ் என்றால் எந்த எந்த கடைகளில் புதுப்புது டிசைன் வந்திருக்கிறது ,அவற்றின் விலை எப்படி இருக்கிறது ,துணிகளின் தரம் எங்கே சிறந்ததாக இருக்கு என்றெல்லாம் அறிந்த கொண்ட பிறகே கடைகளுக்கு செல்பவர்களை பார்கலாம்.
இவ்வளவு ஏன் காய்கறி வாங்குவதென்றால் கூட மார்க்கெட் முழுவதும் ஒரு சுற்று வந்து விலை நிலவரம் பற்றி விரல் நுனியில் விவரங்களை வைத்து கொண்டு களமிறங்கும் அனுபவசாலி நுகர்வோர்கள் இருக்கின்றனர்.
செல்போன்,டிவி,லேப்டாப் மற்றும் பிற காஸ்ட்லியான மின்னனு பொருட்களை வாங்குவதென்றால் அதற்கு வேறு விதமான ஆய்வு தேவைப்படுகிறது.
விலை,உழைக்கும் தன்மை,வாரன்டி,பிராண்டுகளின் செயல்பாடு மற்ற பயனாளிகளின் கருத்து போன்றவற்றை தெரிந்து கொண்ட பிறகே வாங்குவது சரியாக இருக்கும்.
இண்டெர்நெட் புன்னியத்தால் இத்தகைய ஆய்வை மேற்கொள்வது இன்று மிக சுலபம்.செல்போன் மற்றும் மின்னணு பொருட்களின் தரம் குறித்த தகவல்களை அளிக்கும் இணையதளங்கள் அநேகம் உள்ளன.இவற்றில் நுகர்வோரின் கருத்துக்கள் மற்றும் மதிப்பீடுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.மேலும் நுகர்வோரே எழுதும் வலைபதிவுகளும் இருக்கின்றன.
எனவே வெறும் விளம்பர வாசகங்களை மட்டுமே பார்த்து ஏமாறாமல் இண்டெர்நெட்டில் உலா வந்து விரிவான ஆய்வை நடத்திக்கொள்ளலாம். இதற்கெல்லாம் நேரம் இல்லை,ஆனால் சரியான பொருளாக வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஒரு அருமையான இணையதளம் இருக்கிறது.
ஐஸ்கோபர் என்னும் அந்த தளம் நீங்கள் விரும்பும் மிகச்சிறந்த பொருளை வாங்க உங்களுக்கு உதவுகிறது.அதுவும் எப்படி ,உங்களுக்கு அதிக தொல்லை தராமல் முக சுலபமாக முடிவுக்கு வர கைகொடுக்கிறது.
இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வரிசையாக சில கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது மட்டும் தான்.பதில்களின் அடிப்படையில் எந்த தயாரிப்பை வாங்கலாம் என்ற பரிந்துரை கிடைத்து விடுகிறது.கேள்விகளும் கூட சிக்கலானவை அல்ல.உங்கள் எதிர்பார்ப்பு மற்றும் தேவையை புரிந்து கொள்வதற்கானவை.
உதாரனத்திற்கு நீங்கள் கம்ப்யூட்டர் வாங்க விரும்புகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்,அந்த கம்ப்யூட்டர் சொந்த பயன்பாட்டிற்கானதா,அலுவலகத்திற்கானதா,அதன் செயல்திறன் எப்படி இருக்க வேண்டும்(இசை,வீடியோ,கேம்),மானிட்டர் தேவையா,அதிக நேரம் பயன்படுத்துவீர்களா போன்ற கேள்விகள் வரிசையாக கேட்கப்பட்டு அதனடிப்படையில் பொருத்தமான தயாரிபுகள் பரிந்துரை செய்யப்படுகின்றன.
ஆனால் பாவம் சிலருக்கு தங்கள் தேவை என்ன என்பதிலும் தெளிவில்லாமல் இருக்கும் அல்லவா? அவர்களூக்கு ஏற்ப குழப்பமாக உள்ளது என்று பதில் தரும் வாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.அதே போல குறிப்பிட்ட பிராண்ட விருப்பம் என்றால் அதனையும் குறிப்பிடலாம்.
இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்த பின் பொருத்தமான தயாரிப்புகள் பரிந்துரைக்கப்படும் போது அவை தொடர்பான புகைப்படங்கள்,நுகர்வோர் கருத்து மற்றும் மதிப்பீடுகளும் இடம்பெற்றிருக்கும்.
செல்போன்கள்,கம்ப்யூட்டர்,லேப்டாப்,டிவி,டிஜிட்டல் காமிரா,எம் பி 3 பிளேயர்,பிரின்டர் ஜிபிஎஸ் சாதனங்கள் ஆகிய பொருட்கள் பற்றிய பரிந்துரையை இந்த தளம் வழங்குகிறது.
மின்னணு சாதங்கள் தொடர்பான நிபுணர்களின் கருத்துக்கள் ,இணையதளங்கள்.வலைப்பதிவுகளில் குறிப்பிடப்படும் கருத்துக்கள்,விவாதங்கள் ,ரேட்டிங்குகள் விமர்சனங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரையை இந்த தளம் தீர்மானிக்கிறது.
அப்படியே இந்த தளம் சொல்லும் பொருளை வாங்க வேண்டும் என்றில்லை.அல்லது இதன் பரிந்துரை 100 சதவீதம் துல்லியம் என்றோ சொல்ல முடியாது.ஆனால் முடிவு எடுப்பதற்கு முன்னர் பொருட்கள் பற்றிய சரியான அறிமுகத்தை தெரிந்து கொள்ள இந்த சேவை நிச்சயம் உதவும்.
இணைய தள முகவரிhttp://www.iscoper.com/

0 Comments on “ஷாப்பிங் செய்ய கைகொடுக்கும் இணையதளம்”
சதீஷ்
சிம்மன் ஐயா!
ஒரு அற்புதமான வலைதளம்.மிக்க நன்றி. மேலும், உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ள, அத்தியாவசிய தேடல்களுக்கான தீர்வுகள் பகரும் தளமாக உணர்கிறேன். தொடரட்டும் உமது பணி!
t.kapilan
ple send any hacking software details.example email hack