எங்கும் கேட்கலாம் பாட்டு ;ஒரு அருமையான இணைய சேவை

இசைப்பிரியர்களுக்கான இணைய சேவை.பாடல்களை கேட்பதற்காக அறிமுகமாகியுள்ள மவுக் இணையதளத்தை இப்படி வர்ணிக்கலாம்.

பாடல்களை கேட்கவும் தரவிறக்கம் செய்யவும் பல இணையதள‌ங்கள் இருக்கவே செய்கின்றன என்றாலும் மவுக் மிகவும் விஷேசமானது.எந்த தளத்தில் பாடல்களை தரவிறக்கம் செய்தாலும் சரி அவற்றை எங்கேயும் கேட்டு மகிழ உதவுவதே இதன் தனிச்சிறப்பு.

அதாவது ஒரே இடத்தில் பாடல்களை கேடக‌ மவுக் உதவுகிறது.

இணையத்தில் பாடல்களை பல தளங்களில் இருந்து தரவிரக்கம் செய்பவர்களுக்கு இதன் அர்த்தம் மற்றும் அற்புதம் சொல்லாமலேயே விளங்கும்.

ஆசை ஆசையாக ஒரு கம்ப்யூட்டரில் பாடல்களை தரவிறக்கம் செய்து சேமித்து வைத்திருப்போம்.அந்த கம்ப்யூட்டர் வீட்டில் பயன்படுத்துவதாக இருக்கும்.எனவே அலுவலகத்தில் இருக்கும் போது பாடல்களை கேட்க நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லாமல் போகும்.அதே போல ஒரு சில இணையதளங்களில் நமக்கான பாடல் பட்டியலை உருவாக்கி வைத்திருப்போம்.அதனை இன்னொரு தளத்தில் இருந்து அணுக முடியாது.

சிலர் செல்போனிலும் பாடல்களை சேமித்து வைத்திருப்பார்கள் .அவற்றை கம்ப்யூட்டருக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்படலாம்.

இவற்றுக்கெல்லாம் தீர்வாக தான் மவுக் உருவக்கப்பட்டுள்ளது.மவுக் தள‌த்தில் உருப்பினரான பின் பிடித்தமான பாடல்களை இங்கேயே சேமித்து கொள்ளலாம்.அதன் பிறகு எந்த இடத்தில் இருந்தாலும் சரி மவுக் மூலம் பாடல்களை கேட்கலாம்.

தற்போது இணைய உலகில் பிரபலமாக இருக்கும் கருத்தாக்கமான கிளவுட் கம்ப்யூட்டியிங் அடிப்படையில் மவுக் செய‌ல்ப‌டுவதால் இணையவாசிகளின் பாடல் குறிப்பிட்ட இடத்தில் அல்லாமல் இணையத்தில் சென்று கலந்து விடுகிறது.ஆகவே மவுக்கில் உள்ள பாடல்களை எநத் கம்ப்யூட்டரில் இருந்தும் அணுக முடியும்.

கம்ப்யூட்டர் என்றில்லை செல்போன் உட்பட இணைய இணைப்பு உள்ள எந்த சாதனம் மூலமும் பாடல்களை கேட்க‌லாம்.இதற்காக எந்த சாப்ட்வேரையும் தரவிறக்கம் செய்ய வேண்டாம்.எந்த சாப்ட்வேரையும் பொருத்தவும் தேவையில்லை.

உண்மையில் சாப்ட்வேரே ஒரு காலாவதியான சங்கதி என்று இந்த தளம் சொல்கிறது.கிளவுட் கம்ப்யூட்டிங் என்பதே அது தானே.தனியே சாப்ட்வேர் என்று தேவையில்லாமல் எல்லாவற்ரையும் இணையத்திற்கே கொண்டு செல்ல கிளவுட் கம்ப்யூட்டிங் உதவுகிறது.

அந்த வகையில் பாடல்களையும் இணைய மேகமாக்கி கொள்ளும் சேவையை தான் மவுக் வழி செய்துள்ள‌து.

மவுக் நிச்சயம் இசை பிரியர்களை கவரும் .ஆனால் ஒன்று .மவுக் இலவச‌மாக ஒரு ஜி பி மட்டுமே இடம் வழங்குகிற‌து.மேற்கொன்டு இடம் தேவை என்றால் கட்ட‌ணம் செலுத்த வேண்டும்.
 
எவ்வளவு பாடல் தேவையோ அந்தாளவுக்கு கட்டணம் என்று வைத்து கொள்ளுங்க‌ளேன்.

எந்த இடத்தில் இருந்தும் பாடல்களை கேட்க வேண்டும் என்றால் அந்த வசதிக்கான விலையை கொடுக்க தானே வேண்டும்.

கிளவுட் கம்ப்யூட்டிங் சாப்ட்வேர் மற்றும் கம்ப்யூட்டர் பிடியில் இருந்து விடுதலை தருகிற‌து.ஆனால் அதே நேரத்தில் எதுவும் இலவசமில்லை எலாவற்றுக்கும் ஒரு விலையுண்டு என்னும் கருத்தை மீண்டும் வலியுறுத்தவும் செய்கிறது.

இண்டெர்நெட்டில் இனி வரும் சேவைகளை கட்டண சேவையாகவே இருக்கும் என்பதற்கான அறிகுறியாகவும் மவுக் சேவையை கருதலாம்.

இணையவாசிகளுக்கு இது தித்திக்கும் செய்தி அல்ல என்றாலும் எதிர் கால நிஜம் இது தான்.

———-

http://www.mougg.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எங்கும் கேட்கலாம் பாட்டு ;ஒரு அருமையான இணைய சேவை

  1. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே…
    நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *