ஒரு வலைப்பதிவால் அல்லது வலைப்பதிவாளரால் என்ன செய்துவிட முடியும்?என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் பார்சிலோனாவில் வசிக்கும் பிரிட்டிஷ் வலைப்பதிவாளர் எட்வர்ட் ஹியூஜ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
61 வயதாகும் ஹீயூஜ் இன்று பொருளாதார உலகால் வியப்புடனும் அதைவிட அதிக மதிப்புடனும் பார்க்கப்படுகிறார்.யூரோ பிரச்சனையால் தவிக்கும் ஐரோப்பாவும் இந்த சிக்கலால் உலக பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்படும் என கவலைப்பட்டு கொண்டிருக்கும் சர்வதேச பொருளாதார நிபுணர்களும் ஹியூஜ் சொல்லும் கருத்துக்களை ஆவலோடு கேட்டு வருகின்றனர்.சர்வெதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் அவரிடம் ஆலோசனை கேட்கின்றன. பொருளாதார மாநாடுகளுக்கு அவர் அழைக்கப்படுகிறார்.
சுருக்கமாக சொன்னால் இப்போது உலகம் போற்றும் பொருளாதார மேதை அவர்.
ஆனால் உலகம் அறிந்த பொருளாதார நிபுணர்களிடம் இருந்து அவர் வேறுபட்டவர்.
பல்கலைக்கழகத்தில் படித்து டாக்டர் பட்டம் பெற்று பெரும் ஆய்வு கட்டுரைகளை எழுதி நிபுணர் பட்டம் சூடிக்கொள்ளும் பேராசிரியர்கள் போல அல்லாமல் அவர் சுயம்பாக தானே உருவானவர்.ஒரு விதத்தில் அவரும் படிக்காத மேதை தான்.அதாவது சரியாக படிக்காத மேதை.
அவருக்கு படிப்பதில் இருந்த ஆர்வம் பட்டத்தை முடிப்பதில் இருக்கவில்லை.டாக்டர் பட்டம் படிக்கும் போது ஆய்வுக்கான நிதியை பெற்றுக்கொண்டு அதற்காக உழைக்காமல் இஷடம் போல் படித்துக்கொண்டு விரும்பிய வகுப்புகளில் சேர்ந்து படிக்கும் திருடன் என்று தனது பேராசிரியரால் வர்ணிக்கப்பட்டதாக அவரே குறிப்பிடுகிறார்.
டாக்டர் பட்டத்தை முடிக்கவில்லையே தவிர ஹியூஜ்சுக்கு பொருளாதாரத்தில் மோகமும் ஆர்வமும் அதிகம்.தானே புத்தகங்களை படித்து தானே சிந்தித்து பட்டை தீட்டிக்கொண்டவர்.பொருளாதார பிரச்ச்னைகளை புரிந்து கொள்வதிலும் அவற்றை விளக்குவதிலும் அவருக்கு அதீத ஆர்வம் இருந்த்து.
ஆனால் பலகலை பின்னணி இல்லாமல் என்ன சாத்தித்துவிட முடியும்.பகுதி நேர ஆசிரியராக சொற்ப வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்த ஹியூஜ்ஸ் எந்த கட்டத்திலும் படிப்பதையும் சிந்திப்பதையும் நிறுத்திவிடவில்லை.
இத்தகைய சுய அறிவிஜீவிகளை நம்மூரிலும் கூட பார்க்கலாம்.ஆனால் இவர்களின் திறமை வெளி உலகிற்கு தெரிவது எப்படி?
ஹியூஜ்சைப்பொருத்தவரை பட்டங்கள் பற்றியோ பதவி பற்றியோ கவலைப்படாமல் தனது அறிவுத்தேடலில் ஈடுபட்டு வந்தார்.பொருளாதார கருத்துக்களை பெரிய மாநாடுகளீல் ஆய்வு கட்டுரைகளாக மட்டும் தானா பகிர்ட்ந்து கொள்ள வேண்டும்.இணைய யுகத்தில் வலைப்பதிவு வாயிலாகவும் கருத்துக்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா?ஹியூஜ்ஸ் அதனை தான் உற்சாகமாக செய்து வந்தார்.
மாநாடுகளுக்கு செல்லும் போது கவுரவமும் அங்கீகாரமும் கிடைக்கும்.கூடவே பணமும் கிடைக்கும்.புகழும் சேரும்.வலைப்பதிவு மூலம் பேசிக்கொண்டிருந்தால் என்ன கிடைத்து விடப்போகிறது?இத்தகைய விரக்தி இல்லாமால் தனது கருத்துக்களை பதிவு செய்வதற்கான மேடையாக வலைப்பதிவை கருதி அவர் பொருளாதார பிரச்சனைகள் குறித்த தனது சிந்தனைகளை பதிவு செய்து வந்தார்.
ஆனால் சும்மா சொல்லக்கூடாது ஐரோப்பிய பொருளாதாரம்,சர்வதேச பொருளாதாரம்,ஐரோப்பியவுக்குள்ளேயே ஸ்பெயின் பொருளாதாரம்,பிரான்ஸ் பொருளாதாரம்,ஜெர்மனி பொருளாதாரம் என விரிவாக கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
இந்த பதிவுகளை எத்தனை பேர் படித்தனர் ,யாரெல்லாம் பாரட்டினர் என்று தெரியவில்லை.ஆனால் அவரது கருத்துக்களை எல்லோரும் பொருட்படுத்த வேண்டிய ஒரு கட்டம் வந்தது.
2008ம் ஆண்டில் அமெரிக்க பொருளதாரம் நிலைகுலைந்து போன்து அல்லவா?அதன் பாதிப்பில் இருந்தே உலகம் மீள முடியாமல் திணறிக்கொண்டிருந்த நிலையில் ஐரோப்பவில் யூரோ நாணய பிரச்சனை வெடித்தது.
ஒழுங்காகதானே போய்க்கொண்டிருந்தது அதற்குள் என்ன ஆயிற்று என உலகம் ஐரோப்பவை பார்த்து திகைத்த நிற்க கீரீஸ் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார நெருக்கடியும் வேலையில்லா திண்டாட்டமும் ஆட்டிப்படைக்கத்துவங்கின.
பொதுவாக ஐரோப்பிய நாடுகள் பொருளாதார ரீதியாக வலுவானவையாக நிலையானவையாக கருதப்பட்ட வந்த நிலையில் யூரோ சிக்க்ல எதிர்பாராமல் குலுங்க வைத்த்து இதனால் நாணய சந்தையில் உள்ளூர் நானயத்தின் மதிப்பு சரிந்து அதன் பாதிப்பு சர்வதேச நாடுகளையும் பதம் பார்க்கும் நெருக்கடி உண்டானது.
அமெரிக்க பொருளதார சீர்குலைவின் போது கூட யூரோவில் வர்த்தகம் செய்வது பாதுகாப்பனது என சொல்லப்பட்டு வந்தது.யூரோ கையிருப்பு பொருளாதார சரிவுகளின் போது தாங்கி நிற்க கூடியது என பேசப்பட்டது.
பல நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒண்றியம் போன்ற கூட்டமிப்பிற்கு ஒரே பொது நாணய்ம என்பது ஒரு முன்மாதிரு என்றெல்லாம கூட பொருளாதார நிபுணர்கள் வாதிட்டு வந்தனர்.
ஆனால் ஐரோப்பாவில் பொருளாதார பிரச்சனை வெடிக்கும் என்றோ அதற்கு பொது நாணயம் தான் முக்கிய காரனமாக இருக்கும் என்றோ யாரும் எதிரபார்க்கவில்லை.குறிப்பக பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கவில்லை.
பிரச்ச்னை பெரிதாக் வெடித்து ,ஒவ்வொரு நாடாக பாதிக்கப்படத்துவங்கிய நிலையில் தான் நிடஹ் பிரச்சனைக்கு காரணம் என்ன ,இதற்கு தீர்வு என்ன என்றெல்லாம் யோசிக்கத்துவங்கினர்.எதிர்பாராத பிரச்சனை என்பதால் நிபுணர்களும் ஆடிப்போய்விட்டனர்.
பொருளாதார உலகமே செய்வதறியாமல் திகைத்து போயிருந்த நிலையில் ஒருவர் மட்டும் ‘நான் தான் அப்போதே சொன்னேனே’ என்பது போல அர்த்தமுள்ள புன்னகையோடும் உலகம் படும் பாட்டால் ஏற்பட்ட பரிதாப உணர்வோடும் அடக்கமாக காட்சி தந்தார். அவர் தான் ஹியூஜ்ஸ்.
காரணம் வலைப்பதிவில் அவர் இந்த பிரச்சனைகள் பற்றி தான் எழுதி வந்தார்.ஐரோப்பாவே சுபீட்ச பூமியாக கொண்டாடப்பட்டு வந்த போது அவர் மட்டும் இல்லை மிகப்பெரிய பொருளாதார பிரச்சனை வரப்போகிறது என எச்ச்ரிக்கை செய்து வந்தார். யூரோ நெருக்கடிம் தவிர்க்க இயலாதது என்றும் அதற்கான காரணங்களையும் அவர் விளக்கி விரிவாக எழுதி கொண்டிருந்தார்.
ஆனால் அப்போது அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை.(அவரது அபிமான வாசக்ரகளைத்தவிர)யூரோ பிரச்சனை வெடித்த போது தான் கடந்த சில ஆண்டுகளாகவே அவர் இது பற்றி எச்சரித்து வந்தது கவத்திற்கு வந்தது.மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்கள் எல்லாம் கோட்டை விட்ட போது வர் மட்டும் எப்படி வரும் முன் உரைத்தார் என நிபுணர்களும் பத்திரிக்கையாளர்களும் விய்ந்து போனதோடு அவரது கருத்துக்களை ஈடுபாட்டடோடு படிக்கத்துவங்கினார்.
அப்போது தான் ஹியூஜ்ஸ் எத்தனை தொலைநோகோடு பிரச்சனையை புரிந்து கொண்டு எச்சரிக்கை செய்துள்ளார் என தெரிந்தது.
ஐரோப்பாவை உலுக்கும் பொருளாதார சிக்கல் உருவான விதம் புரியாத புதிராகவே இருந்த நிலையில் ஹியூஜ்ஸ் அதனை முன்கூட்டியே உணர்ந்து எழுதிய விதமும் அவர் எடுத்து சொன்ன காரணங்களும் தீர்கதரிசனம் மிக்கவையாக இருந்தன.
இத விளைவாக இன்று ஹியுஜ்ஸ் சொலவது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.பொருளாதார அமைப்புகள் அவரிடம் ஆலோசனை கேட்கின்றன.மாநாடுகளுக்கு அழைக்கப்படுகிறார்.
பத்திரிகைகளூம் நாளிதழ்களும் அவர் கருத்துக்களை கட்டுரைகளாக வெளியிடுகின்றன.தீர்வுக்கும் அவரிடமே எதிர்பார்த்து நிற்கின்றன.
ஒரு காலத்தில் அதிகம் கவனிக்கப்படாதவராக இருந்த ஹியூஜ்ஸ் இன்று மக்கள் போற்றும் பொருளாதார மேதையாக உயர்ந்து நிற்கிறார்.
சர்வதேச மாநாட்டிற்கு செல்வதற்காக நல்ல கோட்டு வாங்க நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கும் அளவுக்கு கையில் காசில்லாதவராக இருந்த ஹியூஜ்சுக்கு இன்று கவுரவமும் செலவமும் தேடி வருகிறது.எல்லோரும் வளமாக இருந்த போது நான் நலிவுற்றிருந்தேன். இன்று வேலையில்லா திண்டாட்டம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கட்டத்தில் நான் நன்றாக இருக்கிறேன் என்ன முரண் பார்த்தீர்களா என்று அவர் கூறியிருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள் ஹியூஜ்ஸ் வலைப்பதிவு மூலம் தானே இதனை சாத்தித்துள்ளார்.
என்னைப்போன்ற குறிப்பிட்ட துறையில் கவனம் செலுத்தாமல் ஆர்வத்தின் காரணமாக எல்லாவற்றிலும் நுழைந்து கண்டதையும் படித்து சிந்த்தித்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இண்டெர்நெட்டே சரியான வடிகால் என்று அவரே இத்னை அழகாக விளக்கியுள்ளார்.இண்டெர்நெட் யுகத்திற்கு முன் என்னைப்போன்ற ஒருவர் வெளிப்படுத்த வழியில்லாமல் திண்டாடிப்போயிருப்பேன் என்று அவர் கூறுகிறார்.
வலைப்பதிவை உத்வேகத்தோடு பயன்படுத்திகொண்டவராக ஹியூஹ்ஸ் திகழ்கிறார்.
அவரது வலைப்பதிவுக்கு சென்று பார்த்தால் பொரூளாதார உலகம் குறித்து அவர் எழுதியுள்ள பரந்து விரிந்த ஆழமான பதிவுகளின் அளவு வியக்க வைக்கிறது.
அது மட்டும் அல்ல அவர் எழுதியுள்ள விதமும் வியப்பாக இருக்கிறது.மிக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் பொருளாதார சிக்கல்களையும் அவற்றுக்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளார்.
0——
(வணிகமணி இதழில் வெளியான கட்டுரை)

0 Comments on “வருங்காலம் சொன்ன வலைப்பதிவாளர்”
முத்துலெட்சுமி
super
ஜெகதீஸ்வரன்
ஆச்சரியம்.ய
cybersimman
ஆம் உண்மை தான்