விக்கிபீடியா பிரியர்களுக்கு என்று ஒரு தேடியந்திரம் இருக்கிறது தெரியுமா?
விக்கிபீடியாவிலேயே தகவல்களை தேடும் வசதி இருந்தாலும் இதற்காக என்றே தனியே ஒரு தேடியந்திரம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கலுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் விக்கிவிக்ஸ் என்ற அந்த தேடியந்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட இதனை விக்கி தகவல்களுக்கான கூகுல் என்று சொல்லலாம்.
விக்கிபீடியாவில் எதனை தேட விரும்புகிறோமோ அதனை குறிப்பிட்டால் தொடர்புடைய முடிவுகளை அழகாக பட்டியலிடுகிறது.விக்கிபீடியா மட்டும் அதன் அல்ல தோழர்களான விக்கிநியூஸ்,விக்கிகோட்,விக்கிஷனரி,விக்கிசோர்ஸ்,விக்கிபுக்ஸ் என பலவிதமான இடங்களில் இருந்து தகவல்களை பெற முடியும்.
அதோடு கட்டுரைகள்,புகைப்ப்டங்கள் மற்றும் வரைபடம் என தனிதனியே குறிப்பிட்டும் தேடலாம்.இணைய இனைப்பு இல்லாத நேரத்திலும் சேமித்து வைத்து படிக்கும் கூடுதல் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இவற்றோடு அபிமான இணையதளங்கள் மற்றும் கடைசியாக பார்த்த இணையதளங்களை குறித்து வைத்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
விக்கிபீடியா கட்டுரைகளுக்கான ஆகச்சிரந்த தேடியந்திரம் என வர்ணித்துக்கோள்ளும் இதனை விக்கிபிரியர்களுக்கான விஷேச தேடியந்திரம் என்றே சொல்ல வேண்டும்.
லின்டெர் வெப் என்னும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள் தேடியந்திரம் இது.
இந்நிறுவனம் விக்கி காடுரைகளுக்காக மற்றொரு அருமையான இணைய சேவையையும் வழங்கி வருகிறது.ஒகேவிக்ஸ் என்னும் அந்த சேவை விக்கிபீடியா முழுவதையும் டவுண்லோடு செய்து வைத்து கொண்டு பின்னர் பொருமையாக படிக்க உதவுகிறது.
அதாவது விக்கிபீடியாவை இணைய இணைப்பில்லாமலேயே படிக்க முடியும்.ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த வசதி இருக்கிறது.புகைப்படங்களுடன் மற்றும் புகைப்படம் இல்லாமல் கட்டுரைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வின்டோச்,மேக்,லினக்ஸ் ஆகியவற்றுக்கென தனித்தனி வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
விக்கிபீடியா கட்டுரைகளை புத்தகமாக அச்சிட்டு கொள்ளும் வசதி ஏற்கனவே அறிமுக செய்யப்பட்டுள்ளதை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம்.ஆனால் அந்த வசதி இன்னும் பரவலாகவில்லை.
அது போல் இல்லாமல் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த சேவை அறிமுகமாகியுள்ளது.எதையுமே பொருமையாக படிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த சேவை நிச்சயம் கைகொடுக்கும்.அதோடு விக்கிபீடியாவிலேயே உடகார்ந்திருந்தால் இணைய கட்டணம் அதிகமாகிறது என்ற கவலை உள்ளவர்களுக்கும் இந்த சேவை மகிழ்சியை அளிக்கும்.
இணையதள முகவரி;http://wikiwix.com/
http://www.okawix.com/

0 Comments on “விக்கிபீடியாவில் தேட ஒரு தேடியந்திரம்”
எஸ். கே
ரொம்ப நல்ல தகவல்! பயனுள்ளதாக இருக்கும்! நன்றி!
cybersimman
பாராட்டுக்கு நன்றி நண்பரே.