பேஸ்புக் இமெயில் சேவையை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது.இதன் மூலம் இணைய ராஜாவான கூகுலின் ஜிமெயில் சேவையோடு மல்லுக்கட்ட தயாராகி உள்ள பேஸ்புக் மற்றொரு வகையிலும் கூகுலுக்கு எதிராக வியூகம் வகுத்துள்ளது.அதாவது பேஸ்புக் தனது பயனாளிகளை பேஸ்புக்கை அவர்களின் முகப்பு பக்கமாக வைத்து கொள்ள கோரி வருகிறது.இதற்காக பிரத்யேக பட்டன் ஒன்றையும் அறிமுகம்செய்துள்ளது.
தற்போது பெரும்பாலானோர் கூகுலையே முகப்பு பக்கமாக வைத்துள்ளனர்.அல்லது பலரும் முதலில் விஜயம் செய்யும் பக்கம் கூகுலாகவே இருக்கிறது.கூகுலின் சிறப்பான தேடல் சேவையே இதற்கு காரணம்.ஆனால் பேஸ்புக் இதனை மாற்ற விரும்புகிறது.
பேஸ்புக்கிலும் தேடல் வசதி உண்டு.அதோடு சமூக வலைப்பின்னல் சார்ந்த தேடலே எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்கின்றனர்.எனவே இணையத்தின் சக்தி வாய்ந்த தளம் என்னும் பெருமையை கூகுலிடம் இருந்து தட்டிப்பறிக்க பேஸ்புக் காய்களை நகர்த்துகிறது.
இந்த மவுன யுத்தம் ஒரு புறம் இருக்கட்டும்.இணைய உலகின் நம்பர் ஒன் அந்தஸ்து பேஸ்புக்கிற்கு கிடைக்கிறதா?அல்லது கூகுலின் ஆதிக்கம் அசைக்க முடியாமல் தொடருமா என்னும் கேள்வி எழுப்பபடும் இந்த கட்டத்தில் இணைய உலகை கொஞ்சம் திரும்பி பார்க்க வைக்கிறது பிசிவேர்ல்டு கட்டுரை.
இண்டெர்நெட்டை ஆட்சி செய்த 5 கட்டுரைகள் என்னும் தலைப்பிலான அந்த கட்டுரை ஒரு காலத்தில் இணையவாசிகள் மத்தியில் செல்வாக்கு பெற்று திகழ்ந்த 5 இணையதளங்களை சுட்டிக்காட்டுகிறது.
ஜியோசிட்டிஸ்,மைஸ்பேஸ்,ஸ்லாஷ்டாட்,ஹாட்மெயில்.மற்றும் அல்டாவிஸ்டா ஆகியவை தான் அந்த இணையதளங்கள்.
இதில் மைஸ்பேஸ் சமீப காலம் வரை இணைய உலகின் அபிமான சமூக வலைப்பின்னல் தளமாக விளங்கியது.அதாவது பேஸ்புக் பிரபலாமாகும் வரை.பேஸ்புக் எழுச்சிக்கு பிறகு மைஸ்பேசை யாரும் கண்டு கொள்வதில்லை.கொஞ்சம் பரிதாபம் தான் இது.
ஹாட்மெயில் உலகின் முதல் இணையம் சார்ந்த இமெயில் சேவை.ஒரு காலத்தில் இமெயில் என்றால் ஹாட்மெயில் என்று தான் இருந்தது.அதோடு ஹாட்மெயிலை உருவாக்கிய நம்மூர் சபீர் பாட்டியா அதனை மைக்ரோசாப்டிற்கு விற்று இணைய கோடீஸ்வரரான கதையும் மிக பிரபலம்.இன்று ஜிமெயில் யுகத்தில் ஹாட்மெயிலும் மறந்து போச்சு.சபீர் பாட்டியாவும் மறக்கப்பட்டு விட்டார்.
மைக்ரோசாப்டால் கூகுலையும் ஒன்றும் ஜீமெயிலையும் அசைக்க முடியவில்லை.
இன்று ஹாட்மெயிலை எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை.அதைவிட அல்டாவிஸ்டாவை எத்தனை பேருக்கு தெரியும் என்பது சுவையான கேள்வி?
ஒரு காலத்தில் அல்டாவிஸ்டா தான் இனைய உலகின் முன்னணி தேடியந்திரம்.மிகச்சிறந்து என்றும் கருதப்பட்டது.இன்றோ அல்டாவிஸ்டாவா அப்படியொரு தேடியந்திரமா என்று பலரும் கேட்க கூடும்.
ஆனால் தேடல் என்பது ஒரு கலையாக இருந்த காலத்தில் அல்டாவிஸ்டா தான் அசத்திக்கொண்டிருந்தது.அப்போதெல்லாம் இணையத்தில் தகவல்களை தேடி பெறுவது அத்தனை சுலப்ம அல்ல.முதலில் ஒரு கீவேர்டை போட்டு பார்க்க வேண்டும் .அது பலன் தரவில்லை என்றால் வேறு சில கீவேர்டுகளை மாற்றி போட்டு தேடிப்பார்க்க வேண்டும்.மேலும் அந்த காலத்தில் இணையத்தின் அனைத்து பக்கங்களும் தேடியந்திரங்களில் பட்டியலிடப்படவில்லை.
இப்படி ஒரு காலத்தில் தேடலின் ராஜாவாக அல்டாவிஸ்டா இருந்தது.ஆச்சர்யப்படும் வகையில் இன்றும் இந்த தேடியந்திரம் இருக்கிறது.அதிகம் பேர் பயன்படுத்துவதில்லை.
அதே போல சில ஆண்டுகளுக்கு முன் வரை ஸ்லாஷ்டாட் என்ரால் சும்மா அதிருத்துல்லே என்று கேட்க தோன்றும்.சுவையான மற்றும் தொழிநுட்ப சிரப்பு வாய்ந்த கட்டுரைகளுக்கு இனைப்பு கொடுத்து அறிமுகம் செய்த இந்த இனையதளம் கீக்களின் வேடந்தாங்கலாக திகழ்ந்தது.அதோடு இந்த தளத்தில் இணைப்பு கொடுக்கப்பட்டால் இணையவாசிகள் வந்து குவிந்து விடுவார்கள்.சில நேரங்களில் இனைப்பு தரப்பட்ட தளம் இணையவசிகளின் வருகை தாளாமல் திணறிப்போய் முடங்கியதும் உணடு.இது ஸ்லாஷ்டாட் விளைவு என்று குறிப்பிடப்பட்டு வந்தது.
ஆனால் டிக் போன்ற சமுக புக்மார்கிங் சேவை வந்த பிறகு ஸ்லாஷ்டாட் முக்கியத்துவம் இழந்துவிட்டது.இன்று அதன் அபிமானிகளூக்கான தளமாக அது சுருங்கிவிட்டது.
ஜியோசிட்டிஸ் இனையதளம் என்பது பெரிய விஷயமாக இருந்த காலத்தில் சொந்த இனையதளத்தை உருவாக்கி கொள்ளும் வசதியை அளித்த அற்புதமான தளம்.ஆனால் வலைப்பதிவுகளை உருவாக்கி கொள்வது எளிதான பின்னர் இதற்கு வேலையில்லாமல் போய்விட்டது.இந்த தளம் மூடப்பட்டும் விட்டது.
ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்த தளங்கள் பற்றிய நினைவுகள் வருத்ததையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தலாம்.
எல்லாம் சரி,இப்போது டாப் 5 தளங்கள் எவை என்று தெரியுமா?
கூகுல்,பேஸ்புக்,டிக்,டிவிட்டர்,…ஐந்தாவது இடத்தில் உங்களுக்கு பிடித்தமான தளத்தை சேர்த்து கொள்ளுங்கள்.

0 Comments on “ஒரு காலத்து இணையதளங்கள்;இணைய பிளேஷ்பேக்”
எஸ். கே
நல்ல தகவல்!
Jaleel
Del.ico.us
cybersimman
ok