உலகம் எப்படி டிவிட்டர் செய்கிறது என்பதை அறியும் ஆர்வம் இருந்தால் அதற்கான விடையை வரைபடம் மூலமாக வழங்குகிறது ஏ வேர்ல்டு ஆப் டிவீட்ஸ் இணையதளம். அதாவது உலகின் எந்த எந்த பகுதிகளில் எத்தனை பேர் டிவிட்டர் பதிவுகளை வெளியிடுகின்றனர் என்பதை இந்த தளம் வரைபடத்தின் மூலமாக உணர்த்துகிறது. டிவிட்டரையும் வரைபடத்தையும் இணைக்கும் சேவைகள் ஏற்கனவே இருக்கின்றன.அவை பெரும்பாலும் டிவிட்டர் பதிவுகளை பூகோளரீதியாக பின்தொடர வழிசெய்கின்றன.அதாவது டிவிட்டர் செய்பவர்களின் இடம் வரைபடத்தின் மீது சுட்டிக்காட்டப்படும்.அங்கே கிளிக் செய்தால் அந்த டிவிட்டர் பயனாளியை பின்தொடரலாம். தனிப்பட்ட டிவிட்டர் பயனாளிகளில் யாரை பின்தொடர்லாம் என்பதை முடிவுசெய்ய இவை உதவலாம்.ஆனால் வேர்ல்டு ஆப் டிவீட்ஸ் இணையதளம் டிவிட்டர் பதிவுகளை ஒரு பறவை பார்வையாக பார்க்க உதவுகிறது.அதாவது டிவிட்டர் தொடர்பான புள்ளிவிவரங்களை காட்சிரீதியாக புரிந்து கொள்ள வைக்கிறது. விவசாய உறபத்தி போன்ற விவரங்கள் வரைபடத்தின் மீது பல வண்ணங்களில் உணர்த்தப்படுவது உண்டல்லவா அதே போல இந்த தளம் டிவிட்டர் பதிவுகளின் அடர்த்தியை பூகோளரீதியாக சுட்டிக்காட்டுகிறது.எந்த நாடுகளில் இருந்து அதிக டிவிட்டர் பதிவுகள் வெளியாகின்றனவோ அந்த பகுதிகள் அதற்கேற்ற வண்ணங்களில் அடையாளம் காட்டப்படுகின்றன. கடந்த ஒரு மணி நேரத்தில் பதிவாகும் டிவிட்டர் பதிவுகளின் எண்ணைக்கை அடிப்படையில் இந்த விவரங்கள் அமைகின்றன. ஆக இந்த வரைபடத்தை பார்த்தாலே இப்போது எந்த பகுதியில் அதிக பதிவுகள் வெளியாகின்றன என்பதை தெரிந்து கொண்டு விடலாம். வெறும் புள்ளிவிவரங்களின் பதிவு தான் என்றாலும் அவற்றை காட்சி படுத்துவதன் மூலம் சுவார்ஸ்யமான தகவல்களையும் புரிதல்களையும் பெற இது உதவுகிறது. வரைப்படத்தின் கீழே புள்ளிவிவரங்கள் காட்டும் டிவிட்டர் தகவல்களும் கொடுக்கபப்டுள்ளன.உதாரணத்திற்கு டிவிட்டர் பதிவுகளின் அடிப்படையில் முதல் 20 நாடுகள் பட்டியல் தரபட்டிருப்பதோடு ஒவ்வொரு கண்டத்திலும் அதிக பதிவுகள் வெளீயாகும் நாடுகளின் பட்டியலும் இடம் பெறுகிறது.அதோடு மொத்த டிவிட்டர் பதிவுகளில் ஒவ்வொரு நாட்டின் பங்கும் கொடுக்கப்படுள்ளது. இப்போது பார்த்தால் இந்தியா இந்த பட்டியலில் 29 வது இடத்தில் உள்ளது.டிவிட்டர் பயன்பாட்டு போக்குகளை தெரிந்து கொள்ள முடிவதோடு உலகின் போக்குகளையும் கூட இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.டிவிட்டர் பரப்பில் ஏற்படும் மாற்றங்களையும் தெரிந்து கொள்ளலாம். வரைபடத்தின் மீது தகவல்கள் சுட்டிகாட்டபடும் விதத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.எந்த இடத்தில் அதிக பதிவுகள் வெளியாகின்றனவோ அந்த இடம் சிவப்பு வண்ணத்தில் ஒளிரும்.இதே போல புகை மூட்டமாக அல்லது மேக கூட்டங்களாகவும் விவரங்களை பார்க்கலாம். பூகோஅல்ம் மற்றும் புள்ளி விவரங்களை வைத்து கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சுவார்ஸ்யமான சேவை இது.டிவிட்டர் பிரியர்களுக்கும் புள்ளிவிவர பிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். டிவிட்டர் பற்றி அமைப்புகள் அவப்போது ஆய்வு நடத்தி வெளியிடும் அறிக்கை மூலம் டிவிட்டர் போக்குகளை தெரிந்து கொள்ள காத்திருக்காமல் இந்த தளத்தின் மூலம் நாமே டிவிட்டரின் நாடித்துடிப்பை தெரிந்து கொள்ளலாம். சுவார்ஸ்யமான இந்த சேவை தனிப்பட்ட ஆர்வத்தால் துவக்கப்பட்டதாம்.இன்று டிவிட்டர் உலகின் ஆர்வத்தை ஈர்த்திருக்கிறது. இணையதள முகவரி;http://aworldoftweets.frogdesign.com/