கூட்டு முயற்சிக்கு கைகொடுப்பது,அதிலும் இந்த நொடியில் எங்கோ இருக்கும் நண்பர் அல்லது கூட்டாளியோடு இணைந்து செயல்பட உதவுவது என்பது இணையத்தின் தனிச்சிறப்பாக இருக்கிறது.பிரவுசரில் இப்போது நாம பார்த்து கொண்டிருக்கும் இணையபக்கத்தை நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் கூட உருவாக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கூட்டு முயற்சியின் அருமையையும் தேவையையும் உணர்ந்தவர்களுக்காக உதயமாகியுள்ள மற்றொரு இணைய சேவையாக கோஸ்கெட்ச் இணையதளத்தையும் குறிப்பிடலாம்.
கோஸ்கெட்ச் பெயருக்கு ஏற்பவே நண்பர்களோடு இணைந்து இணையம் வழியே வரைவதற்கான சேவையாகும்.நீங்கள் வரைந்துள்ள ஓவியத்தை நண்பர்களுக்கு காட்ட வேண்டும் என்றாலோ அல்லது சித்திரம் மூலம் புதிய யோசனையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள நினைதாலோ இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வரைவது என்றவுடன் பிகாசோ போலவோ அல்லது நம்மூர் ஆதிமூலம் போலவோ மருது போலவோ ஓவிய நிபுணராக இருக்க வேண்டும் என்று நினைத்துவிடாதீர்கள்.ஒரு எண்ணம் அல்லது திட்டத்தை சித்திரமாக வரைந்து காட்ட வேண்டிய தேவை ஏற்படும் போது காகிதத்தில் எளிமையாக வரைந்து காட்டுவது போல இதில் வரைந்து காட்டலாம்.
இதற்கான எளிதான இணைய பென்சில்களும் வர்ணங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றில் உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொண்டு மனதில் உள்ளதை வரைந்து கொள்ளலாம்.இந்த பக்கத்தின் இணைய முகவரியை நண்பர்களுக்கு தெரிவித்தால் அவர்களும் அதே பக்கத்தை பார்க்க முடிவதோடு அதில் திருத்தங்களையோ மாற்றங்களையோ செய்யலாம்.
சும்மா ஜாலியாக வரைந்த சித்திரத்தை பகிர்ந்து கொள்ளவும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.அல்லது நண்பர்களோடு இணைந்து துவக்க உள்ள புதிய நிறுவனம் அல்லது திட்டத்திற்கான வரைவு நகலையும் கூட இப்படி பகிர்ந்து கொள்ளலாம்.
இந்த சித்திரத்தை காணும் நண்பர்கள் அதனை மேம்படுத்துவதில் தங்களும் சேர்ந்து கொள்ளலாம் அல்லது தங்கள் கருத்துக்களை குறிப்பிடலாம்.இந்த வகையில் ஒரு மைய எண்ணத்தின் அடிப்படையில் நண்பர்கள் கூட்டாக செயல்பட்டு மாபெரும் திட்டத்தை உருவாக்கலாம்.
வரைவதற்கான இணைய கருவிகளோடு பல்வேறு வகையான உருவங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளும் வசதியும் இருக்கிறது.உதாரணமாக சித்திர கதை தோற்றங்களையோ அல்லது விளையாட்டு பொருட்களின் உருவத்தையோ பயன்படுத்தலாம். இதே போல குறிப்பிட்ட புகைப்படத்தியும் பயன்படுத்தலாம்.
ஏற்கனவோ சொன்னது போல ஒரு நல்ல எண்ணத்தை அல்லது ஒரு பிரச்சனையை இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.இல்லை என்றால் பார்த்து ரசித்த ஒரு புகைப்படத்தை கூட நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.நாம் உருவாக்கியவற்றை சேமித்து வைத்து கொண்டு எதிர்காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம்.அல்லது பேஸ்புக் மற்றும் வலைப்பதிவுகளிலும் இடம்பெற வைக்கலாம்.
புகைப்படங்களை தோன்ற செய்து பகிர்வது போல கூகுல் வரைப்படத்தையும் பகிர்ந்து கொள்ளும் வசதி இருக்கிறது.குறிப்பிட்ட இடத்தை சுட்டிக்காட்ட இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
எல்லா உலாவிகளிலும் செயல்படும் என்பதும் தனியே பதிவு செய்து கொள்ள தேவையில்லை என்பதும் இந்த சேவையை மேலும் பயனுள்ளதாக்குகிறது.
இணையதள முகவரி;http://www.cosketch.com/

0 Comments on “நண்பர்களோடு சேர்ந்து வரைய ஒரு இணையதளம்”
எஸ்.கே
மிக்க நன்றி சார்!
முனி பாரதி
நண்பரே, வணக்கம்.
தங்களுடைய வலைப் பதிவு பல பயனுள்ள தகவல்களைக் கொண்டுள்ளதோடு பயனுள்ள இணைய தளங்களின் வழிகாட்டியாகவும்
உள்ளது. இந்த உங்கள் பணி மேலும் வளர்ந்து தமிழ் சமூதாயம் பயன் பெறட்டும்
நன்றி
Pingback: கூட்டாக வரைய ஒரு இணையதளம். | Cybersimman's Blog