ஐபோன் அற்புதம்;உள்ள‌ங்கையில் உண‌வு வ‌ழிகாட்டி அர்ப‌ன்ஸ்பூன்

செயலிகளுக்கென்று இலக்கணம் வகுக்கப்பட்டால் அதன் அத்தனை அம்சங்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாக அர்பன்ஸ்பூன் இருக்கும்.அல்லது அர்பன்ஸ்பூனை அடிப்படையாக வைத்துக்கொண்டே செயலிகளுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொள்ளலாம்.

குறிப்பிட்ட தேவையை நிறைவேற்றித்தரும் பயன் மிகுந்த தன்மை, அந்த தன்மையை எவருக்கும் புரிய வைக்கும் எளிமையான கருத்தாக்கம்,அந்த எளிமையை மீறி அனைவரையும் கவரும் சுவார்ஸ்யமான செயல்பாடு ,அந்த செயல்பாட்டின் மீது வேறு பல பயனுள்ள புதிய அம்சங்களை கட்டமைக்ககூடிய வாய்ப்பு இவற்றோடு பொருள் பொதிந்த பெயர் என் ஒரு நல்ல செயலிக்கு உண்டான அம்சங்கலை எல்லாம் அர்பன்ஸ்பூன் பெற்றிருக்கிறது.

இவற்றின் காரணமாகவே அறிமுகமான நாள் முதல் இந்த‌ செயலி பரவலான கவனத்தை ஈர்த்து வருகிறது.செய‌லிகள் உலகில் வெற்றிகரமானதாகவும்,முன்னுதாரணமாக சொல்லக்கூடியதகவும் விளங்குகிறது.

நல்ல பசி நேரத்தில் சாப்பிடுவதற்கான நல்ல ரெஸ்டாரன்டை தேடுவதற்கான‌  வழிகாட்டியாக உருவாக்கப்பட்டது தான் இந்த செயலி.இந்த செயலியை ஐபோனில் டவுண்லோடு செய்து கொண்டால் எந்த ரெஸ்டாரண்டுக்கு சாப்பிட போகலாம் என்பதை மிக சுலபமாக தேர்வு செய்துவிடலாம்.

சாப்பாட்டு பிரியர்களுக்கு வழிகாட்டக்கூடிய இணையதங்கள் அநேகம் இருக்கின்றன.ரெஸ்டாரன்டுகளின் சிறப்பம்சம்,அங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் மற்றும் சேவையின் தர‌ம் குறித்த இணையவாசிகளின் கருத்து,விமர்சன‌ம் ஆகியவற்றை படித்துப்பார்த்து நமக்கு தேவையான ரெஸ்டாரண்டை தேர்வு செய்து கொள்ளும் வசதியை இந்த வகை தளங்கள் வழங்குகின்றன.இவ்வள‌வு ஏன் ,ரெஸ்டாரண்ட்களை பரிசிலித்த பின்னர் தேர்வு செய்யும் ரெஸ்டாரண்டில் சாப்பிடுவதற்கான இடத்தை ஆன்லைன் மூலமே பதிவு செய்யும் வசதியையும் ஓபன் டேபிள் போன்ற தளங்கள் தருகின்றன.

அர்பன்ஸ்பூன் இன்னும் ஒரு படி மேலே சென்று இருந்த இடத்திலிருந்தே ஐபோன் மூலம் விருப்பமான ரெஸ்டாரண்டை தேர்வு செய்ய உதவுகிறது.அந்த‌ வ‌கையில் உள்ள‌ங்கையில் உள்ள‌ உண‌வு வ‌ழிகாட்டி என்று இத‌னை சொல்ல‌லாம்.காரில் சென்று கொண்டிருக்கும் போதே கூட‌ அர்ப‌ன்ஸ்பூன் வாயிலாக‌ எந்த‌ ரெஸ்டார‌ண்டுக்கு சாப்பிட‌ செல்லலாம் என்ப‌தை தீர்மானிக்க‌லாம்.

இத‌னை அர்ப‌ன்ஸ்பூன் நிறைவேற்றித்த‌ரும் வித‌ம் தான் விஷேச‌மான‌து.நின்ற‌ இட‌த்திலிருந்தே கையில் இருக்கும் போனை ஒரு குலுக்கு குலுக்கினால் போதும் ந‌ம‌க்கான‌ ரெஸ்டார‌ண்டை அர்ப‌ன்ஸ்பூன் ப‌ரிந்துரைக்கும்.சீட்டு குலுக்கி போடுவ‌து போல‌ அர்ப‌ன்ஸ்பூன் ஒரு ரெஸ்டார‌ண்டை தேர்வு செய்து ப‌ரிந்துரைக்கும்.

ர‌வுலெட் விளையாட்டின் வ‌ளைய‌ம் போன்ற‌ வ‌ளைய‌ம் போனில் தோன்றி அது சுற்றி நிற்கும் போது குறிப்பிட்ட‌ ஒரு ரெஸ்டார‌ண்ட் வ‌ந்து நிற்கும். ஜிபிஎஸ் வ‌ச‌தி மூல‌மாக‌ இருப்பிட‌த்தை உண‌ர்ந்து கொண்டு ப‌ய‌னாளி நிற்கும் இட‌த்தின் அடிப்ப‌டையில் ரெஸ்டார‌ண்ட‌ ப‌ரிந்துரை செய்ய‌ப்ப‌ட்டிருக்கும்.

ஏதாவ‌து ரெஸ்டார‌ண்டுக்கு செல்ல‌லாம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் அல்ல‌து அருகே இருக்கும் ரெஸ்டார‌ண்டுக்கு செல்ல‌லாம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் இந்த‌ ப‌ரிந்துரையை ஏற்றுக்கொண்டு நேராக‌ சாப்பிட‌ச்சென்று விட‌லாம்.

இப்ப‌டி போனை ஒரு குலுக்கு குலுக்கிய‌துமே ரெஸ்டார‌ண்ட் ப‌ரிந்துரைக்கப்ப‌டும் அம்ச‌ம் சுவார‌ஸ்ய‌மான‌து ம‌ட்டும் அல்ல‌ ப‌ய‌னுள்ள‌தும் கூட‌.

அர்ப‌ன்ஸ்பூனின் குலுக்க‌ல் ப‌ரிந்துரையை அப்ப‌டியே ஏற்றுக்கொள்ள‌ வேண்டும் என்றில்லை.அடுத்த‌ க‌ட்ட‌மாக‌ எந்த‌ வ‌கையான‌ ரெஸ்டார‌ண்ட்,உண‌வின் விலை அள‌வு,போன்ற‌ அம்ச‌ங்க‌ளை குறிப்பிட்டு இந்த அம்ச‌ங்க‌ளின் அடிப்ப‌டையில் ச‌ரியான‌ ரெஸ்டார‌ண்டை தேடிப்பார்க்க‌லாம்.ர‌வுலெட் வ‌ளைய‌த்திலேயே இரு ப‌க்க‌த்திலும் இத‌ற்கான‌ க‌ட்ட‌ங்க‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும்.

ரெஸ்டார‌ண்டை தேர்வு செய்த‌ பின் அந்த‌ ரெஸ்டார‌ண்ட் சேவை தொட‌ர்பான‌ க‌ருத்துக்க‌ள் போன்ற‌வ‌ற்றையும் ப‌டித்து பார்க்க‌லாம்.

அர்ப‌ன்ஸ்பூன் காட்டும் ந‌க‌ரை நிராக‌ரித்துவிட்டு குறிப்பிட்ட‌ ந‌க‌ரை தேர்வு செய்து அங்குள்ள‌ ரெஸ்டார‌ண்ட்க‌ளில் எது ஏற்ற‌து என் பார்க்க‌லாம்.வெளியூர்க‌ளுக்கு செல்வ‌த‌ற்கு முன்பாக‌ இப்ப‌டி அந்ந‌க‌ரில் எங்கே ந‌ல்ல‌ ரெஸ்டார‌ண்ட‌ இருக்கின்ற‌ன‌ என்ப‌தை தெரிந்து வைத்து கொண்டு அதன‌டிப்ப‌டையில் ப‌ய‌ண‌த்தை திட்ட‌மிட்டுக்கொள்ள‌லாம்.

2008 ம் ஆண்டு  அறிமுக‌மான‌ போதே இத‌ ப‌ய‌ன்பாட்டுத்த‌ன‌மை கார‌ண‌மாக‌ அர்ப‌ன்ஸ்பூன் உட‌ன‌டியாக‌ அனைவ‌ரின் க‌வ‌ன‌த்தையும் ஈர்த்த‌து.முத‌லில் சியாட்டில் நக‌ரிலும் பின்ன‌ர் ம‌ற்ற‌ அமெரிக்க‌ ந‌க‌ர‌ங்க‌ளிலும் அறிமுக‌மான‌ அர்ப‌ன்ஸ்பூன் வெற்றிகர‌மான‌ செய‌லியாக‌ உருவான‌து.

அது ம‌ட்டும் அல்லாம‌ல் செய‌லிக‌ள் எந்த‌ அள‌வுக்கு ப‌யன் மிகுந்த‌தாக‌ இருக்கும் என்ப‌தை உண‌ர்த்தி செல்போனில் செய்ல்ப‌ட‌க்கூடிய செய‌லிக‌ள் ப‌ற்றி ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ பேச‌ வைத்த‌து.அறிமுகமான‌ சில‌ மாத‌ங்க‌ளிலேயே ல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ப‌ய‌னாளிக‌ளால் ட‌வுண்லோடு செய்ய‌ப்ப‌ட்ட‌ அர்ப‌ன்ஸ்பூன் பின்ன‌ர் ப‌டிப்ப‌டியாக‌ புதிய அம்ச‌ங்க‌ளை சேர்த்து மேலும் ப‌ய‌னுள்ள‌தாக‌ மாறிய‌து.

அமெரிக்க‌ ச‌ந்தையில் வெற்றி பெற்ற‌தை அடுத்து இங்கே எப்போது வ‌ரும் என்று ப‌க்க‌த்து நாடான‌ க‌ன‌டாவில் ப‌ல‌ரை கேட்க‌ வைத்து அந்நாட்டிலும் அறிமுக‌மான‌து.

அதோடு செல்போனில் இருந்தே சாப்பிடுவ‌த‌ற்கான‌ இட‌த்தை முன்ப‌திவு செய்யும் வ‌ச‌தியையும் அறிமுக‌ம் செய்த‌து.

ரெஸ்டார‌ண்டை தேர்வு செய்த‌ பின் அப்ப‌டியே நண்ப‌ர்க‌ளுக்கு த‌க‌வ‌ல் அனுப்பி வைத்து ஒரு குழுவாக‌ சாப்பிட‌ செல்வ‌த‌ற்கான‌ வ‌ச‌தியையும் அறிமுக‌ம்செய்துள்ள‌து.இப்ப‌டியாக‌ இந்த‌ செய‌லி அத‌ன் ப‌ய‌ன்பாட்டில் வ‌ள‌ர்ந்து கொண்டே வ‌ந்து மேலும் பிர‌ப‌ல‌மான‌து.

இன்று செய‌லிக‌ள் உல‌கில் அர்ப‌ன்ஸ்பூன் ந‌ட்ச‌த்திர‌ அந்த‌ஸ்து மிக்க‌தாக‌ விள‌ங்குகிற‌து.ந‌க‌ர‌ க‌ர‌ண்டி என்னும் பொருள் த‌ரும் அத‌ன் பெய‌ரும் ரெஸ்டார‌ண்ட்க‌ளை அடையாள‌ம் காட்டும் அத‌ன் தன்மையும் உள்ள‌ங்கையிலான‌ உண‌வு வ‌ழிகாட்டியாக‌ இது ஐபோன் பிரிய‌ர்க‌ள் மத்தியில் பிர‌ப‌லாமாகியுள்ள‌து.

ஈத‌ன் லோரி என்ப‌வ‌ர் த‌ன‌து ச‌காக்க‌ளுட‌ன் சேர்ந்து இந்த‌ செய‌லியை உருவாக்கினார்.எளிமையாக‌ ஆனால் ப‌ய‌னுள்ள‌ ஒன்றை உருவாக்க‌ வேண்டும் என்று திட்ட‌மிட்டு இந்த‌ செய‌லியை உருவாக்கிய‌தாக‌ அவ‌ர் கூறுகிறார்.அர்ப‌ன்ஸ்பூன் அத‌னை அழ‌காக‌ செய்து வ‌ருகிற‌து.

வ‌ர்ம் கால‌த்தில் ஐபோன் த‌விர‌ பிற‌ வ‌கையிலான‌ போன்க‌ள் ம‌ற்றும் உல‌கின் ம‌ற்ற‌ ந‌க‌ர‌ங்க‌ளூக்கும் கூட‌ இந்த‌ செய‌லி விரிவு ப‌டுத்த‌ப்ப‌ட‌லாம்.சென்னை,டெல்லி போன்ற‌ இந்திய‌ ந‌க‌ர‌ங்களில் இருக்கும் ரெஸ்டார‌ன்ட்க‌ளுக்கான‌ வ‌ழிகாட்டும் சேவையும் வ‌ழ‌ங்க‌லாம்.
அத‌ற்கு முன்பாக‌ ந‌ம்மூர் ச‌ர‌வ‌ண‌ப‌வ‌ன் ம‌ற்றும் முனியாணி விலாஸ்களுக்கு வ‌ழிகாட்டும் ஒரு இந்திய‌ செய‌லியை உருவாகினால் ந‌ன்றாக‌ இருக்கும்.

———
(பின் குறிப்பு;

அர்பன்ஸ்பூன் முதலில் இணையதளமாக துவக்கப்பட்டு பின்னர் செயலியாக உருவாக்கப்பட்டது.செல்போனில் செயல்படக்கூடிய இணைய தள மாதிரியை விட செல்போனுக்கான செய‌லி வடிவம் ஏன் சிற‌ந்த‌து என்பதற்கான உதாரணாமாகவும் அர்பன்ஸ்பூன் விளங்குகிறது.)

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஐபோன் அற்புதம்;உள்ள‌ங்கையில் உண‌வு வ‌ழிகாட்டி அர்ப‌ன்ஸ்பூன்

  1. Urban spoon funny but its intellectual

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *