எத்தனை பேருக்கு சொந்தமாக இணையதளம் இருக்கிறது என்று தெரியவில்லை.ஆனால் அந்த எண்ணிகை சொற்பமாக தான் இருக்க வேண்டும்.காரணம் பெரும்பாலானோர் தங்களுக்கென தனியே இணையதளம் இருக்க வேண்டும் என்று கருதுவதாக சொல்ல முடியாது.
வர்த்தகத்தில் ஈடுபடுவர்களும் பிரபலமாக இருப்பவர்களுமே தங்களுக்கான இணையதளத்தை வைத்து கொள்கின்றனர்.மற்றபடி சாமன்யர்கள் யாரும் சொந்தமாக இணையதளம் வேண்டும் என நினைப்பதாக தெரியவில்லை.
அப்படியே யாரவது சொந்தமாக இணையதளம் வைத்து கொண்டு அதில் தங்களைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைத்திருந்தால் அவரை தன்முனைப்பு மிக்கவராகவே கருத வாய்ப்புள்ளது.
மற்றவர்களை விடுங்கள் சாமன்யர்களில் பலரும் கூட எதற்காக சொந்த இணையதளம் என்றே நினக்ககூடும்.நம்மை பற்றி இணையதளம் அமைத்து உலகிற்கு தெரிவிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது என்றும் கூட சுய இளக்காரம் கொள்ளலாம்.
ஆனால் ஒவ்வொருக்கும் தனியே ஒரு இணையதளம் இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது .அது மட்டும் அல்ல அரசியல் மொழியில் சொல்வதானால் சொந்த இணையதளம் என்பதை காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம்.
ஏன் என்றால் எல்லோரும் உங்கள் கூகுலில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.ஆம் கூகுலில் தகவல்களை மட்டும் தேடுவதில்லை.மனிதர்கள் பற்றிய விவரங்களையும் தான் தேடுகின்றனர்.
வேலைக்காக விண்ணப்பித்தவர்களின் தகுதியை சரி பார்க்க வேண்டும் என்றாலும் சரி புதிதாக அறிமுகமானவர் தொடர்பான விவரங்கள் தேவை என்றாலே பலரும் செய்வது கூகுலில் பெயரை குறிப்பிட்டு தேடிப்பார்ப்பது தான்.
இவ்வளவு ஏன் பெண் பார்ப்பவர்கள் மாப்பிளை எப்படி என தெரிந்து கொள்ளவும் கூட கூகுல் மூலம் தேடிப்பார்க்கலாம்.
கூகுலிங் என்று சொல்லப்படும் இந்த பழக்கம் மிகவும் பரவலாகி வருகிறது.
இவ்வாறு தேடப்படும் போது இணையத்தில் உங்களைப்பற்றி இறைந்து கிடக்கும் தகவல்களை எல்லாம் கூகுல் பட்டியலிட்டு காட்டும்.பேஸ்புக்கில் பகிர்ந்தவை,வலைப்பதிவில் உள்ளவை,வேலைவாய்ப்பு தளங்களில் சமர்பித்தவை ,இனைய குழுக்களில் விவாதங்களின் போது தெரிவித்தவை என எல்லா வகையான தகவல்களையும் கூகுல் திரட்டித்தரலாம்.
அவற்றில் எதிர்மறையானவையும் இருக்கலாம்,பாதகமானவையும் இருக்கலாம்.உங்களைப்பற்றி தவறான தகவலை தரக்கூடியவையும் இருக்கலாம்.
இப்போது யோசித்து பாருங்கள் உங்களுக்கென தனியே இணையதளம் இருக்கும் படசத்தில் கூகுலிங் செய்யும் போது அநேகமாக அந்த பக்கம் முதலில் வந்து நிற்கும்.உங்ககளை பற்றிய சரியான அறிமுகத்தையும் அந்த பக்கம் தரகூடும்.அல்லது மற்ற பக்கங்களில் உள்ள விவரங்களோடு ஒப்பிட்டு பார்த்து சரியான முடிவுக்கு வரவும் உதவும்.
எனவே கூகுலில் தேடப்படும் போது நீங்கள் நீங்களாகவே அறியப்பட வேண்டுமாயின் உங்களூக்கான இணையதளம் அவசியம்.
அட சரி தான்,ஆனால் இணையதளம் வைத்து கொள்ளும் அளவுக்கு நான பெரிய ஆள் இல்லையே என்றோ அல்லது இணையதளத்தை வைத்து பராமரிப்பது கடினம் என்று நினைதாலோ அதற்கு சுலபமாக ஒரு வழி இருக்கிறது.
இதற்காக என்றே விஸிபிலிட்டி என்னும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தளம் கூகுலில் உங்களை பற்றி எந்த வகையான தகவல்கள் இடம்பெற வேண்டும் என்பதை கட்டுப்படுத்த உதவுகிறது.
அதாவது இந்த தளத்தில் உங்களுக்கான தேடல் பட்டனை உருவாக்கி அதில் உங்கலைப்பற்றிய தகவல்களை இடம்பெற வைக்கலாம்.
விஸிபிலிட்டி கூகுலுக்கான என்னை தேடு (சர்ச் மீ)பட்டனை தருவதாக சொல்கிறது.ஒருவருடைய பெயர் கூகுலில் தேடப்படும் போது இந்த பட்டன் முதலில் வரும் என்றும் உறுதி அளிக்கிறது.இதனை கிளிக் செய்தால் தேடப்பட்டவரின் விவரம் அவர் விரும்பிய வண்ணமே தோன்றும்.இதை தான் விஸிபிலிட்டி உங்கள் தேடல் விவரங்களை நீங்களே கட்டுப்படுத்தி கொள்ள உதவுவதாக கூறுகிறது.
விஸிபிலிட்டியில் என்னை தேடு பட்டனை உருவாக்கி கொள்ள முதலில் எப்யர் மற்றும் பணியிடம் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டும்.அதன் பிறகு பயனாளி தன்னை தீர்மானிக்கும் குறிச்சொற்களை சமர்பிக்கலாம்.தேவைப்பட்டால் இந்த விவரங்களை மாற்றி அமைத்து மேம்படுத்தி கொள்ளலாம். விவரங்களில் திருப்தியான பிறகு இந்த பக்கத்தை சமர்பித்து கூகுல் தேடல் பட்டனை பெற்று கொள்ளலாம்.
எல்லாம் சரி இந்த பக்கம் தான் கூகுலில் முதலில் வந்து நிற்கும் என்பதற்கு என்ன நிச்சயம் என்று கேட்கலாம்.
அந்த சந்தேகமே வேண்டாம்,கூகுலில் முன்னிலை பெறக்கூடிய வகையில் பிரத்யேக தேடல் தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்கி வைத்திருப்பதாக விஸிபிலிட்டி சொல்கிறது.முன் தேடல் என்று இதனை குறிப்பிடுகிறது.கூகுலில் தேடப்படும் போது முன்னிலை பெறும் வகையில் தேடலுக்கான விவரங்களை முன்கூட்டியே தேர்வு செய்ய வழி செய்யும் இந்த உத்தியை நீண்ட ஆய்வுக்கு பின் உருவாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கிறது.
இந்த தேடு பட்டனை வலைப்பதிவு மற்றும் பேச்புக் போன்றவற்றிலும் இடம் பெற வைக்கலாம்.தனி நபர்கள் மட்டும் அல்ல நிறுவனங்களும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
ஆக கூகுல் யுகத்தில் தேவையான சேவை என்றே இதனை குறிப்பிடலாம்.
இணையதள முகவரி;http://vizibility.com/

0 Comments on “கூகுலில் நீங்கள் தேடப்படுகிறீர்கள் உஷார்..”
எஸ். கே
ரொம்ப நல்ல தகவல் பலருக்கு பயனளிக்கும். மிக்க நன்றி!
raasalingam
அருமையான தகவல். பகிர்விற்கு நன்றி.
Aaqil
இது இப்ப ரொம்ப முக்கியம் 😛
vtharsign
பயனுள்ள தகவல்.
padmahari
இது காலத்தின் கட்டாயம்…..நன்றி!
www.sureshbabuvinitulaa.blogspot.com
நீங்கள் பல அருமையான விடயங்கள் தொடர்பாக பதிவுகளை எழுதுகிறீர்கள். உங்கள் பணி தொடரட்டும்.
visalakshi
enakku aangila thattachu theriyum.online moolam pagudhi nera velai parkka aasai.
ந.ர.செ. ராஜ்குமார்
என் பெயரைத் தேடிப் பார்த்திருக்கிறேன்.
cybersimman
என்ன வந்தது.