இணையதளங்களின் பெயர் சுருக்கமாகவும் எளிதில் கவரக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதை இணைய உலகின் எழுதப்படாத விதி என்றே சொல்லலாம்.காரணம் இணையதளத்தின் பெயர் அப்படி இருந்தால் தான் எளிதாக மனதில் பதியும்.
ஒரு இணையதளத்தின் வெற்றியில் அதன் பெயருக்கும் முக்கிய பங்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.
எனவே தான இணைய உலகில் வெற்றி பெற நினைப்பவர்கள் முதலில் அசத்தலான பெயரை தேட முற்படுகின்றனர்.
இதற்கு நேர்மாறாக அதிகம் யோசிக்காமல் இணையதளத்தின் உள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் பெயரை அப்படியே நீளமாக வைத்து விடுபவர்களும் இருக்கின்றனர்.
மேக் யுவர் கேர்ல் பிரண்ட் ஹாப்பி இணையதளம் இந்த ரகத்தை சேர்ந்தது தான்.நீளமான இணைய பெயர் பாதகமானது என்னும் கருத்திற்கு மாறாக பெயரை சொன்னவுடனே கவனத்தை கவரும் வகையில் இந்த தளத்தின் பெயர் அமைந்துள்ளது.
அதற்கு காரணம் இதன் உள்ளடக்கம் தான்.காதலியை மகிழ்ச்சியாக வைத்திருக்க வழி காட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம் அதனையே தலைப்பாக சூடிக்கொண்டுவிட்டது.
ஒரு மேம்பட்ட காதலனாக இருங்கள் என்று கூறும் இந்த தளம் அதற்கான வழியாக காதலியின் பிறந்த நாளை மறக்காமல் இருந்து வாழ்த்து சொல்வது போன்ற அம்சங்களை வலியுறுத்துகிறது.
காதலி தொடர்பான முக்கிய தினங்களை நினைவூட்டுவது,காதலி அகமகிழ்ந்து போகக்கூடிய பரிசு பொருள் வாங்கித்தர உதவுவது,தேவைப்பட்டால் காதல் ஆலோசனைகளை தருவது போன்ற சேவைகளை வழங்குகிறது.
காதலர் தினம் நெருங்கி வரும் வேளையில் இந்த தலம் அமைக்கப்பட்டுள்ளது பொருத்தமானதே.
சொந்த உபயோகத்திற்காக உருவாக்கப்பட்டு பின்னர் மற்ற காதலர்களுக்கும் உதவும் என்பதால் இந்த தளம் அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எல்லா தகவல்களுமே நடைமுறை சாத்தியம் கொண்டதாக,சுவையானதாக இருக்க வேண்டும் என்னும் அடிப்படையில் ஆலோசனைகளும் வழிகளூம் உருவாக்கப்பட்டுள்ளனவாம்.
காதலியை கவர்வதற்கான ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.காதலிக்க எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை ,ஆனால் சுவாரஸ்யமான தளமாகவே உள்ளது.எளீமையாகவும் உள்ளது.
ஒரே பக்கத்தில் எல்லாவற்றையும் முடித்து விட்டனர்.
எல்லாம் சரி,காதலன்களுக்கான ஆலோசனை மட்டும் தானா,காதலிகளுக்கு எதுவும் இல்லையா என்று கேட்கலாம்.கவலையே வேண்டாம் பெண்களுக்கு என்று தனிப்பகுதி உள்ளது.காதலர்களுக்கு உதவுங்கள் என்று அழைக்கும் அந்த பகுதி காதலிகள் தங்கள் எதிர்பார்ப்பையும் மனதையும் தெரிவிக்க வழி செய்கிறது.
ஆனால் காதலன்களை கவர்வதற்கான வழிகள் இல்லை.ஒருவேளை காதலன்களை கவர வேண்டிய தேவையில்லை என்று நினைத்து விட்டனரோ.எப்படியும் காதலன்கள் தானே காதலிகளை கவர் துடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இணையதள முகவரி;http://makeyourgirlfriendhappy.com/

0 Comments on “காதலர்களுக்காக ஒரு இணையதளம்”
pirabuwin
அருமை
anbu
iloveyou
Pingback: வேர்ட்பிரஸ் பதிவர் « aataiyapottadu