செல்லில் தெரியும் கடைகளின் காட்சி

பசி நேரத்தில் ஓட்டலுக்கு சாப்பிட சென்று விட்டுஅங்கு அமர்வதற்கு இடம் கிடைக்காமல்  காத்திருக்க நேர்ந்த அனுபவம் அநேகமாக பலருக்கு இருக்கலாம். ஓட்டல் என்றில்லை காபி ஷாப், பார்கள், ரெஸ்டாரண்டுகள் என்று பல இடங்களுக்கு சென்று விட்டு அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால் காத்திருந்து தவிக்க நேரிடுவது நகர வாழ்க்கையின் அனுபவமாகவே இருக்கிறது.
.
அதிலும் அபிமானத்துக்குரிய இடத்திற்கு சென்று விட்டு அங்கு உடனடியாக சேவையை பயன் படுத்திக்கொள்ள முடியாமல்  தவிப் பது சோதனையான அனுபவமாகவே அமையும்.  ஆனால் இத்தகைய காத்திருத்த லிலிருந்து  வாடிக்கையாளர்களை மீட்பதற்கான  அற்புதமான செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்பாட் நவ் என்று சொல்லப்படும் அந்த செயலி உள்ளங்கையிலேயே  நாம் செல்ல இருக்கும் கடைகளின் காட்சியை அழகாக காட்டி விடுகிறது.  அதன் மூலமே குறிப்பிட்ட அந்த கடை அல்லது ஓட்டலில் இடம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொண்டு விடலாம்.

அதாவது நாம் எந்த இடத்திற்கு செல்ல இருக்கிறோமோ அதனை இந்த செயலி காட்டும் வரைபடத்தில் கிளிக் செய்து பார்த்தால் போதும் அங்கு அப்போது என்ன நிலை என்பதை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். தற்போது எல்லா இடங்களிலும்  காணப்படக்கூடிய கேமிராக்களை யும், செல்போனையும் இணைத்து இந்த செயலி அழகான இந்த சேவையை முன் வைக்கிறது. இந்த செயலின் பின்னே உள்ள நிறுவனத்தின் சார்பாக ஓட்டல் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் வைபீ வசதி கொண்ட கேமிராக்கள் பொருத்தப்படும்.  அந்த கேமிராக் களில் பதிவாகும் காட்சிகள் செயலியில் இணைக்கப்படும்.

இத்தகைய கேமிரா பொருத்தப்பட்ட கடைகள் செயலியில் வரைபடத்தின் மீது பச்சை நிறத்தில் ஒளி வீசியபடி இருக்கும். அந்த பச்சை நிறத்தில் கிளிக் செய்தால் வர்த்தக நிறுவனத்தில் உள்ளே உள்ள காட்சி திரையில் தோன்றும். அதை பார்க்கும்போதே கூட்ட நெரிசல் எப்படி இருக்கிறது? இடம் காலியாக உள்ளதா? போன்ற தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

இடமிருந்தால் நேராக அங்கே செல்லலாம். இல்லையென்றால் வேறு எந்த ஓட்டல் அல்லது கடையில் இடமிருக்கிறது என்பதை பார்த்துச் செல்லலாம் அல்லது எப்போது இடம் காலியாகிறது என்பதை பார்த்துக் கொண்டும் அதற்கேற்ப நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டுக்கொள்ளலாம்.

முதல் கட்டமாக அமெரிக்காவின் போர்ட்லேண்ட் நகரில் இந்த சேவையை ஸ்பாட் நவ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதே போல ஐபோனில் செயல்படக்கூடியதாக இந்த செயலி முதல் கட்டமாக உரு வாக்கப்பட்டுள்ளது. மற்ற போன்களுக்கு விரைவில் இந்த செயலி விரிவுப்படுத்தப்பட உள்ளது.

இந்த செயலியை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் தங்களது அபிமான கடைகளில் அப்போது என்ன நிலை என்பதை  சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். அதே நேரத்தில் வர்த்தக நிறுவனங்களும் இந்த செயலியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.  காரணம் கடைகளில் பொருத்தப்படும் கேமிராக்கள் காட்சிகளை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்,  வாடிக்கையாளர்கள் கூட்டம் ஏறி இறங்குவதை கவனத்தில் வைத்திருக்கும்.
வழக்கத்தை விட கூட்டம் குறைவாக இருப்பின் அதனை உணர்ந்துகொண்டு வாடிக்கையாளர்களுக்கு  தள்ளுபடி சலுகைகளையும் இந்த செயலி அனுப்பிவைக்கும்.

அந்த வகையில் வர்த்த நிறுவனங் களுக்கு கூடுதல் வாடிக்கையாளர்கள் கிடைக்கவும்  இது வழி செய்கிறது. அதே நேரத்தில் வாடிக்கையாளர் களுக்கு சலுகைகள் கிடைக்கவும் உதவுகிறது. ஆனால் ஒன்று இந்த கேமிராவில் பதிவாகும் காட்சிகளில் வாடிக்கையாளர்களின் முகங்கள் துல்லியமாக தெரியாது. மேஜை, நாற்காலி போன்ற விவரங்கள்தான் முழுவதும் பதிவாகுமே தவிர, முகங்கள் தெரியாத அளவுக்கு கலங்களாகவே காட்சி அளிக்கும்.

எனவே அந்தரங்க ஊடுருவல் பற்றிய பிரச்சனை இருக்காது. தற்போது இணைய உலகில் உள்ளூரில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் சார்ந்த சேவையே மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இந்த வகையில் உள்ளூரில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களையும், உள்ளங்கை மூலமே முன்னோட்டம் பார்க்கக்கூடிய வகையில் இந்த  செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்தசெயலி  நம்மூரில் அறிமுகம் செய்யப்பட்டால் அல்லது இதன் உந்துதலால் ஒரு செயலி அறிமுகமானால் அதன் பிறகு சரவணபவனிலோ வேறு எந்த பவனிலோ நேரம் காலம் தெரியாமல் சாப்பிட போய் விட்டு பசியோடு காத்திருக்க வேண்டிய அவசியமே இருக்காது.இணையதள முகவரி:http://whatspotnow.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “செல்லில் தெரியும் கடைகளின் காட்சி

  1. thanks for sharing. good info

    Reply
  2. s its true. thanks for sharing. vaalththukkal

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *