ஒரு தேடியந்திரம் எளிமையானதாக இருக்க ÷ண்டும் என்று விரும்புகிறவர்கள் இருப்பதை போலவே ஒரு தேடியந்திரம் அலங்காரமானதாக கூடுதல் அம்சங்களை தரக் கூடியதாக வண்ணமயமானதாக இருக்க ÷ண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கின்றனர்.
.
அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் தேடல் முடிவுகளை அலுப்பூட்டக்கூடிய நீல நிற இணைப்புகளின் பட்டியலாக தராமல் ஒரு சித்திர தோற்றம் போல வழங்கும் அழகான காட்சி ரீதியிலான தேடியந்திரங்களும் இருக்கவே செய்கின்றன. இந்த பட்டியலில் யோமேட்டா தேடியந்திரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.
தேடியந்திர முத்துக்கள் மூன்று என்று சொல்லக்கூடிய 3 முன்னணி தேடியந்திரங்களான கூகுதல், யாஹூ மற்றும் பிங் ஆகிய மூன்றிலும் தேடக்கூடிய வசதியை இந்த தேடியந்திரம் தருகிறது. இந்த வகையான ஒப்பீட்டு தேடியந்திரங்களும் கூட பழையகருத்தாக்கம் தான். ஆனால் யோமேட்டாஇத்தனை மிகஅழகாக வழங்குவதோடு முடிவுகளை காட்சி ரீதியாகவும் முன்வைக்கிறது. அந்த வகையில் யமேட்டா 2ன்1 தேடியந்திரம் என்று கூட சொல்லலாம்.
இணையவாசிகளில் பெரும்பாலானோர் தேடல் என்று வரும்போது கூகுலையே நாடிச் செல்கின்றனர் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் பல நேரங்களில் கூகுலை தவிர வேறு சில தேடியந்திரங்களிலும் தேடிப் பார்க்கும்அவசியம் வரலாம். அது மட்டுமல்லாமல் சில நேரங்களில் முன்னணி தேடியந்திரங்கள் குறிப்பிட்ட தேடலுக்கான முடிவுகள் எவ்வாறு அமைகின்றன என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் ஏற்படலாம்.
தேடல் முடிவுகளில் தேடியந்திரங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும்வேறுபாடுகளை அறிந்து கொள்ளும் நோக்கில்
அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும் அவசியம் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அந்த தேவையை முற்றிலும் புதுமையான வகையில், ரசிக்கத்தக்கும் வகையில் யோமேட்டா பூர்த்தி செய்கிறது. யோமேட்டேவில் தேடல் கட்டமானது வலதுபக்கத்தின் ஒரு ஓரத்தில் இடம் பெறுகிறது. அதில் தேடலுக்கான வார்த்தைøயை டைப் செய்ததுமே அருகே உள்ள தளத்தின் மையப் பகுதியில் மூன்று வட்டங்கள் தோன்றுகின்றன. மூன்றும் மூன்று நிறத்தில் இருக்கின்றன.
இந்த மூன்று வட்டங்களும் தேடலுக்கு உட்படுத்தப்பட்ட கூகுல், யாஹூ, பிங் ஆகிய மூன்று தேடியந்திரங்களின் முடிவுகளை குறிக்கின்றன. மூன்று தேடியந்திரங்களிலும் இடம்பெற்றிருக்கும் முடிவு மூன்று வட்டங்களும் ஒன்று இணையும் மையப்பகுதியில் இடம்பெற்றிருக்கும். அதேபோல இரண்டு தேடியந்திரங்களில் இடம்பெறும் முடிவுகள் அந்த இரண்டு தேடியந்திர வட்டங்கள் இணையும் பகுதியில் இடம்பெற்று இருக்கும்.
இந்த முடிவுகள் அனைத்தும் வட்டங்களின் மீது குத்தப்பட்டிருக்கும் சின்னஞ்சிறிய பின்களின் மூலம் சுட்டிக்காட்டப்படும். அந்த பின்களை கிளிக் செய்தால் முடிவுகள் திரையில் தோன்றும். முதல் பார்வையிலேயே மூன்று தேடியந்திரங்களில் எந்த முடிவுகள் எல்லாவற்றிலும் முன்னிலை பெறுகின்றன, எந்த முடிவுகள் இரண்டு தேடியந்திரங்களில் மட்டும் வருகின்றன என்பதை இணையவாசிகள் தெரிந்துகொள்ள முடியும்.
அதுமட்டுமல்லாமல் இந்த முடிவுகளிலிருந்து 4 மிகச் சிறந்த முடிவுகளை யோமேட்டா தேர்வு செய்து அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. கூகுலுக்கென்று தனியே தேடல் முடிவுகளை பட்டியலிட ஒரு ரகசிய முறை இருப்பதுபோல இந்த தேடியந்திரம் தேடியந்திரங்களை ஒப்பிட்டு அவற்றில் சிறந்த வற்றை தேர்வு செய்ய தனி முறையை வைத்திருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இந்த 4 முடிவுகள் சுட்டிக் காட் டப்படுகின்றன.
எனவே இணையவாசிகளுக்கு இவை அர்த்தம் மிகுந்ததாக அமையக்கூடும். பொதுவாக எல்லா தேடியந்திரங்களுமே ஒரே முடிவுகளைத்தான் பட்டி யலிடுவதாக பரவலாக கருதப்பட்டாலும் தேடல் முடிவுகள் தேடியந்திரத்திற்கு தேடியந்திரம் மாறுபடுகின்றன என்பதே உண்மை. சொல்லப்போனால் 3 சதவீத முடிவுகள் மட்டுமே பொதுவானதாக இருக்கின்றன. அப்படி பார்க்கும் போது தேடல் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்துக்கொள்வது சரியாகவே இருக்கும். அந்த சேவையை யோமேட்டோ திறம்பட வழங்குவதோடு முடிவுகளை எளிதில் புரியக்கூடிய வகையில் வண்ணமயமான வட்டங்களின் மூலம் காட்சிரீதியாக வழங்குகிறது.
தேடியந்திர முகவரி: www.yometa.com

0 Comments on “வண்ணமயமானதேடியந்திரம் யோமேட்டா”
kakkoo
It is really so fast than google !
thanks.
buruhani
shabas bas