என்பதுகள் என்றால் இளையராஜாவின் பாட்டு.ரஜினி ஸ்டைல்.இலக்கியத்தில் புதுகவிதை கவிதையின் ஆதிக்கம்.சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள்.கிரிக்கெட்டில் கபில் கவாஸ்கர் மோதல் .இப்படி நிறைய விஷயங்கள் நினைவுக்கு வரலாம்.
70 கள் என்றால் இசையில் பீட்டில்ஸ் .90 கள் என்றால் கிரிக்கெட்டில் சச்சின் ,50 கள் என்றால் பாகவதர்,60 கள் என்றால் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகியவையும் நினைவில் அலை மோதலாம்.இவையெல்லாம் உதாரணங்கள் தான்.
இந்த நினைவுகளும் நிகழ்வுகளும் நபருக்கு நபர் மாறுபடலாம்.
அதற்கென்ன என்று கேட்கிறீர்களா?
இப்படி கடந்த கால நினைவுகளை திரும்பி பார்த்து அசைபோட என்றே ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ரிடர்ன்டுமைன்ட் என்பது அதன் பெயர்.
மிக மிக எளிதான அந்த தளம் ஒவ்வொரு பத்தாண்டாக கடந்த காலத்தை திரும்பி பார்க்கலாம்.அதற்கேற்ப ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சின்ன வட்டம் கொடுக்கப்பட்டுள்ளது.அந்த வட்டங்களின் மீது அவற்றுகுறிய காலகட்டம் குரிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் எந்த காலகட்டத்தை திரும்பி பார்க்க நினைக்கிறீர்களோ அந்த காலத்திற்கான வட்டத்தை கிளிக் செய்து உங்கள் நினவுகளை பகிர்ந்து கொள்ளலாம்.
நினைவுகளை தலைப்பிட்டு புகைப்படத்துடனும் வீடியோவுடனும் பகிர்ந்து கொள்ளலாம்.அப்படியே மற்றவர்களின் நினைவலைகளையும் பார்க்கலாம்.அந்த நினைவுகள் குறித்த உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.சில நேரங்களில் பகிரப்படும் நினைவுகள் உங்களுக்குள்ளும் நினைவலைகளை கிளர்ந்தெழச்செய்யும்.அவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம்.
உங்களுக்கு பிடித்த காலகட்டத்திலும் பயணிக்கலாம்.மற்ற காலகட்டங்களுக்கும் சென்று அறிந்திராத புதிய விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
1950 கள் முதல் தான் கடந்த கால பயணம் துவங்குகிறது.புதிய தளம் என்பதால் இப்போதைக்கு அதிக பகிர்வுகள் இல்லை.ஆனால் பயனாளிகள் அதிகரிக்கும் படசத்தில் இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி;http://www.returntomind.com/