இன்றைய இலவச சாப்ட்வேர் என்னும் அறிவிப்போடு வரவேற்கிறது கிவ் அவே ஆப் த டே இணையதளம்.
இலவ்ச சாப்ட்வேர்களூக்கான இந்த தளம் தினமும் ஒரு இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்து அதனை டவுண்லோடு செய்து கொள்ளவும் வழி செய்கிறது.இந்த தளம் தருவது இலவச சாப்ட்வேர் மட்டும் அல்ல;புத்தம் புதிய சாப்ட்வேர் என்பதும் கவனிக்க தக்கது.
சலுகை மற்றும் தள்ளுபடி தொடர்பான தகவல்களை வழங்கும் இணையதளங்கள் அன்றைய தினத்துக்கான தள்ளுபடி திட்டங்களை தினம் ஒரு தள்ளுபடி என அறிமுகம் செய்வது போல இந்த தளம் தினம் ஒரு புதிய இலவச சாப்ட்வேரை அறிமுகம் செய்து வைக்கிறது.
அந்த சாப்ட்வேர் ஒரு நாள் மட்டுமே இலவசமாக கிடைக்கும் மறு நாள் வேறு ஒரு சாப்ட்வேர் வந்து விடும்.
சாப்ட்வேர் பிரியர்கள் தினந்தோறும் இந்த தளத்திற்கு விஜயம் செய்து புதுப்புது சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.விரும்பினால் அந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து பயன்படுத்தி பார்க்கலாம்.
சாப்ட்வேர் நிபுணர்கள் மற்றும் சாப்ட்வேர் பயனாளிகள் என இரு தரப்பினருக்குமே இந்த தளம் பயனுள்ளது .சொல்லப்போனால் இருவரையும் இணைக்கும் பாலமாக இந்த தளம் விளங்குகிறது.
சாப்ட்வேர் நிபுணர்கள் தங்களது புதிய சாப்ட்வேரை வெள்ளோட்டம் பார்க்க விரும்பினால் இந்த தளத்தின் மூலம் அதனை இலவசமாக வழங்கலாம்.சாப்ட்வேர் பற்றிய குறிப்புகளோடு அதன் பயன்பாடு மற்றும் சிறப்பம்சங்களை குறிப்பிட்டு அறிமுகம் செய்யலாம்.
இலவச சாப்ட்வேருக்காக இந்த தளத்தை முற்றுகையிடும் இணையவாசிகள் அதனை பயன்படுத்தி பார்த்து பயனுள்ளதாக இருந்தால் மற்றவர்களுக்கு பரிந்துரைப்பார்கள்.புதிய சாப்ட்வேருக்கு இதை விட சிறந்த விளம்பரம் கிடைக்க முடியுமா ?
விளம்பரம் மட்டும் அல்ல அந்த சாப்ட்வேரின் பயன்பாடு தொடர்பான கருத்துக்களையும் தெரிந்து கொள்ள முடியும்.தன்டைப்படையில் சாப்ட்வேரை மேம்படுத்தவும் செய்யலாம்.
இணையவாசிகளை பொருத்தவரை பயனுள்ள புதிய சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம்.அவற்றை காசு கொடுத்து வாங்கி பார்த்து ஏமாறாமல் இலவசமாக பயன்படுத்தி பார்க்கலாம்.
எந்த சாப்ட்வேரும் ஒரு நாள் மட்டுமே இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ள அனுமதி உண்டு.அதன் பிறகும் அந்த சாப்ட்வேரை உருவாக்கியவர் விரும்பினால் அது தொடர்ந்து இலவசமாக கிடைக்கும்.இல்லை என்றால் அவர் குறிப்பிடும் நிபந்தனையின் அடிப்படையில் அதனை வாங்கி பயன்படுத்தலாம்.
ஆனால் ஒன்று இலவசமாக கிடைக்கிறதோ இல்லையோ இந்த தளத்தில் அறிமுகமான எல்லா சாப்ட்வேர் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.அதற்கு ஏற்ற வகையில் இந்த தளத்தில் இடம் பெற்ற எல்லா சாப்ட்வேர்களுமே தொகுத்து வைக்கப்பட்டுள்ளன.தேதி வாரியாக சாப்ட்வேரை தேடிப்பார்க்கலாம்.
அந்த வகையில் பல்வேறு பிரிவுகளை மிகச்சிறந்த சாப்ட்வேர்களை அறிமுகம் செய்து கொள்ளவும் வாய்ப்புண்டு.
மேலும் தொடர்ந்து இலவசமாக கிடைக்கும் சாப்ட்வேர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.
இணையவாசிகள் தங்களுக்கு தேவையான சாப்ட்வேர் இருக்கிறதா என்றும் தேடிப்பார்க்கலாம்.இத்தகைய தேடல்களும் பட்டியலிடப்பட்டுள்ளதால் அதனை பார்த்தும் புதிய சாப்ட்வேரை அறிமுகம் செய்து கொள்ளலாம்.சமீபத்திய தேடல் மற்றும் பிரபலமான தேடல் என தனித்தனியே பட்டியலிடப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளூக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதால் இந்த தளத்தில் பல பயனுள்ள சாப்ட்வேர்களின் களஞ்சியமாகவே திகழ்கிறது என்று சொல்லலாம்.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பமசம் சாப்ட்வேர் பற்றிய விவாத களமும் உள்ளது.சாப்ட்வேர் பயன்பாடு தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் கிடைக்க இந்த களத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இலவச சாப்ட்வேர்களுக்கு என்று பல தளங்கல் இல்லாமல் இல்லை.ஆனால் அவற்றில் உயிரோட்டம் மிக்கதாக விளங்கும் தளம் என்று இதனை சொல்லலாம்.
இணையதள முகவரி;http://www.giveawayoftheday.com/

0 Comments on “இலவச சாப்ட்வேர்களுக்கான இணையதளம்.”
winmani
பயனுள்ள பதிவு நன்றி நண்பரே.
MHM NIMZATH
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
உங்கள் பைல்களை பாதுகாப்பாக வைக்க சிறந்த மென்பொருள்
sarujan
பயனுள்ள தகவல்.
sambandam
பதிவுகள் நன்று, நன்றி