யூடியூப் மூலம் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் இருக்கின்றனர். யூடியூப் மூலம் பாடங்களை வழங்கும் பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. ஆனால் யூடியூப் மூலமே ஒருவர் பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார் என்பதுதெரியுமா? அதாவது தனி நபர் பல்கலைக்கழகம்.
தனிநபர் ஒருவர் பல்கலைக்கழகம் நடத்துவது என்பது நம்ப முடியாத சாதனைதான்.
ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சல்மான்கான் எனும் 33 வயது வாலிபர் இதனைத்தான் சாதித்திருக்கிறார்.
எத்தனை பேருக்கு தங்கள் பெயரிலேயே ஒரு கல்வி நிறுவனத்தை நடத்தும் வாய்ப்பு சாத்தியமாகும் என தெரியவில்லை. இருப்பினும் யூடியூப் மூலம் கான் தனது பெயரிலேயே யூடியூப் பல்கலையை நடத்தி வருகிறார்.
கான் அகாடமி என்று அழைக்கப் படும் அந்த பல்கலையின் நிறுவன ரும் அவரே, பேராசிரியரும் அவரே, ஆனால் அவர் நடத்தும் பாடங்களுக்கு மாணவர்கள் என்னவோ உலகம் முழுவதும் இருக்கின்றனர்.
ஆச்சரியமாக இருக்கலாம். கான் மற்றும் கான் அகாடமியை பொருத்தவரை எல்லாமே ஆச்சரியம் தான்.
அமெரிக்காவைச் சேர்ந்த கான் கணிதம் மற்றும் கம்ப்யூட்டர்அறிவியலில் பட்டம் பெற்றதோடு புகழ் பெற்ற ஹாவர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்றவர். இருப்பினும் அவர் ஆசிரியருக்கான பயிற்சியோ அல்லது கற்பிப்பதற்கான சானிதழோ பெற்றவர் இல்லை.
ஆசிரியராக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு கிடையாது. நிதித்துறையில் ஒரு முதலீட்டு நிறுவனத்தில் பணியாற்றி இருப்பதே அவரது அனுபவம். அந்த வேலையை உதறி தள்ளிவிட்டு கான் யூடியூப்பில் பாடம் நடத்த வந்து அதில் வெற்றி பெறவும் செய்திருக்கிறார்.
இதுவரை 1500க்கும் மேற்பட்ட வீடியோ பாடங்களை அவர் உருவாக்கி இருக்கிறார். கணிதம், அறிவியல், வரலாறு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான அந்த வீடியோ பாடங்களை அதற்காகவே அவர் அமைத்துள்ள இணைய தளம் (அதுதான் அவரது பல்கலையும்கூட) வாயிலாக டவுன்லோடு செய்து பயிலலாம். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் இதைத்தான் செய்து வருகின்றனர்.
யூடியூப்பை ஒரு கல்விச் சாதனமாக கருதுவது வியப்பில்லை. பல பேராசிரியர்கள் தங்களது பாடங்களை வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப் வாயிலாக பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
யூடியூப் தளத்தில் திரைப்பட காட்சி அல்லது விளையாட்டு நிகழ்வுகளை பார்த்து ரசிப்பதுபோலவே பேராசிரியர்கள் பதிவேற்றி உள்ள வீடியோ படங்களையும் பார்க்கலாம், படிக்கலாம்.
இப்படி யூடியூப் மூலம் பாடம் நடத்தி நட்சத்திர அந்தஸ்து பெற்ற பேராசிரியர்களும் இருக்கின்றனர். எனினும் கான் நடத்தும் வீடியோ பாடங்கள் இவற்றில் இருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்டவை.
கானின் வீடியோ பாடங்கள் வழக்கமான வகுப்பறை பாடங்கள் அல்ல. உண்மையில் கான் தனது வீட்டின் படுக்கை அறையில் இருந்துதான் பாடங்களை பதிவு செய்கிறார்.
10 முதல் 20 நிமிடங்கள் வரையே நீடிக்கும் அந்த பாடங்கள் பேராசிரியரின் உரைபோல இல்லாமல் நண்பன் ஒருவன் பக்கத்தில் இருந்து விளக்கிச் சொல்வதுபோல அமைந்துள்ளன.
அவற்றில் கான் தோன்றுவது கூட கிடையாது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
வரைபடங்கள் விளக்கச் சித்திரங்கள், சமன்பாடுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டியபடி தான் எடுத்துக் கொண்ட தலைப்பை புரிய வைக்கும் வகையிலேயே அந்த வீடியோக்கள் அமைந்துள்ளன. எல்லாமே கான் மாணவர்களோடு நேரில் பேசுவதைப்போலவே அமைந்திருப்பதாக பயன்பெற்றவர்களால் பாராட்டப்படுகிறது.
பள்ளி கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் என பல தரப்பட்ட மக்கள் கான் வீடியோ பாடங்களை கவனிக்கின்றனர். நாள்தோறும் 70 ஆயிரம் முறைகளுக்கு மேல் அவரது பாடங்கள் பார்க்கப் படுகின்றன. அதாவது படிக்கப்படு கின்றன.
அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான பெர்கிலி பல்கலையின் இணைய பாடங்களுக்கு மொத்தமாக கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை விட இது இருமடங்கானது என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
கானின் வீடியோ பாடங்கள் இணையம் மூலம் ஆர்வத்தோடு பார்க்கப்பட்டு வருவதோடு பல நாடுகளில் தன்னார்வ அமைப்புகளால் டவுன்லோடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு வகுப்பறைகளில் காண்பிக் கப்படுகின்றன. இவற்றின் விளைவாக கான் புகழ்பெற்ற யூடியூப் பேராசிரியராக உருவாகி இருக்கிறார்.
கான் தேர்வு செய்த இந்த இணைய பாதைக்கு பின்னே சுவாரஸ்யமான கதை இருக்கிறது.
யூடியூப் பேராசிரியர்களால் உருவான கான் வங்கதேசத்தைச் சேர்ந்த தந்தைக்கும் இந்தியாவை கொல்கத்தாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவர்.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள நியூஆர்லைன்ஸ் நகரில்வசித்து வருகிறார்.
ஒருமுறை உறவுக்கார பெண் நாடியாவுக்கு கணித பாடத்தில் தடுமாற்றம் இருப்பதை தெரிந்துகொண்ட கான் அவருக்கு பாடம் நடத்த ஒப்புக்கொண்டார். அதற்காக தான் சொல்லும் வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தார்.
நாடியாவும் அவர் சொன்னபடி செய்து முடிக்கவே கணிதத்தில் நாடியாவுக்கு இருந்த குழப்பத்தை போக்கும் வகையில் பாடம் நடத்த தொடங்கிய கான் நாடியா தனது விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பிய போது பாடம் நடத்துவதை விட்டு விடாமல் இண்டர்நெட் மூலம் அந்த பணியை தொடர்ந்தார்.
யாகூ வலைவாசல் வழங்கிய இணைய சேவையை பயன்படுத்தி தனது இடத்தில் இருந்தபடியே அந்த பெண்ணுக்கு பாடம் கற்றுக்கொடுத்தார்.
ஆனால் கானுக்கு தொடர்ந்து பாடம் நடத்துவதில் நேரம் ஒதுக்க முடியாது நிலை ஏற்பட்டது. அப்போது அவர் தன்னுடைய விளக்கத்தை வீடியோவில் பதிவு செய்து அதனை யூடியூப் தளத்தில் பதிவேற்றினார். அந்த வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுமாறு உறவுக்கார பெண்ணிடம் கூறினார். இதன் பிறகுதான் அந்த மாயம் நிகழ்ந்தது.
கானின் உறவுக்கார பெண் அந்த வீடியோ பாடங்களை விரும்பி படித்ததோடு அவற்றை தனது தோழிகளோடும் பகிர்ந்துகொண்டார். தோழிகளும் வீடியோ பாடத்தை பார்த்து விட்டு கான் விளக்கும் அளிக்கும் முறையால் கவரப்பட்டனர். எனவே தங்களுக்கும் வீடியோ பாடம் நடத்துமாறு கெஞ்சினர்.
இதை எதிர்பார்க்காத கான் வியந்து போனாலும் அவர்கள் வேண்டுகோளை ஏற்று வீடியோ பாடங்களை உருவாக்கி தரத் தொடங்கினார்.
மெல்ல மெல்ல வீடியோ பாடங்கள் சேர்ந்துகொள்ளவே மற்றவர்களும் பயன்பெறட்டுமே என்ற நோக்கத்தில் எல்லா பாடங்களையும் இணைய தளத்தில் இடம் பெற வைத்து புதிய பாடங்களையும் உருவாக்கினார். இப்படித்தான் உருவானது கான் அகாடமி.
2004ம் ஆண்டு கான் இதனை பகுதி நேர பணியாகத்தான் செய்து வந்தார். ஆனால் வரவேற்பும், மாணவர்களும் குவியவே தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு முழு நேர பேராசிரியராகி விட்டார்.
தனது பாடங்கள் போர் அடிக்கக் கூடிய ரகம் அல்ல என்று கான் பெருமையோடு சொல்லிக்கொள்கிறார். போகிற போக்கில் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை அளிப்பவை இவை என்கிறார்.
ஒரு விதத்தில் கான் சொல்வது சரிதான். வீடியோ பாடங்கள் அலுப்புக் கூடியவையாக இருக்கக்கூடாது. அவை சுவாரஸ்யம் தர வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவென்றால் வகுப்பறையில் நடத்தப்படும் பாடங்கள் அப்படியே வீடியோ பாடங்களாக மாற்றப்படுகின்றன. இணையத்திற்கென்று எந்த மாற்றமும் செய்யப்படுவதில்லை. புதுமையும் புகுத்தப்படுவதில்லை. கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பாடங்களை கவனிப்பது என்பது சவாலான விஷயம்தானே.
கல்லூரி சூழலில் வகுப்பறை எனும் பௌதீக இடத்தில் அமர்ந்து பேராசிரியர்கள் நடத்தும் பாடத்தை கவனிப்பது வேறு, வீட்டிலிருந்து இணையம்மூலம் பாடங்களை கேட்பது என்பது வேறு. சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இல்லாவிட்டால்மனம் வீடியோ பாடத்தில் லயிக்காது. ஆனால் கான் நடத்தும் வீடியோ பாடங்கள் இணைய யுகத்திற்கு ஏற்றவையாக இருக்கின்றன. அதிகபட்சம் 20 நிமிடத்தில் தனது பாடத்தை அவர் முடித்துக்கொள்கிறார். அதாவது சராசரியாக ஒரு யூடியூப் வீடியோ காட்சியை பார்த்து முடிக்கும் நேரத்தில் அவர் தனது பாடத்தை முடித்துக்கொள்கிறார். அவர் பாடம் நடத்தும் முறையும் வித்தியாசமானது. மற்ற பேராசிரியர்கள் போல ஏதோ பிரசங்கம் செய்வது போல இல்லாமல் நட்புணர்வோடு அருகே அமர்ந்து சொல்லி கொடுக்கும் வகையில் அவரது பாடங்கள் அமைந்துள்ளது. இந்த தோழமையே கானின் பாடங்களை பிரபலமாக்கி உள்ளது. மாணவ பருவத்தில் எனக்கு எவ்வாறு கற்றுத் தரப்பட வேண்டும் என்று விரும்பினேனோ, எதிர்பார்த்தேனோ அதே முறையில் மாணவர்களுக்கு இப்போது நான் கற்றுத் தருகிறேன் என்கிறார் கான்.
எனவே வகுப்புகளையும் பேராசிரியர்களையும் வெறுப்பவர்கள் கானை நேசிப்பது நிச்சயம். ஆனால் கான் கல்லூரியில் பாடம் பயிலலாமே தவிர பட்டம் வாங்க முடியாது. இருப்பினும் பாடங்களை நன்றாக புரிந்துகொள்வதற்காக கேள்வி கேட்டு பதில் அளிக்கும் பயிற்சிகளை வைத்திருக்கிறார். கான் பாடங்களின் வரம்பை மற்ற எவரையும் அவரது மாணவர்கள் நன்றாக புரிந்துகொண்டுள்ளனர். கான் வகுப்பை பள்ளி, கல்லூரிகளுக்கு மாற்றாக நினைக்காமல் அவற்றுக்கு துணை செய்யக்கூடியதாகவே மாணவர்கள் கருதுகின்றனர். வகுப்பில் சரியாக புரியாத விஷயங்களை விளங்கிக்கொள்ள கான் பாடங்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.
www.khanacademy.org

0 Comments on “இது யூடியூப் பல்கலைக்கழகம்”
பலே பிரபு
அருமையான தகவல். கல்லூரி தேர்வுகள் இருந்ததால் சில நாட்கள் வர முடியவில்லை. இனி தொடர்ந்து வருகிறேன்.
cybersimman
வாருங்கள் நண்பரே.
hsiraj
US President obama praise the Khan academy….
jegadeeswaran
Furthermore Bills Gate foundation now sponsoring Khan Academy..
Thanks mate.