இண்டர்நெட் உலகில்
‘நெட்பிலிக்ஸ்’ மாதிரி என்பது மிகவும் புகழ் பெற்றது.
திரைப்பட டிவிடி துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்திய இந்த மாதிரி வேறு துறைகளிலும் வெற்றிகரமாக பின்பற்றலாம்.
அந்த வகையில் கலைத்துறைக்கு ‘நெட்பிலிக்ஸ்’ மாதிரியை, டர்னிங் ஆர்ட் இணைய தளம் கொண்டு வந்திருக்கிறது. பெயருக்கு ஏற்பது இந்த இணைய தளம் கலை படைப்புகளை வாங்கும் தன்மையை தலைகீழாக மாற்றி அமைத்திருக்கிறது.
இன்னொரு விதமாக சொல்வது என்றால் கலை படைப்புகளை ஜனநாயக மயமாகவும் ஆக்கி இருக்கிறது.
இணைய டிவிடி வாடகை சேவையான ‘நெட்பிலிக்ஸ்’ சேவையின் சிறப்பம்சம், இண்டர்நெட் மூலம் திரைப்பட டிவிடிக்களை வாடகைக்கு தருவித்துக்கொள்ள உதவுவதேயாகும்.
அதாவது இண்டர்நெட் மூலம் விருப்பமான டிவிடியை ஆர்டர் செய்து விட்டு அவற்றை தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம். டிவிடி மையங்களில் டிவிடிக்களை வாடகைக்கு எடுப்பதுபோலவே ஆன்லைன் மற்றும் ஆப்லைன் உலகை இணைத்து உருவாக்கப்பட்ட இந்த சேவையின் மூலமாக இண்டர்நெட் வழியாக டிவிடிக்களை ஆர்டர் செய்ய முடியும்.
இந்த சேவையில் உள்ள அணுகூலம் என்னவென்றால் குறிப்பிட்ட காலத்திற்குள் டிவிடிக் களை திருப்பி தர வேண்டும் என்ற நிர்ப்பந்தமோ அப்படி திருப்பித் தர தவறும் பட்சத்தில் அபாரதம் செலுத்த வேண்டிய கட்டாயமோ கிடையாது.
சந்தாதாரராக சேர்ந்து, விருப்பமான டிவிடியை எவ்வளவு கால வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அடுத்த டிவிடி தேவை என்றால் கைவசம் உள்ள டிவிடியை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். அமெரிக்க திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சேவை புதிய இணைய மாதிரியாக பாராட்டப்படுகிறது.
தற்போது இந்த மாதிரியை அப்படியே பின்பற்றி டர்னிங் ஆர்ட் இணைய தளம் உருவாக்கப்பட் டுள்ளது. இந்த இணைய தளம் கலைப்படைப்புகளுக்கான ‘நெட்பிலிக்ஸ்’ என்று வர்ணிக்கப்படுகிறது. ‘நெட்பிலிக்ஸ்’ தளத்தில் எப்படி டிவிடிக்களை வாடகைக்கு எடுக்கிறோமோ அதே போல இந்த தளத்தில் கலை படைப்புகளை வாடகைக்கு எடுத்து வீட்டுச் சுவற்றில் மாட்டி அழகு பார்க்கலாம்.
கலா ரசனை என்பது எல்லோருக்கும் பொதுவானது என்றாலும் கலை படைப்புகளை வாங்குவது என்பது பெரும்பாலும் செல்வந்தர்களுக்கு மட்டுமே உகந்த விஷயமாக கருதப்படுகிறது .
கலை படைப்புகளை வாங்குவதற்கான வசதி இருக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருக்க, சரியான கலை படைப்புகளை தேர்வு செய்து வாங்குவதற்கான நிபுணத்துவமும் இருக்க வேண்டும்.
இதற்காக செல்வந்தர்கள் கலை விமர்சகர்கள் மற்றும் ஆலோசகர்களின் உதவியை நாடலாம். ஆனால் சாமன்யர்களுக்கு இது சாத்தியமில்லை.
இந்த சிக்கலுக்குத்தான் டர்னிங் ஆர்ட் இணைய தளம் அழகான தீர்வை முன் வைக்கிறது. இந்த தளம் மதிப்பு வாய்ந்த கலை படைப்புகளின் பிரதிகளை வாடகைக்கு தருகிறது.
சந்தாதாரர்கள் இந்த நகல்களில் தங்களுக்கு பிடித்தமானதை
ஆர்டர் செய்து அவற்றை தங்கள் வீட்டுச்சுவர்களில் மாட்டிக்கொள்ளலாம்.
பின்னர் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் அந்த ஓவியத்தை காண்பித்து அது மதிப்பு மிக்கதாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு விரும்பினால் மூல ஓவியத்தை அதற்குரிய விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்.
இல்லையென்றால் ஒரு மாதம் கழித்து அந்த நகலை திருப்பி ஒப்படைத்துவிட்டு வேறு ஒரு ஓவிய நகலை வாங்கி மாட்டிக்கொள்ள லாம்.எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியான கலை படைப்புகள் சுவற்றில் தொங்கிக்கொண்டிருப்பதை விரும்பாதவர்களும் இந்த சேவையை பயன்படுத்தி மாதம் ஒரு கலை படைப்பை வாங்கி தங்கள் வீட்டை அலங்கரிக்கச் செய்யலாம்.
நகல்களை வாங்கி பழக்கப் படுத்திக்கொள்வதின் மூலமாக இணையவாசிகளுக்கு கலை படைப்புகளை தேர்வு செய்வதில் நிபுணத்துவமும் உண்டாகும்.
————–
http://www.turningart.com/

0 Comments on “வாடகைக்கு கலை படைப்புகள்: உதவும் இணையதளம்”
Tamil Inithu
தமிழ் இனிது
தமிழ் இணையங்களையும், வலைப்பூக்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு முயற்சியே தமிழ் இனிது வலைத்தளம்.
http://tamilinithuthiratti.blogspot.com/
இதற்கு உங்களது ஆதரவு தேவை. உங்களது வலைத்தளங்களின், வலைப்பூக்களின் முகவரியை எமக்கு inithutamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.