ஒரு வலைப்பதிவை துவக்குவது போல ஒரு இணையதளத்தை துவக்குவது போல ஒரு இ காமர்ஸ் தளத்தையும் துவக்கி நடத்துவது இப்போது மிகவும் சுலபம் தெரியுமா?ஆம் இணையவாசிகள் விரும்பினால் தங்களுக்கான இணைய கடையை துவக்கிவிடலாம்.அதாவது தங்கள் வசம் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்கான முழுவீச்சிலான இ காமர்ஸ் தளத்தை அமைத்து கொள்ளலாம்.
இப்படி இ காமர்ஸ் தளங்களை நொடிப்பொழுதில் உருவாக்கி கொள்ள உதவும் இணைய சேவைகள் அநேகம் இருக்கின்றன.சுருக்கமாக சொல்வதானால் இணையம் விற்பதையும் வாங்குவதையும் மிகவும் எளிதாக்கி இருக்கிறது.
ஆனால் முழு நேர இ காம்ர்ஸ் தளம் எல்லம் தேவையில்லை,கைவசம் உள்ள பொருட்கள் அல்லது சேவையை விற்பனை செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் அழகான இணையதளம் ஒன்று இருக்கிறது.
பொதுவாக இணையம் மூலம் பொருட்களை விற்பனை செய தனிநபர்கள் கையாளும் இபே போன்ற ஏல தளங்கள் அல்லது கிரேக்லிஸ்ட் போன்ற வரிவிளம்பர தளங்களைவிட மேம்பட்ட சுவாரஸ்யமான வழியை ஸ்பிலைஸ் என்னும் அந்த தளம் வழங்குகிறது.
உங்களுக்கான சமூக சந்தை என்று வர்ணித்துக்கொள்ளும் இந்த தளத்தின் மூலம் உறுப்பினர்கள் தாங்கள் விரக விரும்பும் பொருள் அல்லது சேவையை பட்டியலிடலாம்.சிறிய நிறுவங்களை நடத்துபவர்கள் விளம்பர நோக்கிலும் இதனை பயன்ப்டுத்திக்கொள்ளலாம்.
அதே போல பொருட்களை வாங்க நினைப்பவர்கள் தங்களுக்கு தேவைப்படும் பொருள் அல்லது சேவை பற்றி குறிப்பிடலாம்.உற்பத்தி பொருள் ,விநியோகிஸ்தர்கள்,பகுதி நேர ஊழியர்கள் என எந்த சேவையை வேண்டுமானாலும் வாஙக் விழையலாம்.
அதன் பிறகு இருதரப்பினருமே எதையும் செய்ய வேண்டியதில்லைஎல்லாவற்றையும் ஸ்பிலைஸ் பார்த்துக்கொள்கிறது.அதாவது விற்பனை மற்றும் வாங்க விருப்பம் தெரிவித்தவர்களின் பட்டியலை பரிசிலனை செய்து இரு தரப்பினரிடையே தேவை அடிப்டையிலான தொடர்பை ஏற்படுத்தி தருகிறது.
அதாவது விற்பனையாளர் மற்றும் வாங்குபவர் இடையே பொருத்தம் பார்த்து அவர்களைடையே தொடர்பை உண்டாக்கி தருகிறது.உதாரணமாக ஒருவர் தனது வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை விற்க விரும்புவதாக தெரிவித்திருந்தால் அவரை கம்ப்யூட்டர் வாங்க விரும்புவதாக தெரிவித்த உறுப்பினரோடு தொடர்பு கொள்ள வைக்கும்.
பின்னர் இருவரும் நேரிடையாக தொடர்பு கொண்டு விலை உள்ளிட்ட விஷயங்களை பேசி முடிவு செய்து கொள்ளலாம்.
பொருட்களை பட்டயலிட்டுவிட்டு யாரவது வாங்க விருப்பம் தெரிவித்துள்ளனரா என்று அலைபாய வேண்டியதில்லை.அதே போல வாங்க விரும்புகிறவர்கள் தாங்கள் விரும்பும் பொருட்களை தேடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
பட்டியலிட்டால் போதும் இந்த தளம் விற்பவரையும் வாங்குபவரையும் சேர்த்து வைக்கிறது.
ஆனால் ஒன்று இந்த சேவையை பயன்படுத்த உங்கள் டிவிட்டர் அல்லது பேஸ்புக் கணக்கை இயக்கி கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
இணையதள முகவரி;http://www.splize.com/

2 Comments on “எதையும் விற்க வாங்க ஒரு இணையதளம்.”
M,shajahan
paper cups ,100ml,110ml,colare
M,shajahan
i paper cups