ஈகோஃபீரிக் ஒரு பசுமை தேடியந்திரம்.ஆனால் இன்னுமொரு பசுமை தேடியந்திரம் அல்ல;மற்ற பசுமை தேடியந்திரங்கள் போல இது சுற்றுச்சூழல் தொடர்பான செய்திகளையோ அல்லது தகவல்களையோ தேடித்தருவதில்லை;மாறாக பசுமை நோக்கத்தை செயல்படுத்துவதற்கான வழியை காட்டுகிறது.
ஈகோஃபீரிக்கை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் ஃபீரிசைக்கிள் மற்றும் அதன் வழி தோன்றல் தளங்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.பீரிசைக்கிள் தளத்தை இலவசங்களுக்கான இபே என்று சொல்லலாம்.இபே ஏல தளம் எவ்வாறு எல்லா பொருட்களையும் விற்பனை செய்ய வழி செய்கிறதோ அதே போல ஃபிரிசைக்கிள் ஒருவர் தேவையில்லை என்று கருத்தும் பொருட்களை அது தேவைப்படக்கூடிய இன்னொருவருக்கு வழங்கிட உதவுகிறது.
வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை தேவையில்லை என்று நினைப்போம்.ஆனால் அந்த பொருளை வீணாக்கவோ தூக்கியெறியவோ மனது இடம் கொடுக்காது.
எங்கோ யாரோ ஒருவருக்கு அந்த பொருள் தேவையானதாக இருக்கும்.அவரால் அதனை வாங்க முடியாமல் கூட இருக்கலாம்.அத்தகைய ஒருவரிடம் அந்த பொருளை கொடுக்க முடிந்தால் இருவருக்குமே மகிழ்ச்சி ஏற்படும் அல்லவா?ஆனால் அந்த யாரோ ஒருவரை தேடி கண்டுபிட்ப்பது எப்படி?
இந்த இடத்தில் தான் ஃபிரிசைக்கிள் வருகிறது.இந்த தளத்தில் தேவையில்லாத பொருட்களை பட்டியலிடலாம். அதே போல பொருட்கள் வேண்டுவோர் தங்கள் தேவையை குறிப்பிடலாம். அதன் பிறகு இரு தரப்பினரிடையேயும் பொருத்தம் பார்த்து தொடர்பு கொள்ள வைக்கிறது.
அந்த வகையில் பொருட்களை வழங்க அவிரும்புகிறவர்களுக்கும் பெற விரும்புகிறவர்களுக்கும் இடையிலான இணைப்பு பாலமாக இருந்து பயனுள்ள பொருட்கள் வீணாவதை தவிர்க்கிறது.
ஃபிரிசைக்கிள் ஒரு இனைய இயக்கமாகவே உருவாகி இருக்கிறது என்றும் சொல்லலாம்.இதே முறையில் மேலும் பல தளங்களும் இருக்கின்றன.
இதே போலவே பரஸ்பரம் இணையவாசிகள் தங்களிடம் உள்ள பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் தளங்களும் இருக்கின்றன.
உதாரணமாக பார்த்து முடித்த சிடியை வீட்டில் தூசி படிய வைத்திருக்காமல் இந்த தளங்களில் சமர்பித்து வேறு ஒருவர் இதே போல சமர்பித்த சிடியை பதிலாக பெற்று கொள்ளலாம்.இத்தகைய பண்ட மாற்று தளங்கள் பொருட்கள் வீணாவதை தடுத்து வீண் செலவையும் குறைக்கின்றன.
இனி ஈகோஃபிரீக் தளத்திற்கு வருவோம்.
ஃபிரிசைக்கிள் போன்ற மற்றும் பண்டமாற்று தளங்களில் பட்டியலிடப்படு இலவச மற்றும் பரிமாற்ற பொருட்களை தேடிக்கொள்ள இந்த தேடியந்திரம் உதவுகிறது.இலவசமாக பொருட்கள் தேவைப்படுபவர்கள் இந்த தளத்தில் அவற்றை தேடிப்பார்க்கலாம்.தேவையான பொருளை குறிப்பிட்டதுமே 45 க்கும் மேற்பட்ட இலவச தளங்கள் மற்றும் பண்ட மாற்று தளங்களில் தேடி பொருத்தமான பொருட்களை பட்டியலிடுகிறது.தேவையில்லாத பொருட்களை பட்டியலிடும் பிற இடங்களிலும் தேடி முடிவுகளை தருகிறது.
பொருட்களை தூக்கி வீசு சுற்றுச்சுழலை மாசு படுத்த விரும்பாதவர்கள் இந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி கொள்ளல்லாம்.செல்லப்பிராணிகள் முதல் கொண்டு எந்த பொருளையும் இதன் மூலம் தேடிப்பெறலாம்.மறவ்ரக்ள் தேடிபார்த்த பொருட்கலையும் பார்வையிடலாம்.தேவையான் பொருள் வந்தால் தகவல் தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொள்ளலாம்.
நடைமுறையில் பயன்தரக்கூடிய அருமையான் தேடியந்திரம் தான். ஆனால் இதில் உள்ள் ஒரே பிரச்சனை என்னெவென்றால் இத செயல்பாட்டு எல்லை அமெரிக்கா, கன்டா மற்றும் யுகே வோடு சரி.
மற்றொரு விஷயம் இந்த தேடியந்திரத்தை புரிந்து கொள்ள உதவும் என்று குறிப்பிடப்பட்ட ஃபிரிசைக்கிள் தளத்தில் சமர்பிக்கப்படும் பொருட்களை இது தேடி தருவதில்லை.ஃபிரிசைக்கிள் கட்டணம் கேட்பதால் அதன் முடிவுகள் பட்டியலிடப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் ஃபிரிசைக்கிள் போன்ற தளங்களில் உள்ள பொருட்களை தேடிப்பெறலாம்.
அதேந் நேரத்தில் தேவையில்லாத பொருட்கலை வழங்க நினைப்பவர்களும் அதற்கான இடஙக்ளை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேடியந்திர முகவரி;http://www.ecofreek.com/