பிடிஎப் கோப்புகளை தேட மேலும் ஒரு தேடியந்திரம்

பிடிஎப் வடிவிலான கோப்புகளை தேட தனியே தேடியந்திரம் தேவையில்லை தான்.ஒருவர் பயன்படுத்தும் தேடியந்திரத்திலேயே தேவையான‌ தலைப்புடன் பிடிஎப் கோப்பு என சேர்த்து கொண்டால் பிடிஎப் கோப்பு வடிவில் இருக்கும் தக‌வல்கள் பட்டியலிடப்படலாம்.

இருப்பினும் பிடிஎப் கோப்புகளை மட்டுமே தேடித்தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.ஒரு காரணம் இணையவாசிகளுக்கு பிடிஎப் கோப்பு என குறிப்பிட்டு தேடும் கஷ்டத்தை கூட தராமல் இந்த கோப்புகளை தேடித்தரும் விருப்பமாக இருக்கலாம்.என்ன தான் இருந்தாலும் நேரடியாக நாம் விரும்பும் வடிவிலான தகவல்களை மட்டுமே தேட முடிவது ஒரு அணுகூலம் தானே.அதோடு கூகுல் போன்ற தேடியந்திரங்களில் என்ன தான் பிடிஎப் கோப்புகள் என்று குறிப்பிட்டாலும் முடிவுகள் முழுவதும் பிடிஎப் சார்ந்ததாகவே இருக்கும் என்று உத்திரவாதமில்லை.

நெல்லில் கலந்த பதர் போல வேறு விதமான தகவல்களும் கலந்திருக்கலாம்.இதற்கு மாறாக பிடிஎப் தேடியந்திரங்களில் தேடும் போது பிடிஎப் கோப்புகளை மட்டுமே பெற முடியும்.

ஆனால் ஒன்று பெயருக்கு தான் அவை பிடிஎப் தேடியந்திரங்களே தவிர உண்மையில் அவை பிரத்யேக பிடிஎப் தேடியந்திரங்கள் இல்லை.பெரும்பாலும் கூகுலின் தேடல் தொழில்நுட்பத்தை பயன்ப‌டுத்தியே பிடிஎப் கோப்புகள் பட்டியலிடப்படுகின்ற‌ன.

கூகுலில் உங்கள் சார்பில் பிடிஎப் தேடலில் ஈடுபடுவதாக வைத்து கொள்ளலாம்.

அந்த வகையில் சர்ச் பிடிஎப் ஃபைல்ஸ் பிடிஎப் தேடியந்திரத்தையும் சேர்த்து கொள்ளலாம்.ஆனால் கூகுலுக்கு மாறாக யாஹுவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கோப்புகளை இது தேடித்தருகிற‌து.

பயனாளிகளுக்கு நட்பான பிடிஎப் தேடியந்திரம் என்று வர்ணித்து கொள்ளும் இது இணையவாசிகள் டைப் செய்யும் குறிசொல்லுக்கு பொருத்தமான கோப்புகளை நொடிப்பொழுதில் பட்டியலிடுகிறது.

தேடல் முடிவுகளில் உள்ள கோப்புகளை அப்ப‌டியே முன்னோட்டம் பார்க்கும் வசதியும் உண்டு.டவுண்லோடு செய்து கொள்ளும் வசதியும் உண்டு.

தேடியந்திர முகவரி;http://searchpdffiles.com/

————-

பிடிஎப் தொட‌ர்பான முந்தைய பதிவுhttp://cybersimman.wordpress.com/2009/12/07/pdf/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *