பயனுள்ள நினவூட்டல் சேவை இணையதளங்கள்.

இணைய நினைவூட்டல் சேவைகளில் முன்னணி தளம் என்றோ நட்சத்திர அந்தஸ்து மிக்க தளம் என்றோ குறிப்பிடக்கூடியவையாக‌ எந்த தளமும் இருப்பதாக தெரியவில்லை.ஆனால் 2ரிமைன்ட்ரஸ் தளத்தை விரிவான நினைவூட்டல் சேவை என வர்ணிக்கலாம்.காரணம் இந்த தளம் பிறந்த நாளை நினைவில் வைத்திருப்பதில் துவங்கி செய்ய வேண்டியவை,திட்டமிட்டவை எம எல்லாவறையும் நினைவில் வைத்திருக்க உதவுகிற‌து.

வண்ணமயமான பின்னணியில் அமைந்திருக்கும் இந்த தளம் தலைவாசல் இலையில் சாப்பாடு போடுவது போல நினைவூட்டல் வசதியை பலவித அம்சங்களோடு வழங்குகிறது.அடிப்படையில் பிறந்தநாளுக்கான நினைவூட்டல் சேவை என்ற‌போதிலும் இதன் இதர அம்சங்களையும் பயன்பாட்டையும் புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம்.

இதற்கு மாறாக எளிமையான நினவூட்டல் சேவையை விரும்புகிற‌வர்கள் எம் எஸ் ஜி மீ.அட் ,பார் லேட்டர் போன்ற‌ சேவைகளை பயன்படுத்தலாம்.

சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருவது போல இந்த தளங்கள் மிக எளிமையாக நினைவூட்டல் சேவையை வழங்குகின்றன.இமெயில் மூலம் குறித்த நேரத்தில் நினைவூட்டும் பணியை இவை மேற்கொள்கின்ற‌ன.

எந்த விஷயத்தை மறக்காமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த விவரத்தை இந்த தளத்தில் குறிப்பிட்டு அதனை நினவூட்ட வேண்டிய நாள் மற்றும் நேரத்தையும் தெரிவித்து விட வேண்டும்.பின்னர் நாம் குறிப்பிட்ட நாளில் இமெயில் மூலம் நினவூட்டல் அனுப்பி வைக்கப்ப‌டுகிறது.

எம் எஸ் ஜி .அட் இணையதளத்தை பொருத்தவரை முதலில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதன் பிற‌கு நினைவூட்டல் வாசகத்தையும் நினைவூட்டல் தினத்தையும் குறிப்பிட்டால் போதுமானது.

பார் லேட்டர் தளம் இன்னும் கூட எளிமையானது.பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.இதன் வடிவமைப்பும் இமெயில் போலவே இருப்பதால் கொஞ்சம் சுவையானது.

இமெயில் போல உள்ள பகுதியில் நினவுட்டல் தலைப்பையும் அதன் கீழ் நினைவூட்டல் விவரத்தையும் டைப் செய்து விட்டு இமெயில் முகவரியை சமர்பித்தால் நாம் குறிப்பிடும் நேரத்தில் அந்த மெயில் நம் இன்பாக்ஸ் தேடி வரும்.

நட்ஜ்மெயில் இணையதளமும் இதே போன்ற‌ சேவையை வழங்குகிறது.நட்ஜ் மெயிலை எளிமையானது என்று சொல்வதற்கில்லை.ஆனால் இமெயில் மூலம் நினைவூட்டலை பெறலாம் என்பதோடு நம்க்கு வந்த மெயிலையும் பார்வேர்டு செய்து கொள்ளலாம்.ஐபோன் உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களிலும் செயல்படகூடியது.மீண்டும் மீண்டும் கூட நினைவூட்டலை பெறலாம்.கூகுல் நாட்காட்டியுடன் ஒருங்கினைப்பது உள்ளிட்ட கூடுதல் வசதிகள் உள்ளன.கட்டண‌ சேவையும் உள்ளது.

பாலோஅப்.சிசி என்னும் இணையதளமும் இந்த வகையை சேர்ந்தது தான்.ஆனால் இந்த சேவையை பயன்படுத்தும் விதத்தை புரிந்து கொள்ளவே மெனக்கெட வேண்டும்.இதற்கான வரைப்ப்ட வழிகாட்டலே கொடுக்கப்படூள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்கள்.இருப்பினும் விற்பனை பிரதிநிதிகள் போன்றவர்களுக்கு பயன்ப்டகூடிய குழு நினைவூட்டல் அம்சங்கள் உள்ளன.

————
http://msgme.at/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பயனுள்ள நினவூட்டல் சேவை இணையதளங்கள்.

  1. veru usefull site

    rangan

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *