இன்று என்ன சமையல்? என்று கேட்டால் இதோ மெயிலை பார்த்து சொல்கிறேன் என்று பதில் வந்தால் எப்படி இருக்கும்?
இப்படி ஆச்சர்யத்தை அளிக்கும் தளமாக லாலிஹாப் விளங்குகிறது.இது ஒரு சமையல் குறிப்பு தளம் என்றாலும் வழக்கமான தளம் இல்லை.லட்சிய சமையல் தளம் என்று சொல்லலாம்.அதாவது ஆரோக்கியமான உணவு எல்லோருக்கும் கிடைக்கும் என்ற நோக்கத்தை கொண்ட தளம்.
உணவு சுவையானதாக இருந்தால் மட்டும் போதாது,ஆரோக்கியமானதாக் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வலுப்பெற்று வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.கொழுப்பு சத்து போன்றவை இல்லாத ,உடலுக்கு தீங்கு விளவிக்காத தன்மை கொண்டதாக நாம் உண்ணும் உணவு இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர்.
இத்தகைய உணவு வகைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஆரோக்கிய சமையல் குறிப்பு சேவைகளை லாலிஹாப் இணையதளம் வழங்கி வருகிறது.அதுவும் எப்படி ஒருவர் தான் வசிக்கும் நகரத்தை குறிப்பிட்டால் ,அந்த நகரத்தில் கிடைக்கும் உணவு பொருட்களை கொண்டு எந்த வகையான சமையல் செய்வது பொருத்தமாக இருக்கும் என்று இமெயிலில் தகவல் தருகிறது.
உணவு பழக்கம்,விரும்பு காய்கறிகள் போன்றவற்றை குறிப்பிட்டால் அவற்றையும் கருத்தில் கொண்டு பரிந்துரை அளிக்கிறது.
ஆனால் ஒன்று அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு தான் இந்த தளத்தை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.அதிலும் சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட சில நகரங்கள் மட்டுமே இப்போது உள்ளது.மற்ற நகரங்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன.
அமெரிக்கர்களுக்கான சமையல் குறிப்பு தளத்தால் எங்களுக்கு என்ன பயன் என்று கேட்கலாம்?
இந்த தளத்தின் மைய கருத்தில் உள்ள புதுமை நமக்கு வழகாட்டலாம் என்பதே விஷயம்.
இணையத்தின் பயன்பாடும் எல்லைகளும் அதிகரித்து வரும் நிலையில் சமையல் குறிப்பு வழங்குவதில் எத்தனை புதுமையான முயற்சிகள் எல்லாம் மேற்கொள்லப்பட்டு வருகின்றன என்பதறகான அடையாளமாக இந்த இணையதளம் விளங்குகிறது .யோசித்து பாருங்கள் நம்மூரிலும் இதே போல ஒரு சேவை அமைந்து நெல்லையில் வசிப்பவரா அல்லது மதுரையில் வசிப்பவரா என்று கேட்டு அந்த நகரங்களின் தனமைக்கேற்ற உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
அதே போல டெல்லியில் வசிக்கும் தமிழர் என்றோ அல்லது சென்னையில் வசிக்கும் வட நாட்டவர் என்றோ குறிப்பிட்டால் அதற்கேற்ற ஆரோக்கிய உணவு வகை குறிப்புகள் இமெயிலில் வந்து சேர்ந்தால் எப்படி இருக்கும்?
உள்ளுர் பொருட்களை கொண்ட உள்ளுர் வழக்கப்படி தயாரிக்கப்படும் உணவு வகையே ஆரோக்கியமானது என்ற கருத்து ஒரு இயக்கமாகவே வலுப்பெற்று வரும் காலத்தில் நம் தமிழருக்கும் எம் இந்தியருக்கும் இத்தகைய சேவை வேண்டும் தானே!

0 Comments on “இமெயிலில் வரும் சமையல் குறிப்புகள்.”
prajaraman
//உணவு சுவையானதாக இருந்தால் மட்டும் போதாது,ஆரோக்கியமானதாக் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இப்போது வலுப்பெற்று வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.//
இத்தலத்திலுள்ள எல்லா விடியோக்களை பார்த்தவுடன், இக்கருத்தில் உடன்பட மாட்டீர்கள்
http://anatomictherapy.org/videos.html
venkatachalam
p
Pingback: சமையல் குறிப்புகளும் இனி சமூகமயம். « Cybersimman's Blog