உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது.
அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது.
இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க வேண்டிய அவசியத்தை இணையவாசிகளுக்கு விளக்க வேண்டியதில்லை.ஸ்பேம் என்று சொல்லப்படும் வீணான இமெயில் தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ஒருவருடைய இமெயில் முகவரி இணைய கயவர்களின் கையில் சிக்காமல் இருக்க வேண்டும்.
இதற்கு நம்பகத்தனமை இல்லாத இடங்களில் இமெயில் முகவரியை தராமல் இருப்பதே சிறந்தது.ஆனால் சில நேரங்களில் தகவல்கலை பெற இமெயில் முகவரியை சமர்பிப்பதை தவிர வேறு வழியில்லை.
இது போன்ற நேரங்களில் சமர்பிப்பதற்காக என்றே தற்காலிக இமெயில் முகவரிகளை உருவாக்கி கொள்ளலாம் தான். எண்ணற்ற தளங்கள் இப்படி யூஸ் அண்டு துரோ வகை முகவரிகளை வழங்குகின்றன.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தளங்களுக்கு இந்த தற்காலிக முகவரிகள் ஒகே.ஆனால் தொடர்ச்சியாக தகவல்களை பெற நினைக்கும் போது நிரந்தரமான இமெயில் முகவரி தேவை.
இந்த இடத்தில் தான் இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் மறைத்து அனுப்பும் அவசியம் ஏற்படுகிறது.ஸ்கிர்.ம் சேவை இப்படி முகமுடியோடு இமெயிலை அனுப்ப உதவுகிறது.
இருப்பினும் இந்த சேவை இமெயில் முகவரிகளை அறுவடை செய்யும் பாட்களிடம் இருந்து தப்பிப்பதற்கானது.இமெயில் முகவரியை சமர்பிக்காமாலேயே இமெயில் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் நிலையில் இவை உதவாது.
அதாவது சில நேரங்களில் அனேமதையமாக இமெயில் முகவரியை சமர்பிக்கும் நிலை ஏற்படலாம்.
உதாரணமாக கடன் சேவை தொடர்பான தகவலை பெற விரும்பும் போது உண்மையான இமெயில் முகவரியை சம்ர்பிக்க தயக்கம் ஏற்படலாம்.ஆனால் கடன் சேவை தொடர்பான தகவல்கள் இமெயில் மூலம் வரவேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.
இப்போது நாட் ஷேரிங் மை இன்போ தளத்திற்கு சென்று உங்கள் இமெயில் முகவரியை சமர்பித்தால் அது அதற்கு மாற்றாக இரு இணைய முகவரியை அளிக்கும்.இமெயில் முகவரி மறைக்கப்பட்ட அந்த முகவரியை நீங்கள் தேவையான இடத்தில் தைரியமாக சமர்பிக்கலாம்.
அதன் பிறகு இமெயில்கள் உங்கள் இன்பாக்சிற்கு பார்வேர்டு செய்யப்பட்டு விடும்.
இணையத்தில் உங்கள் அடையாலாம் தெரியாமல் தொடர்பு கொள்ளப்பட வேண்டும் என்று நினைக்கும் இடங்களில் இந்த மறைமுக இமெயில் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://notsharingmy.info/

0 Comments on “இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.”
winmani
பயனுள்ள தகவல்
cybersimman
நன்றி நண்பரே.
Pingback: குப்பை மெயில்களை தடுக்க புதிய வழி. « Cybersimman's Blog
Pingback: நாசா தொழில்நுட்பத்தில் இமெயில் அனுப்ப! « Cybersimman's Blog
Pingback: கொரில்லா மெயில் சேவை. | Cybersimman's Blog