பேஸ்புக் உயிர்காக்கும்.

பேஸ்புக் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு வந்தது பற்றி பல கதைகள் உள்ளன.இது சமீபத்திய கதை.நெகிழ வைக்கும் க்தையும் கூட.

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் உள்ள பிரிகானில் வசிப்பவர் பீட்டர் கசரு.59 வயதான கசரு தனியே தான் வசித்து வருகிறார்.சமீபத்தில் இவருக்கு முதுகு வலி பிரச்ச்னை காரணமாக பக்கவாதம் தாக்கியது.வீட்டில் தனியே இருந்தவர் உதவிக்கு யாரையும் கூப்பிட முடியாத நிலை.

வலியால் துடித்தபடி தவித்த கசருவின் செல்போனில் சோதனையாக சார்ஜ் இருக்க‌வில்லை.போனிலும் யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் லேப்டாப் மூலம் பேஸ்புக் நண்பர்களின் உதவியை நாட முயன்றார்.

முதுகு வலி நகர எழுந்திருக்க முடியாமல் முடக்கி போட்டிருந்ததால் கொஞ்சம் கொஞ்சமாக நக‌ர்நது தான் லேப்டாப்பை அடைந்தார்.அதற்கே ஒரு மணி நேரம் ஆனது.

யாராவது அவ‌சர உதவி எண்ணை அழைத்து அம்புலன்சை அழையுங்கள் எனக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிற‌து என தட்டுத்தடுமாறிய படி டைப் செய்தார்.

தரையில் கிடந்த‌ நிலையில் மூக்கு கண்ணாடி இல்லாமல் சரியாக பார்க்க முடியாமல் அவதிப்பட்ட படி அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை டைப் செய்தார்.

இதை பார்த்ததுமே கனடா மற்றும் அமெரிக்காவில் உள்ள நண்பர்க‌ள் சிலர் உதவிக்கு ஏற்படுதவதாக கூறி தைரியம் தந்தனர். இதனிடையே அருகிலேயே வசிக்கும் ஜூலியட் என்னும் பெண்மணி இதனை படித்துவிட்டு அவ‌சர‌ எண்ணை அழைத்து தகவல் சொல்லிவிட்டார்.

அடுத்த 20 நிமிடத்தில அம்புலன்ஸ் அவரது வீட்டை தேடி வந்துவிட்டது.அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் கொஞ்சம் தமத‌மாகியிருந்தாலும் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும என்று தெரிவித்தனர்.

அப்போது தான் அவருக்கு பேஸ்புக் நண்பர்கள் உதவிக்கு வந்து உயிர் காத்துள்ளனர் என்று புரிந்தது.

கொஞ்சம் குனமானதும் பேஸ்புக் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு பதிவை எழுதினார்.

பேஸ்புகில் தான் பெரும்பாலும் கின்டலான பதிவுகளியே எழுதினாலும் அபய‌க்குரலை நண்பர்கள் அலட்சியப்படுத்தாமல் உதவுக்கு வந்து உயிர் காத்தனர் என்று கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பேஸ்புக் உயிர்காக்கும்.

  1. அருமையான பதிவு.
    நல்ல தகவல்கள்.
    வாழ்த்துக்கள்.

    Reply
  2. அன்பின் சைபர்சிம்ஹன் – அருமையான நிகழ்வினைப் பகிர்ந்தமைக்கு நன்றி – முகநூலில் மட்டுமல்ல – இணிஅயத்தில் உள்ள பல ச்மூக வலைத் தளங்களீல் முன் பின் தெரியாதவர்களுக்குப் பல்ரும் உதவுகின்றனர். இது தான் இணையத்தின் பலம். நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      ஆம் நண்பரே ,இணையத்தை நான் நேசிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்.

      அன்புடன் சிம்மன்.

      Reply
  3. இணையத்தின் இன்னொரு அழகான முகம், நட்புடன், அன்பு

    Reply
    1. cybersimman

      ஆம் நண்பரே.

      Reply
  4. shakkthi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *