பிடிஎப் புத்தகங்களும் ,இ புத்தகங்களும் ஒன்று தானா?இரண்டையும் ஒரே அர்தத்தில் பயன்படுத்தலாமா?பயன்படுத்துவது சரியாக இருக்குமா?சரியாக இருந்தாலும் குழப்பத்தை ஏற்படுத்தாமல் இருக்குமா?
பி டி எப் எஸ் பி இணையதளம் தான் இந்த கேள்விகளுக்கான பதில்களை சிந்திக்க வைக்கிறது.
பி டி எப் எஸ் பி இணையதளத்தை பிடிஎப் வடிவிலான புத்தகங்களுக்கான தேடியந்திரம் என்று சொல்லலாம்.பிடிஎப் வடிவிலான புத்தகங்களின் இருப்பிடம் என்றும் சொல்லலாம்.இதன்வசம் கிட்டத்தட்ட 70 லட்சத்திகும் மேற்பட்ட பிடிஎப் புத்தகங்கள் இருக்கின்றன.இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.விரைவில் ஒரு கோடி புத்தகங்களை தொடக்கூடும் என்று நம்பலாம்.
பிடிஎப் புத்தகங்கள் தேவைப்படுபவர்கள் கூகுலில் தேடுவது போல இதிலும் தேடிப்பார்த்து விருப்பமான புத்தகத்தை டவுண்லோடு செய்து கொள்ளலாம்.இல்லை என்றால் முகப்பு பக்கத்தில் புகைப்படத்தோடு பரிந்துரைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் பட்டியலில் இருந்து விருப்பமானத்தை தேர்வு செய்து கொள்ள்லாம்.
பிடிஎப் கோப்பு வடிவில் உள்ள தகவல்களை தேடுவதற்கு என்று பிரத்யேக தேடியந்திரங்கள் இல்லாமல் இல்லை.அவற்றில் தேடும் போதும் பிடிஎப் கோப்புகளை மட்டும் அல்ல பிடிஎப் புத்தகங்களையும் கண்டுபிடிக்கலாம்.
இந்த தளம் பிரத்யேகமாக பிடிஎப் புத்தகங்களுக்கானாது என்பது தான் விசேஷம்.
பிடிஎப் கோப்புக்ளை தேடுவதற்கான நோக்கமும் தேவையும் வேறு.பெரும்பாலான தேடியந்திரங்களின் தேடல் பட்டியலில் இடம் பெறத்தவறும் பிடிஎப் வடிவிலான தகவல்களையும் சேர்த்து தேட விரும்பும் போது பிடிஎப் தேடியந்திரங்கள் தேவைப்படுகின்றன.
ஆனால் பிடிஎப் புத்தகங்கள் என்னும் போது வாசிப்பு அனுபவமே மேலோங்கி நிற்கும்.அப்போது பி டி எப் எஸ் பி தேடியந்திரமே சிறந்தது.நாவல் மற்றும் கையேடுகள் போன்றவற்றை படிக்க விரும்பினாலும் இதுவே ஏற்றது.
அதோடு இந்த தேடியந்திரத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டும் அல்லாது உலகின் பல மொழிகளில் உள்ள பிடிஎப் புத்தகங்களை அணுக முடியும் என்பது தான்.மேலும் புத்தகத்தின் பக்க அளவை குறிப்பிட்டும் தேடலாம்.
அதாவது பத்து பக்கங்கள் கொண்ட புத்தகம் மட்டும் தேவை என்றோ 100 பக்கத்துக்குள் உள்ள புத்த்கம் டேவை என்றோ குறிப்பிட்டு தேட்லை சுருக்கி கொள்ளலாம்.நாவல் போன்ற்வை தேவை என்றால் பக்க எண்ணிக்கையை அதிகரித்து கொள்ளலாம்.சிறுகதை அல்லது கையேடு போன்றவை என்றால் பக்கத்தின் என்ணிக்கையை குறைத்து கொள்ளலாம்.
இந்த இரு அம்சங்களும் இத்தேடியந்திரத்தை விஷேசமானதாக ஆக்குகிறது.
இந்த தேடியந்திரத்தில் இடம் பெறுபவை பெரும்பாலும் பிடிஎப் வடிவிலான புத்தகங்கள்.சரி ,இதே போலவே இ புத்தகங்களை தேடித்தரும் புத்தகங்களும் இருக்கின்றன.இலவசமாக இபுத்தகங்களை படிக்க உதவும் தளங்களும் இருக்கின்றன.
எனில் இ புத்தகங்களுக்கும் பிடிஎப் புத்தகங்களுக்கும் வேறுபாடு என்ன?அநேகமாக அவை தயாருகும் விதம் மற்றும் அவற்றை படிப்பதற்கான சாதங்கள் பொருத்து இது மாறுபடும் என்று நினைக்கிறேன்.பிடிஎப் புத்த்கம் என்னும் போது ஒரு புத்தகத்தின் பக்கங்களை அப்படியே ஸ்கேன் செய்து பிடிஎப் வடிவில் மாற்றிவிடுவது.இவற்றை டிஜிட்டல் புத்த்கம் என்றும் குறிப்பிடலாம்.
இபுத்தகம் என்பது இணைய யுகத்திற்கான புத்த்கம் .டிஜிட்டல் புத்தகத்தில் கூடுதல் அம்சங்கள் எதுவும் கிடையாது.ஆனால் இபுத்தகத்திலோ இணைப்புகளில் துவங்கி அடிக்குறிப்பு வசதி என அசத்தலாம்.வாசகர்கள் அதனோடு பேசலாம்.ஒரு விதத்தில் இபுத்தகம் வளர்ந்து கொண்டே இருக்ககூடியது.
இபுத்தகம் பற்றி இன்னும் என்னவோ சொல்லலாம்.
நிற்க மேலே சொன்ன தேடியந்திரத்தில் ஒரே குறை தமிழ் பிடிஎப் புத்தகங்கள் இல்லை என்பது தான்.தமிழில் பிடிஎப் புத்தகங்களை தேடினால் தமிழ்கியுப்ஸ் என்னும் தளம் கண்ணில் படுகிறது.சென்னை லைப்ரரி தளத்தில் புதுமை பித்தன் துவங்கி பல எழுத்தாளர்களை வாசிக்கலாம்.கல்கியின் பொன்னியின் செலவனும் இபுத்தகமாக கிடைக்கிறது.தமிழ்நாவல்ஸ் ஆன்லைன் வலைப்பதிவிலும் தமிழ் இபுத்தகங்களை பார்க்கலாம்.ஆனால் ஒரே ரமணிசந்திரனின் ஆதிக்கம்.
இணையதள முகவரி;http://pdfsb.com/
பின் குறிப்பு;
நான் தொழில்நுட்ப ஆர்வலனே தவிர தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்டவன் அல்ல.எனக்கு தெரிந்த வரை இபுத்தகம் ,பிடிஎப் புத்தகம் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.இரண்டுக்குமான வேறுபாடு மற்றும் ஒற்றுமையை அறிந்தவர்கள் விளக்கி எழுதலாம்.அதனை கவுரவ சிறப்பு பதிவாக கூட வெளியிட தயாராக இருக்கிறேன்.
அன்புன் சிம்மன்.

0 Comments on “பிடிஎப் வடிவில் ஒரு கோடி புத்தகங்கள்.”
வலைஞன்
வணக்கம் நண்பரே
உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்…
http://www.valaiyakam.com/
ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about
கோவை கவி
one can see PdF books in noolaham.org ogso……
muni barathy
வணக்கம்
மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான இணையத் தளங்களைப் பற்றி உங்கள் பதிவுகள் மூலம்
அறிந்து கொள்ள முடிகிறது.
நன்றி. தங்கள் பணி மேலும் வளர்ந்து நம் தமிழ் கூறும் நல்லுலகை அடைய வாழ்த்துகிறேன்.
Pingback: தலைகீழ் பிடிஎப் கோப்புகள். « Cybersimman's Blog