ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல மதிய உணவை நண்பர்களுடன் சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்க வேண்டும்,அதே நேரத்தில் புதிய வர்த்தக தொடர்பு அல்லது தொழில் முறை உறவை ஏற்படுத்தி கொண்டது போலவும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பை உண்டாக்கி தரும் இணையதளங்களின் வரிசையில் லஞ்ச் மீட் சேவையையும் சேர்த்து கொள்ளலாம்.
மதிய உணவை மையமாக வைத்து கொண்டு நட்பு பாலம் அமைத்து கொள்ள வழி செய்யும் இந்த தளம் இனி ஒரு முறை தனிமையில் மதிய உணவு சாப்பிடாதீர்கள்,எங்கேயும் எப்போது நண்பர்களோடு சேர்ந்தே சாப்பிடுங்கள் என்கிறது.
தனிமையில் சாப்பிடாமல் இருப்பதற்கான சேவை என்பதே இதன் நோக்கம்.அதை தான் கோஷமாகவும் முன்வைக்கிறது.
மருத்துவ பிரதிநிதிகள்,ஐடி ஊழியர்கள்,ஆலோசகர்கள்,தொழில்முனைவோர் போன்றவர்களுக்கு இந்த வாசகத்தின் அருமை சொல்லமலே புரிந்து விடும்.காரணம் மதிய உணவு நேரம் என்பது பசியாறுவதற்கு மட்டும் அல்ல;சாப்பாட்டை சுவைத்தபடியே யாருடனாவது பேசி கருத்துக்களை பாரிமாறி புதிய வாய்ப்புகளை தேடிக்கொள்வதற்கானதும் தான்.
சாப்பிட்டு கொண்டே உரையாடலில் ஈடுபடுவதைவிட சுவாரஸ்யமானது வேறு என்ன இருந்து விட முடியும். உடன் சாப்பிடும் புதிய நண்பர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் .அப்படியே நம்மை பற்றி இன்னும் சரியாக அறிமுகம் செய்து கொள்ளலாம்.இந்த கருத்து பரிமாற்றம் தொழில்முறையான புதிய வாயில்களை திறந்து விடக்கூடியது.
அதனால் தான் திறமைசாலிகள் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சாப்பிட்டு கொண்டே பேசலாமா என்று மதிய உணவு நேரமாக பார்த்து ஓட்டலுக்கு அழைத்து சென்றுவிடுகிறார்கள்.
சிலருக்கு மட்டுமே கைவந்த கலையான இந்த மதிய உணவு சந்திப்பை எல்லோருக்கும் எற்படுத்தி தருகிறது லஞ்ச் மீட் சேவை.
தொழில்முறை நபர்களுக்கான வலைப்பின்னல் சேவை தளமான லிங்க்ட் இன் தளத்தை அடிப்படையாக கொண்டு இது செய்லபடுகிறது. லிங்க்ட் இன் உறுப்பினர்கள் இந்த தளத்தின் மூலம் தாங்கள் மதிய உணவு திட்டம் பற்றி தெரிவித்தால் அதனடிப்படையில் உங்கள் வலைப்பின்னலில் இருப்பவர்கள் யாரேனும் அருகாமையில் உள்ளனரா என்று தேடிப்பார்த்து சொல்லி விடுகிறது.
உடனே அந்த நப்ரை தொடர்பு கொண்டு உணவு சாப்பிட சம்மதாமா என்று அழைப்பு விடுக்கலாம்.நேரம் மற்றும் இடத்தையும் விவாதித்து முடிவு செய்து கொள்ளலாம்.இருவருக்கும் உடன்பாடு என்றால் சேர்ந்து சாப்பிட்டு மகிழலாம்.
தொழில்முறையிலான வலைப்பின்னலில் இருப்பவர்கள் என்பதால் பேசுவதற்கும் பொதுவான விஷயங்கள் இருக்கும்.எனவே சுலபமாக உரையாடலை துவக்கி சரளமாக தொடரலாம்.
அவரவர் தேவை மர்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப இந்த சந்திப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.வேலையில் இருப்பவர் என்றால் வேறு நல்ல வேலைக்கான வாய்ப்பு பற்றி அறிந்து கொள்ளலாம்.வேலைக்கு ஆள் பிடிப்பவர் என்றால் தகுதியான நபர்களுக்கு வலைவீசி பார்க்கலாம்.தொழில் மூனைவோர் என்றால் புதிய வார்த்தக வாய்ப்பை நாடலாம்.ஆலோசகர்கள் என்றால் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி பயன் பெறலாம்.
இன்னும் எத்தனையோ விதங்களில் இந்த சந்திப்புகளை பயன்ப்டுத்தி கொள்ள முடியும்.உங்கள் நண்பர்களும் இந்த சேவையை பயன்படுத்தும் பட்சத்தில் அவர்களிடம் இருந்தும் கூட உங்களுக்கு மதிய உணவுக்கான அழைப்பு வரலாம்.
நட்புகு நட்பும் வலரும்.புதிய வாய்ப்புகளும் உருவாகும்.அது தான் இந்த சேவையின் சிறப்பு.
மதிய உணவின் இந்த மகத்துவத்தை எல்லாம் விளக்கி கீத் பெராசி என்பவர் நெவர் ஈட் அலோன் என்னும் புத்தகத்தை எழுதியுள்ளார்.இந்த புத்தகம் தந்த உந்துலால் தான் லஞ்ச் மீட தளத்தை உருவாக்கியதாக அதன் நிறுவனர் குறிப்பிட்டுள்ளார்.
இணையதள முகவரி;http://lunchmeetapp.com/