திரைப்பட ரசிகர்களை பொருத்தவரை புதிதாக என்ன படம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள்.இதற்காக என்று இணையதளம் இருக்கிறது. அதே போல புத்தக பிரியர்கள் என்றால் என்ன புத்தகம் புதிதாக வெளியாகியுள்ளது என்று தெரிந்து கொள்ள விரும்புவார்கள்.இசை பிரியர்களை பொருத்தவரை புதிய ஆல்பங்களை அறிய விரும்புவார்கள்.இவற்றுக்கும் இணையதளங்கள் இருக்கின்றன.
திரைப்பட ரசிகரோ,புத்தக பிரியரோ,இசை பிரியரோ யாராக இருந்தாலும் அவர்கள் எல்லோர் கேள்விக்கும் அழகாக பதில் சொல்கிறது வாட்ஸ் அவுட் இணையதளம்.
ஆம் இந்த தளம் புதிதாக வெளியாகியுள்ள படங்கள்,பாடல்கள்,புத்தகங்கள் தொடர்பான தகவல்களை ஒரே இடத்தில் வழங்குகிறது. இவற்றோடு புதிய வீடியோ கேம் வெளியீட்டு தகவலகளையும் வழங்குகிறது.
படம்,பாட்டு,புத்தகம் என எல்லா தகவல்களும் ஒரே பக்கத்தில் இருப்பதோடு எல்லாமே மிக எளிமையாக இருக்கின்றன.அதிகப்படியான தகவல்களோ அநாவசிய விவரங்களோ கிடையாது.எப்போது வெளியாயின எங்கே கிடைக்கும் அல்லது எங்கே பார்க்கலாம்,கேட்கலாம் போன்ற விவரங்கள் மட்டுமே நச் என இடம் பெற்றுள்ளன.
திரைப்படங்கள் திரையரங்குகள் மற்றும் படங்கள் என இரண்டு தலைப்புகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.எல்லாவற்றிலும் வரிசையாக படத்தின் போஸ்டர்கள் வரவேற்கின்றன.திரையரங்க பகுதியில் உள்ள படத்தை கிளிக் செய்தால் அந்த படம் வெளியான தேதி வந்து நிற்கிறது.அதோடு அந்த படத்தின் டிக்கெட்டை வாங்குவதற்கான இனைப்பு மற்றும் டிரைலரை காண்பதற்கான இணைப்பு இடம் பெறுகிறது .அவ்வளவு தான்.
இதை தவிர கடந்த வாரம்,இரண்டு வார்த்திற்கு முன்,கடந்த மாதம் வெளியான படங்களை அடையாளம் காட்டும் வசதியும் இருக்கிறது.அடுத்த வாரம் வரும் படங்களையும் அறியலாம்.
அதே போல புத்தக பகுதியில் புத்தக அட்டையில் கிளிக் செய்தால் அவை வெளியான நாள் மற்றும் அமேசானில் வாங்குவதற்கான இணைப்பு இருக்கிறது.பாடல்கள் ,மற்றும் வீடியோ கேமிலும் இதே போன்ற இணைப்புகள் வரவேற்கின்றன.
இமெயில் முகவ்ரியை சமர்பித்தால் புதிய படங்கள் அல்லது பாடல்கள் ,புத்தகங்கள் வெளியாகும் போது தகவல் தெரிவிக்கும் சேவையையும் இந்த தளம் வழங்குகிறது.
படங்களை எடுத்து கொண்டால் மூவி டேட்டாபேஸ் விவரம்,விமர்சனம், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் குறிப்புகள்,ரசிகர்களின் ரேட்டிங் என விலாவரியாக தகவல்களை திரட்டித்தந்து திணறடிக்கும் தளங்கள் எல்லாம் இருக்கின்றன.பாடல்களூக்கும்,புத்தகங்களுக்கும் விதவிதமான வலைப்பின்னல் சேவைகள் இருக்கின்றன.எல்லா தளங்களுமே விவரங்கள் மூச்சு முட்ட வைத்துவிடும்.
ஆனால் வாட்ஸ் அவுட் தளம் அப்படியெல்லாம் திணற வைக்காமல் என்ன படம் ,என்ன புத்தகம்,என்ன பாடல் புதிதாக வந்துள்ளன என்பதை மட்டும் அடையாளம் காட்டி ஒதுங்கி கொள்கிறது.இந்த எளிமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
வாட்ஸ் அவுட அமெரிக்க தளம் என்பது மட்டும் தான் கொஞ்சம் ஏமாற்றம்.நம்மூருக்கும் இதே போன்ற தளம் உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்?
இணையதள முகவரி:http://whatsoutt.com/