இன்றைய முன்னணி நாற்பது பாடல்களை கேட்டு ரசிக்கலாம் வாங்க என்று அழைப்பு விடுக்கிறது டாப்பார்டி.இட் இணையதளம்.அதற்கேற்ப 40 முன்னணி பாடல்களை முகப்பு பக்கத்திலேயே பட்டியலிடுகிறது.
பாடல்களோ புத்தகங்களோ திரைப்படங்களோ பொதுவாக டாப் டென் பட்டியல் வெளியிடப்படுவது தான் வழக்கம்.டாப் டென்னை விட்டால் டாப் 100 க்கு போய்விடுவார்கள்.ஆனால் டாப் 40 என்ன கணக்கு என்று புரியவில்லை.
டாப் 40 என்பது கொஞ்சம் விநோதமாக இருந்தாலும் இந்த தளம் முன்னணி பெரும் பாடல்களை தேர்வு செய்யும் விதம் சுவாரஸ்யமாகவே உள்ளது. நேயர்கள் கேட்டு ரசிக்கும் பாடல்களை டிவிட்டர் மூலம் கண்டறிந்து அதனடிப்படையில் முன்னணி பாடல்களை பட்டியலிடுகிறது.
இப்படி ஒவ்வொரு தினமும் நேயர்கள் மத்தியில் முன்னிலை பெறும் பாடல்களின் பட்டியலை நாள்தோறும் வெளியிட்டு வருகிறது.எனவே தினமும் புதிய பட்டியலை பார்க்கலாம்.
பட்டியலில் உள்ள பாடலை கிளிக் செய்தால் அதனை கேட்க துவங்கிவிடலாம்.
பட்டியல் என்றாலே சர்ச்சைக்குறியவை தான்.ஆனால் இந்த பட்டியல் மிகவும் ஜனநாயகமயமானவை என்று சொல்லலாம்.காரணம் இந்த பட்டியல் தனிநபராலோ குழுவாலோ தேர்வு செய்யப்படாமல் தானாக தேர்வு செய்யப்படுவது தான்.
அதாவது டிவிட்டர் பயனாளிகள் தாங்கள் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் பாடல் பற்றி பகிர்ந்து கொள்ளும் தகவலின் அடிப்படையில் பாடல்கள் தேர்வு செய்யப்படுகின்றன.
பாப் இசை பிரியர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தக்கூடிய தளம் தான்.இந்த பட்டியலில் எப்போதாவது நம்மூர் பாடல்கள் இடம் பெற வாய்ப்புண்டா என்று தெரியவில்லை.ஆனால் டிவிட்டரில் பகிரப்படும் தமிழ் பாடல்களை கொண்டு நாமும் ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.
இணையதள முகவரி

0 Comments on “டிவிட்டர் பரிந்துரைக்கும் பாடல்கள்.”
வின்மணிராம்
தாங்கள் பன்முகத் திறமை படைத்தவர். நீண்ட நாளாக எப்படியும் தொடர்புகொள்ள முயற்சிக்கின்றேன். இயலவில்லை. நான் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியன். இன்று டிவிட்டர் ஆரம்பித்துள்ளேன். தங்கள் உதவி தேவை. 9444297788. ச.இராமசாமி..
cybersimman
வாழ்த்துக்கள்.என்ன உதவி தேவை நண்பரே.