உலகிலேயே அழகான இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.ஆனால் இண்டெர்நெட்டிலேயே அழகான இடம் இது என்கிறது அந்த இணையதளம்.அதன் பெயரும் அதே தான்.இண்டெர்நெட்டின் மிகவும் அழகான இடம்.அதாவது தி நைசஸ்ட் பிலேஸ் ஆன் த நெட்.இது தான் அந்த தளத்தின் முகவரி.
அழகான இடம் என்றவுடன் பிரமிக்க வைக்கும் இயற்கை எழில் காட்சிகளோ அல்லது அழகிய தேவதைகளின் புகைப்படங்களோ குவிந்திருக்கும் என்று நினைக்க வேண்டாம்.
இந்த தளத்தின் தோற்றத்தில் அழகு கிடையாது ஆனால் அதன் நோக்கம் மிகவும் அழகானது.அதாவது இந்த தளத்திற்கு வருபவர்கள் எல்லாம் இனிமையாக உணர வேண்டும் என்பது தான் அதன் நோக்கம்.அதனை நிரைவேற்றும் வகையில் இணையவாசிகளை இரு கரம் நீட்டு வரவேற்கிறது.
நமது வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் மகிழ்ச்சி பொங்க இரு கரம் நீட்டி வரவேற்ப்போம் அல்லவா,அதே போல இந்த தளத்தில் நுழைந்ததும் கட்டியணைக்க தயாராக இருப்பவர் போல இருகரம் நீட்டி வரவேற்பவரின் வெப்கேம் காட்சி தோன்றுகிறது.
வெப்கேமில் தோன்றும் நபர் வாங்க வாங்க என்று சொல்பவர் போல இரு கரத்தையும் நீட்டி வரவேற்பதை பார்க்கும் போது கொஞ்சம் பரவசம் உண்டாகும்.இத்தகைய இதமான உணர்வை ஏற்படுத்துவதற்காகவே ஜெப் லேம் அன்னும் அமெரிக்கர் தனது நண்பரோடு சேர்ந்து இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.
விளமப்ர நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் லேம் ஒரு நாள் மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறார்.அப்போது தான் அவருக்கு அந்த யோசனை உண்டானது சோர்வாக இருக்கும் போது நண்பர்கள் தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்துவது போல தட்டிக்கொடுக்க ஒரு இணையதளம் இருந்தால் என்ன என்பது தான் அந்த யோசனை.
அந்த இணையதளம் எல்லோரையும் வரவைத்து அரவனைக்க வேண்டும் என்டு நினைத்த அவர் தனது நண்பரோடு சேர்ந்து காமிராவை தூக்கி கொண்டு அரவனைத்த படி போஸ் கொடுக்க கூடியவர்களை தேடத்துவங்கினார்.இந்த ஐடியா ஏற்கப்படுமா என்ற தயக்கத்தை மீறி பலரும் அவருக்கு உற்சாகமாக் போஸ் கொடுத்தனர்.
அந்த காட்சிகளை தான் தளத்தில் இடம் பெறச்செய்துள்ளார்.தளத்தில் நுழைநதுமே அழகிய கடற்கரை பின்ன்ணியில் ஒருவர் இரு கரம் நீட்டி வரவேற்று உற்சாகம் அளிக்கிறார்.
நண்பன் படத்தின் ஆல் ஈஸ் வெல் போல வசூல் ராஜாவின் கட்டுப்பிடி வைத்தியம் போல சக மனிதர்களை அன்பால் உற்சாகம் கொள்ள வைக்க முயல்கிறது இந்த தளம்.
இந்த தளத்தை பார்த்து ரசித்த பலர் கேட்காமலேயே தாங்கள் இரு கரம் நீட்டி ஆரத்தழுவ தயாராக இருப்பது போன்ற காட்சிகளை சமர்பிக்கத்துவங்கி விட்டனராம்.இந்த எதிரபாராத வரவேற்பை அடுத்து இப்போது தளத்தில் மற்றவர்களும் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் வெப்கேம் காட்சிகளை சம்ப்ர்பிக்கும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இணையதள முகவரி;http://thenicestplaceontheinter.net/
———–
அன்பைவெளிப்படுத்தி மனித நேயத்தை வளர்க்கும் இத்தகைய முயற்சிகள் இண்டெர்நெட்டில் புதிததல்ல.அறிமுகம் இல்லாதவர்களை கட்டியணைத்து அன்பின் மொழியை சொல்ல ஜூவான் பற்றிய இந்த பதிவு அதற்கான அழகான உதாரணம்.

0 Comments on “இரு கரம் நீட்டி அழைக்கும் இணையதளம்.”
sivaparkavi
சூப்பர் அப்பு…
http://sivaparkavi.wordpress.com/
sivaparkavi